

Post No. 9704
Date uploaded in London – –8 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
CERVANTES 1547-1616

மிகேல் டெ செர்வான்டிஸ் MIGUEL DE CERVANTES SAAVEDRA ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர். DON QUIXOTE என்பது இவர் எழுதிய புகழ்பெற்ற கதை.
செர்வான்டிஸ் (CERVANTES) இன் தந்தை ஊர் ஊராகச் சென்று மருத்துவ வேலை செய்து வந்தார். இதனால் அவர் அரிதாகவே பள்ளிக்கூடம் சென்றார். ஆனால் அவருக்கு படிப்பில் பெரும் ஆர்வம். தனக்குத்தானே ஆசிரியராக இருந்து கற்றார்.
செர்வான்டிஸ் 22 வயதில் ரோம் நகருக்குச் சென்றார். அங்கு படைவீரராகச் சேர்ந்து துருக்கியர்களை எதிர்த்து போரிட்டார். இந்தப்போரில் இருமுறை உடலில் காயங்கள் ஏற்பட்டன. கிட்டத்தட்ட இடது கையை இழந்தார். ஸ்பெயினுக்குத் திரும்புச் செல்கையில் இவரது கப்பலை மூர் இனத்தவர்கள் கைபற்றினர். 5 ஆண்டுகளுக்கு இவர் கைதியாக இருந்தார். இறுதியில் இவரது குடும்பத்தினர் தேவையான பணத்தை சம்பாதித்து இவரை மீட்டு வந்தனர்.
ஸ்பெயின் திரும்பியபோது இவருக்கு வயது 30. கையில் ஒரு பைசா காசு இல்லை. எழுத்தின் மூலம் வயிற்றுப் பிழைப்பு நடத்த முடிவு செய்தார். மூன்று நாடகங்கள் எழுதினார். ஆனால் கிடைத்த பணமோ மிகமிகக் குறைவு. பின்னர் திருமணம் செய்து கொண்டார்.
ஒரு வயிற்றுக்கே சோறில்லாமல் அலைந்த இவர் இப்போது 2 வயிறுகளுக்கு எங்கே போவார்? போதாக்குறைக்கு ஒரு போர்ச்சுகீசியப் பெண்ணையும் காதலித்தார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கவே அதையும் செர்வான்டிஸ் வளர்த்து வந்தார்.
வறுமை அவரை வாட்டவே தொழிலை மாற்றினார். இங்கிலாந்தின் மீது படை எடுக்கப் புறப்பட்ட ஸ்பானிய கடற்படைக்கு உணவு மதுபானம் அனுப்புவது இவரது தொழில். இதில் சிறிது பணம் கிடைத்தாலும் இவரது வங்கி திவாலகவே கிடைத்த பணமும் போய்விட்டது.
தென் அமெரிக்க கண்டத்திற்குப் புறப்பட எண்ணினார். இதற்காக காத்திருந்த காலத்தில் புத்தகம் எழுதினார். வீரம், காதல் ஆகியவற்றை இவர் நையாண்டி செய்து எழுதிய டான் க்விக்ஸாட் நகைச்சுவை நாவலாகப் புகழ்பெற்றது. இறுதிவரை தென் அமெரிக்கா செல்லும் திட்டம் நிறைவேறவே இல்லை. டான் க்விக்ஸாட் (DON QUIXOTE ) எழுதி முடித்த ஓராண்டில் அவரது கதையும் முடிந்தது.



tags- Cervantes,,செர்வான்டிஸ்

–subham–