

Post No. 9742
Date uploaded in London – –16 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.

குடி போதையில் இறந்த கவிஞர் டிலன் தாமஸ்
டிலன் தாமஸ் DYLAN THOMAS ஆங்கில மொழியில் எழுதிய வெல்ஷ் (வேல்ஸ் பிரதேச) கவிஞர். குடி போதையினால் 39 வயதிலேயே இறந்தார் ஆயினு ம் அவர்தம் படைப்புகள் இன்றும் பட்டொளி வீசிப் பறக்கின்றன.
ஐக்கிய சாம்ராஜ்யம் United Kingdom எனப்படும் கிரேட் பிரிட்டனில் இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து , வடக்கு அயர்லாந்து என்ற நான்கு பகுதிகள் உண்டு. வேல்ஸ் என்பது தென் இந்தியாவின் மலையாள பிரதேசம் போன்றது . அங்கிருந்த மக்கள் Welsh வெல்ஷ் மொழி பேசுவார்கள். இப்போது அங்கும் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்துகிறது.
வெல்ஷ் புலவர்களில் புகழ்பெற்றவர் என்பதோடு இருபதாம் நூற்றாண்டின் ஆங்கிலப் புலவர்களில் முன்னனியில் நின்றவர் என்ற பெருமையும் உடையவர் டிலன் தாமஸ்.
அவர் நாடகங்களையும், சிறு கதைகளையும் எழுதினார்.
பிறந்த தேதி – 27-10-1914
இறந்த தேதி – 9-11-1953
வாழ்ந்த ஆண்டுகள் – 39
டிலன் தாமஸ், ஸ்வான்ஸீ SWANSEA நகரில் பிறந்தார். இவரது எழுத்துக்களில் வெல்ஷ் பிரதேசத்தின் இயற்கை அழகு காணப்படும். மேலும் ஆங்கிலத்தில் வெல்ஷ் மொழியின் இனிமை எதிரொலிக்கும் இதற்குக் சான்று பகர்வது இவரது Under the Milkwood அண்டர் தி மில்க் வுட் என்ற ரேடியோ நாடகம் ஆகும் . ஒரு சிறிய கடலோர வேல்ஸ் நகரின் தாக்கம் இதில் மிளிரும். எலிசபெத் டெய்லர், ரிச்சர்ட் பர் ட்டன் நடித்த திரைப்படமாக இது 1971ல் வெளியானது .
ஸ்வான்ஸீ கிராமர் ஸ்கூலில் SWANSEA GRAMMAR SCHOOL இவரது தந்தை ஆங்கில மொழி கற்பித்தார். டிலனும் அங்கே படித்தார். பள்ளிக்கூட பத்தி ரிக்கையை நடத்தி அதில் கவிதை எழுதினாலும் படிப்பில் பட்டு மந்தம் .16 வயதில் பள்ளிப் படிப்புக்கு ‘குட்- பை’ சொல்லிவிட்டு ஒரு பத்திரிகையில் ரிப்போர்ட்டர் ஆனார். அதிலும் ஆள் தேறவில்லை. அந்த வேலைக்குப் பின்னர் முழு நேர கவிஞர் ஆனார். இருபது வயதிலேயே முதல் கவிதை நூல் வெளியானது. இந்த நேரத்தில் லண்டனுக்குக் குடிபெயர்ந்தார். இதனால் இவர் புகழ் பரவியது.
1937-ல் கைடலின் மக்நமாரா CAITILIN MACNAMARA
என்ற பெண்ணை மணந்து வேல்சுக்குத் திரும்பினர் . அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. குடி போதையாலும் வறுமையாலும் திருமண வாழ்வு கரடுமுரடாக ஆனது .நண்பர்களிடம் நிறைய கடன் வாங்கினார்; அதைத் திருப்பிக் கொடுத்ததாக சரித்திரமே இல்லை.
இரண்டாவது உலக மஹா யுத்தம் வெடித்தது. ராணுவ சேவையில் சேராமலிருக்க உடல் நலத்தைக் காரணம் காட்டித் தப்பித்தார். ஆயினும் நாடக வசனங்களை எழுதி, ஒலிபரப்பி புகழ் அடைந்தார். பி.பி.சி. வானொலியில் இவரது நாடகம் ஒலிபரப்பாகியது . அமெரிக்காவுக்கு முதல் முறை சென்றபோது மகத்தான வரவேற்பு கிடைத்தது. இவரது கவிதைகளைக் கேட்க பெரிய கூட்டம் திரண்டது. பெண்கள் இவரைச் சுற்றி வட்டமிட்டனர். நாலாவது முறை அமெரிக்கப் பயணம் மேற்கொண்டபோது அதிகக்குடியினால் இறந்தார்.
இவரை மஹா மேதை என்று பலர் புகழ்ந்தாலும் பெரிய மோசடிக்காரன் என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. குடிபோதை விடுதிகளில் கோமாளி போல நடந்து கொண்டார். கிறுக்குத் தனமான செயல்களில் ஈடுபட்டு சர்க்கஸ் பஃ ப்பூன் போல நடந்தார். அந்தக் கால வெல்ஷ் ‘பாணர்’ (bards)களைப் போல தன்னையும் எதாவது ஒரு பிரபு ஆதரிக்க வேண்டும் எதிர்பார்த்தார் ; அது நடக்கவில்லை.ஜோக்குகள், கதைகளை சொல்லி காலம் கடத்தினார்.
கொஞ்ச காலத்துக்கு ‘ஜிப்ஸி’ நாடோடி போல ஊர் ஊ ராகத் திரிந்து வாழ்க்கை நடத்தினார்.
உலகப் போருக்குப் பின்னர் 1945 முதல் 1949க்குள் பி. பி. சி . ஒலி பரப்புக்கு 100 வசனங்களை எழுதினார். குடிபோதை காரணமாக அவருக்கு நிரந்தர வேலை கொடுக்க பி பி சி மறுத்தது.
நாலாவது முறை அமெரிக்காவுக்குச் சென்றபொழுது நிறைய விஸ்கி குடித்து நியூ யார்க் நகரில் கோமாவில் சிக்கி, பின்னர், இறந்தார் .
XXXX

படைப்புகள்
1934 – 18 கவிதைகள் EIGHTEEN POEMS
1936 – 25 கவிதைகள் TWENTY- FIVE POEMS
1939- தி மேப் ஆப் லவ் THE MAP OF LOVE
1940 – போர்ட்ரைட் ஆப் தி
ஆர்ட்டிஸ்ட் அஸ் எ யங் டாக்
PORTRAIT OF THE ARTIST AS A YOUNG DOG
1952- கலெக்டட் பொயம்ஸ் COLLECTED POEMS
1953- அண்டர் தி மில்க்வுட் UNDER THE MILKWOOD
இறந்த பின்னர் வெளியான படைப்பு –
அட்வெஞ்சஸர்ஸ் இன் தி ஸ்கின் ட்ரேட்
ADVENTURES IN THE SKIN TRADE




-subham–குடி போதை, இறந்த கவிஞர் , டிலன் தாமஸ்