
Post No. 9720
Date uploaded in London – – –12 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கடவுள் எங்கே? – 2
ச.நாகராஜன்
கடவுள் இன்றி எதுவும் இல்லை!
Bereft of God no Self exists,
Bereft of knowledge no world exists,
Sat and Asat in God exists,
In the heart of man or beast God exists!
Call God by any name
Worship God in any form,
Remember Him by any name,
He is in all forms.
All goodness is God,
All perfection is God,
All purity is God,
All love is God,
All unselfishness is God
கஸ்தூரி மான் ஒன்று அந்த கஸ்தூரி வாசனை எங்கிருந்து வருகிறது என்று எங்கெங்கோ தேடி அலைந்தது. அதற்குள்ளிருந்து தான் அந்த வாசனையே வருகிறது என்று அதற்குப் புரியவில்லை. அது போலவே, கடவுளைத் தேடி எங்கெங்கோ அலைந்தேன். அட, அவன் என் உள்ளுக்குள்ளேயே இருக்கிறானே! அது தெரியாமல் அலைந்தேனே, இன்று உணர்ந்தேன் உண்மையை! அவன் அருளாலே அவன் தாள் பணிந்தேன்.
As a foolish deer in search of her Dear,
I wandered in wilderness far and near,
Her Dear was her perfume within,
By His grace I found it within
He knocks at your door, awake and arise,
God pining for you! Have you no surprise,
You will never regain what you are missing,
It is the misfortune to miss His sweet kissing.
வீடு தேடி வந்து கதவைத் தட்டும் கடவுளைத் திறந்து வைத்தால் தானே காண முடியும்! மனம் என்னும் கதவை அகலத் திறந்து விடு! தரிசனம் கிடைக்கும்!
Be like a God and commune with God,
He is sweet joy pure as Gold,
God of all religions is one and the same,
He is only one though various are His names.
ஏகம் ஸத்; விப்ரா: பஹுதா வதந்தி என்கிறது வேதம். உண்மை ஒன்றே; அதை அறிஞர்கள் பலவாறாக அழைக்கின்றனர்!
God in diversity is man,
Man in unity is God,
God plus Ego is man,
Man minus Ego is God
இங்கு கவிஞர் ஒரு அழகிய ஃபார்முலாவைத் தருகிறார்.
கடவுள் + அஹங்காரம் = மனிதன்
மனிதன் – அஹங்காரம் = கடவுள்.
பொருள் பொதிந்த உண்மை அல்லவா இது!
God is goodness manifested,
God is truth perfected,
God is love in life,
God is unselfishness in disguise,
God is unity in diversity,
God is grace in adversity.
Praise God by any means; He will hear,
Worship God in any form; He is near,
Remember God constantly, He is dear,
He is everywhere, So have no fear!
To see God is to be God,
Because He alone is His measuring rod,
The mole and the mountain bear His image,
Even an atom conveys His message.
Zeroes have multiplying power with one at their back,
Without one, any amount of zeroes have no back,
Zeroes are nothing by themselves,
Zeroes with one have all – the power in themselves.
கடவுள் இல்லாமல் மனிதன் பூஜ்யம் தான். கடவுளுக்குப் பக்கத்தில் இருந்தால் அவன் மதிப்பே தனி; அதிகம் தான்!
God has no shape and form,
Still He is in every shape and form,
Shapes and forms do not exist by themselves,
For are they not projections of our ownselves
Hari Kishandas Aggarwal இயற்றிய Quieter Moments நூலிலிருந்து 12 verses மேலே தரப்பட்டுள்ளன.
19-10-1966 அன்று எனது நோட்புக்கில் இவை அனைத்தையும் எழுதி வைத்துள்ளேன் – ஏனெனில் இதை எங்கே, எப்படி வாங்குவது என்று அந்தக் காலத்தில் தெரியாததால்! காகிதம் பழுப்பேறி உதிர ஆரம்பிக்க, எழுத்துக்கள் மங்கலாகப் போக, இதை அவசியம் பாதுகாக்க வேண்டும் என்ற நிலையில் இதை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எளிய சொற்களில் அருமையான கவிதைகள்! வாழ்க ஹரி கிஷன்தாஸ் அகர்வால்!
*** ‘கடவுள் எங்கே’ நிறைவுறுகிறது

tags–‘கடவுள் எங்கே 2