


Post No. 9736
Date uploaded in London – –15 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆங்கில புதின எழுத்துலகில் புதுமை படைத்தவர்; பெண்ணிய எழுத்தாளர்களில் முன்னணியில் நின்றவர். சிந்தனை ஓட்டத்தின் மூலம் கதைகளை முன் வைத்தவர். மன நோயினால் ஆற்றில் மூழ்கி இறந்த ஆங்கில எழுத்தாளர்.
VIRGINIA WOOLF வர்ஜீனியா வூல்ப்
D O B பிறந்த தேதி 25 ஜனவரி 1882
D O D இறந்த தேதி 28-3-1941
ஆங்கில நாவல் ஆசிரியை, விமர்சகர், பத்திரிகையாளர்
ப்ளூம்ஸ்பரி குழு எனப்படும் எழுத்தாளர் கலைஞர் அணியின் நிறுவனர் BLOOMSBURY GROUP OF WRITERS AND ARTISTS; ஒரு கதா பாத்திரம் எண்ணும் எண்ணத்தின் மூலம் கதையை வழங்கும், விரித்துப் படைக்கும், உத்தியைக் STREAM – OF – CONSCIOUSNESS METHOD கையாண்டவர்.
இலக்கிய ரசனை மிக்க குடும்பத்தில் இவர் பிறந்த போது இடப்பட்ட பெயர் அடிலைன் வர்ஜீனியா ஸ்டீபன் . முப்பது வயதான போது சமூக சீர்திருத்த வாதியான லியோனார்ட் வூல்ப்பை மணந்தார் .முதல் நாவல் ‘வாயேஜ் அவுட்’டை வெளியிட்டார்.அப்போதே அவருக்கு அடிக்கடி மன நோய் ஏற்படுவதுண்டு .1917–ல் கணவரும் அவரும் சேர்ந்து ஹோகார்த் பிரஸ் எனப்படும் வெளியீட்டு நிறுவனத்தை ஸ்தாபித்து
டிஎஸ்.எலியட் போன்றோரின் கவிதைகளை வெளியிட்டனர்.
நாற்பது வயதானபொழுது வூல்ப் எழுதிய ‘ஜேக்கப்ஸ் ரூம்’ நாவலில் சிந்தனை ஓட்ட உத்தியைக் கடைப்பிடித்தார்.பின்னர் வந்த புதினங்களிலும் இந்த எண்ண ஓட்ட உத்தி தொடர்ந்தது.
ஆர்லாண்டோ நாவலில் ஒரே கதா பாத்திரம் பல நூற்றாண்டுகள் வாழ்ந்து ஆணாகவும் பெண்ணாகவும் மாறி மாறித் தோன்றும் புதுமையைக் காணலாம் . இவருடை ய பாணி (Style) இருபதாம் நூற்றாண்டின் புதினங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தின.
தனது நாவல்களில் பெண்ணியக் கொடியையும் உயர்த்திப் பிடித்தார். ஆண் ஆதிக்க உலகில் பெண்கள் படும் கஷ்ட நஷ்டங்களை ‘ஏ ரூம் ஆப் ஒன்ஸ் ஓன்’ என்ற நாவலில் படம்பிடித்துக் காட்டினார். கடைசி நாவல் எழுதிய பின்னர் கடும் மன நோயில் சிக்கினார். ஆற்றில் விழுந்து இறந்தார் . அவருடைய கட்டுரைகள், நாட் குறிப்பேடு ஆகியனவும் தனி புஸ்தகங்களாக வெளியாகியுள்ளன.
ஆங்கில நாவல் படிக்கும் எவரைக் கேட்டாலும் ‘ஒரிஜினல்’ பெண் எழுத்தாளர் வர்ஜீனியாதான் என்று சொல்லுவர் .ஆனால் இவரை குறை சொல்லுவோர், இவருடைய புதினங்களில் இலக்கணப் பிழைகள் மலிந்துள்ளதாகவும் ஒரு வாக்கியம் கூட இலக்கணச் சுத்தமாக இராதென்றும் செப்புவர்.
பெண்ணிய ஆராய்சசியாளருக்கு இவர் நிறைய படைப்புகளை விட்டுச் சென்றுள்ளார். வூல்ப்பின் கடிதங்கள் ஆறு தொகுதிகள் டயரிகள் 5 தொகுப்புகள் , அவரை அறிந்தவர் எழுதிய நினைவு மஞ்சரிகள் என நிறைய படிப்பதற்கு உள்ளன. நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இத்தகைய சிந்தனை மலர்ந்ததால் இவர் புகழ் நீடித்தோங்கும் என்பதில் ஐயமில்லை.
xxx
எழுதிய நூல்கள்
1915 – த வாயேஜ் அவுட் THE VOYAGE OUT
1919 நைட் அண்ட் டே NIGHT AND DAY
1922 ஜேக்கப்ஸ் ரூம் JACOB’S ROOM
1925 மிஸிஸ் டல்லோவே MRS DALLOWAY
1927 டு தி லைட் ஹவுஸ் TO THE LIGHT HOUSE
1928 ஆர்லாண்டோ ORLANDO
1929 எ ரூம் ஆப் ஒன்ஸ் ஓன் A ROOM OF ONE’S OWN
1931 த வேவ்ஸ் THE WAVES
1937 தி இயர்ஸ் THE YEARS
1941 பிட்வீன் தி ஆக்ட்ஸ் BETWEEN THE ACTS.

–subham–
tags- ஆங்கில நாவல் ஆசிரியை, வர்ஜீனியா வூல்ஃப் , சிந்தனை ஓட்டம், எண்ண ஓட்டம்






