ஆங்கில எழுத்தாளர் ஜொனாதன் ஸ்விஃப்ட் (Post No.9724)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9724

Date uploaded in London – –13 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

JONATHAN SWIFT

(1667 – 1745)

ஆங்கில இலக்கிய உலகில் தோன்றிய ——- அங்கத (SATIRIST) எழுத்தாளர்களில் முதன்மையாக நிற்பவர் ஜொனாதன் ஸ்விஃப்ட்  JONATHAN SWIFT.

          அயர்லாந்தின் தலைநகரம் டப்ளினில் இவர் பிறந்தாலும் இவரது பெற்றோர் ஆங்கிலேயர்கள்தான். இவர் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இவரது தந்தை இறந்தார். இவரது தாயார் வறுமையில் வாடியதால் JONATHAN SWIFTஇன் இளமைக்காலம் கடினமாக இருந்தது.

     20 வயதானபோது ஸ்விப்ட் இங்கிலாந்த்துக்குச் சென்று SIR WILLIAM TEMPLEக்கு செயலராக அமர்ந்தார். அங்கு பணிபுரியும் வேளையில் சர் வில்லியம்மின் மகள் எஸ்தர் ஜான்சனைக் (Esther Johnson) கண்டு ,  கண்டு காதல் கொண்டார் . அவளு க்காக நாள்தோறும் நாட்குறிப்பேடு எழுதுவதுண்டு. இந்தக் காதல் கடிதங்களை அவர் Journal to Stella என்று அழைத்தார். காதலிக்கு அவர் சூட்டிய புனைப்பெயர் — ரஹசியப் பெயர் ஸ்டெல்லா.

     1694-ஆம் ஆண்டில் JONATHAN SWIFT அயர்லாந்துக்குத் திரும்பினார். ஒரு சிறிய பாரிஷில் CURATE ஆனார். பின்னர் அயர்லாந்தின் LORD DEPUTYக்கு CHAPLAIN ஆனார். இதற்குப் பின்னர் ST PATRICK’S கதிட்ரலுக்கு DEANஆகப் பொறுப்பேற்றார்.

ஐரிஷ்காரர்களை ஆங்கிலேயர்கள் எப்படி அடக்கி ஒடுக்குகிறார்கள் என்பது குறித்து பல துண்டு பிரசுரங்களை  எழுதி வெளியிட்டார். பின்னர் மீண்டும் இங்கிலாந்துக்கு வந்து பல அரசியல் பிரசுரங்களை வெளியிட்டார். இது அவரது பெயரைப் பலருக்கு பறை சாற்றிய போதிலும் முன்னேற்றம் காண உதவவில்லை. ஏமாற்றமடைந்த JONATHAN SWIFT இனி திரும்பிவருவதில்லை என்ற முடிவுடன் அயர்லாந்துக்கே திரும்பிச் சென்று எஸ்தர் ஜான்சனை மணம் முடித்தார். இது ஒரு விநோதமான திருமணம். – அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்ததே இல்லை!

இவருடைய புகழ்பெற்ற நூல் கல்லிவரின் பயணங்கள் GULLIVER’S TRAVELS. இதை இவர் எழுதியபோது இவருக்கு வயது ஏறத்தாழ 60! விநோதமான கற்பனை உலகில் ஒரு மனிதன் செய்யும் பயணம் இது. மேம்போக்காகப் பார்த்தால் ஏதோ சிறுவர்  கதைபோலத் தோன்றும் . இது ஒரு சிலேடை நூல்  மனிதன் மனிதனுக்கு இழைக்கும் கொடுமைகளை அவர் கேலியும் கிண்டலுமாகச்  சித்தரிக்கிறார். மனித சுபாவங்களை உருவகமாகச் சித்தரிக்கும் அங்கதம் இது .

இவருக்கு தாம் பைத்தியமாகிவிடுவோமோ என்ற அச்சமும் கவலையும் இருந்தது. கடைசி காலத்தில் அவரது அச்சம் உண்மையாகிவிட்டது. ஒரு சிறுகுழந்தை போல நடக்கத் தொடங்கினார். இவர் இறந்த பின்னர் டப்ளின் ST பாட்ரிக் கதிட்ரலில் அடக்கம் செய்யப்பட்டார்.

–subham —

tags- ஜொனாதன் ஸ்விஃப்ட், Jonathan Swift, Gulliver’s Travels

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: