உடலுக்கு மண் தேவையா? மண்ணின் மகத்தான சக்தி -2 (Post.9758)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9758

Date uploaded in London – –21 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

மணல் என்னும் மூலகத்தைப் பயன்படுத்தி பெண்கள் தங்கள் மார்பகங்களைப் பெரிதுபடுத்திக் கொள்வதை நேற்று கட்டுரையின் முதல் பகுதியில் கண்டோம். சிலிகோன் (SILICONES) எனப்படும் செயற்கை மார்பகங்கள் உடலுக்குள் ஒழுகினால் ஏற்படும் புற்றுநோய் முதலிய பிரச்சினைகள், வழக்கு வாய்தாக்களை உண்டாக்கி, கம்பெனிகளை திவால் ஆக்கியதால்,  சலைன் (SALINE) உப்புநீர்க் கரைசல் உடைய செயற்கை மார்பகங்கள் புழக்கத்துக்கு வந்தன. இவை உடைந்தோ பிரிந்தோ ஒழுகினாலும் சிலிகோன் போன்ற ஆபத்துக்கள் இதில் இல்லை.

மக்னீஷியம் சிலிகேட் உடைய ஆஸ்பெஸ்டாஸ் , புற்று நோயை உண்டாக்குவதால் மேலை நாடுகள் அதைத் தடை செய்ததையும் கண்டோம் .

இது தவிர  சிலிகோஸிஸ் (SILICOSIS) என்னும் ஒரு நோயும் இருக்கிறது; சுரங்கத் தொழிலார்கள், கல்லுடைக்கும் தொழிலில் உள்ளோர் ஆகியோருக்கு சிலிக்கோசிஸ் வரும். நுண்ணிய மணல் துகள் நுரையீரலில் படிந்து மூச்சு விடுவதை சிரமமாக்கும் நோய் இது.

சிலிகோன் (Silicone) என்னும் பொருளுக்கு வேறு சில பயன்களும் உண்டு. உடலில் இருந்து வெளியேறும் வாயுவைக்  (wind/ gas) கட்டுப்படுத்த சிலிகோன் மாத்திரைகள்  பயன்படும். நாம் சில வகைப் பொருட்களைச் சாப்பிட்டாலோ அல்லது வயிறு, குடலில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டாலோ இந்த வாயு (wind breaking)  உபாதை உண்டு. இதே போல பசுமாடுகளுக்கும் வரும். இவற்றைக் குணப்படுத்த சிலிகோன் உதவுகிறது. இந்த சிலிகோனை ப்ராஸ்டேட் கேன்ஸர் (Prostate cancer) எனப்படும் ஆண்களுக்கு வரும் புற்றுநோயைக் குணப்படுத்த பயன்படுத்தும் ஆய்வுகள்  சுவீடனில் நடைபெறுகின்றன.

***

பொருளாதார உபயோகங்கள்

சிலிகா எனப்படும் மணலினால் கிடைக்கும் பொருளாதார உபயோகங்கள் மிகவும் அதிகம். அவைகளைக் காண்போம் . அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதியில் மணல் என்னும் மூலகத்தை டிரான்சிஸ்டரில் பயன்படுத்தும் தொழில்நுட்பம் வளர்ந்தது. இத்தகைய டிரான்சிஸ்டர்கள் (Silicon  Chips)  நம் கம்ப்யூட்டருக்குள் உட்கார்ந்து கொண்டு மகத்தான வேலைகளை செய்கிறது. இது போன்ற புதுமையான கம்பெனிகள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வளரவே அந்த இடமும் அத்தொழிலும் சிலிகான் வாலி (SILICON VALLEY) என்ற பெயரைப் பெற்றது. இங்கு இந்தியர்கள் ஏரளாமானோர் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது

***

சூரிய ஒளித் தகடுகள் (Solar Panels)

இந்தியா போன்ற நாடுகளில் வெய்யிலுக்கு குறைவே இல்லை. அத்தகைய சூரிய ஒளியையும் வெப்ப சக்தியாக, மின்சார சக்தியாக, பயன்படுத்தும் தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருகிறது. சூரிய ஒளி விழும் இதயத்தில் சிலிகான் உடைய தகடுகளை (Solar Panels) வைத்தால் அவை நமக்கு மின் சக்தியையும், வெப்ப சக்தியையும் தரும் .அண்மைக்காலத்தில் கட்டப்படும் கட்டிடங்களின் கூரையில் சூரியத் தகடுகள் பொருத்தப்படுவதால்  காலை நேரத்தில் குளிப்பதற்கு வெண்ணீர் போடும் அவசியமே இல்லை. குளிர்காலத்தில் வீட்டை வெப்பமாக்கவும் இவை பயன்படும்; முதலில் மிகவும் விலை கொடுத்து வாங்க வேண்டியதை இப்போது மலிவு விலையில் விற்கின்றனர் . இந்தியாவில் தொலை தூர கிராமங்களிலும் மலை , காடுகளிடையே உள்ள குடிசைகளிலும் கூட சூரிய விளக்குகள், சூரிய அடுப்புகள் வந்துவிட்டன .

மணலை மிகவும் சுத்தபடுத்தி அத்துடன் வெவ்வேறு ரசாயனப் பொருட்களைக் கலக்கும்போது பல பயனுள்ள வசதிகள் கிடைக்கின்றன. சிலிகோன் பசை (putty) , சிலிகோன் ரப்பர் ஆகியன வீட்டுக்குள்ளேயே  பல இடங்களில் பயன்படுகிறது. கார்போரண்டம் (Carborundum)  என்ற வைரம் போன்ற கடினமான பொருள் சாண்ட் பேப்பர் (Sand Paper) என்னும் உப்புத் தாளில் பயன்படுகிறது .

சிமெண்ட்  மற்றும் கண்ணாடி செய்ய மணல் தேவைப்படுவதை எல்லோரும் அறிவர்.

குவார்ட்ஸ் (Quartz) எனப்படும் பொருள் கடிகாரங்கள், ரேடியோ , டெலிவிஷன் ஆகியவற்றில் அரிய வேலைகளை செய்கிறது

சோடியம் சிலிகேட் (Sodium Silicate) என்னும் பொருள் சுத்தப்படுத்தும் பவுடர்கள், திரவங்களில் (Detergents, Bleaching Powder) பயன்படுகிறது. எண்ணெய்க் கிணறுகளில் இருந்து உற்பத்தியை அதிகரிக்கவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

உலகெங்கிலும் மணல் இருந்தாலும் மற்ற ரசாயனப் பொருள்களுடன் கலந்து சிலிக்கேட் உப்புக்களாகக் கிடைக்கும் இடத்தில் அவற்றைத் தோண்டி எடுக்கும் சுரங்கப் பணிகளும் நடக்கின்றன.

இந்தியா இத்தாலி, ஆஸ்ட்ரியா , ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா , கனடா , அமெரிக்கா , பிரேசில் முதலிய நாடுகளில் டாக்Talc , மைக்கா Mica முதலிய ரூபங்களில் மணலின் உப்புக்கள் கிடைக்கின்றன. அகேட் , அமெதிஸ்ட் ஓபல் (Agate, Amethyst, Opal) முதலிய ரத்தினைக் கற்காளாகவும் தோண்டி எடுக்கப்படுகின்றன. மணலை ரசாயன முறையில் மற்ற உலோகங்களுடன் கலந்து கலப்பு உலோகம் (Alloy) தாயாரிக்கையில் சில சிறப்பு இயல்புகள், குணங்கள் ஏற்படுகின்றன .

***

மணல் என்னும் சிலிகா-வின் ரசாயன குணங்கள்

குறியீடு – Si எஸ் ஐ

அணு எண் -14

உருகு நிலை – 1410 டிகிரி C/ சி 

கொதி நிலை – 2355 டிகிரி C/ சி   –

மணல்= சிலிகன் டை ஆக்ஸைட் silicon di oxide

மூன்று ஐசடோப் உண்டு. ஆனால் கதிரியக்கம் கிடையாது.

–subham–tags- மண், மணல், சிலிக்கான் , குவார்ட்ஸ், சூரிய தகடு 

Leave a comment

Leave a comment