
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9750
Date uploaded in London – – –19 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
சூரியனை தினமும் துதிப்போர்க்கு ஆயிரம் ஜென்மங்களிலும் ஏழ்மை வராது!
ச.நாகராஜன்
குறிப்பு : (Eng Translation from : RSS Sanga Shaka book)
ஏகம் விஷரஸம் ஹந்தி சஸ்த்ரேணைகஷ்ச வத்யதே | சராஷ்ட்ரம் சப்ரஜம் ஹந்தி ராஜானாம் மந்த்ர விப்லவ: ||
விஷமானது ஒருவனைத் தான் கொல்லும்; ஆயுதங்களோ பல பேரைக் கொல்லும். ஆனால் தவறான முடிவை ஒரு அரசன் எடுத்தாலோ அல்லது அவனது அமைச்சர்கள் எடுத்தாலோ, அது ஒரு தேசத்தையும் அதில் வாழும் மக்கள் அனைவரையுமே அழித்து விடும்.
Poison kills but one person at a time while a weapon can destroy many more. Incorrect decisions by the king or by his ministers, by contrast, can destroy the entire nation and its citizens.
*
ஆதித்யஸ்ய நமஸ்காரம் யே குர்வந்தி தினே தினே | ஜன்மாந்தரஸஹஸ்ரேஷு தாரித்ர்யம் நோபஜாயதே ||
சூரியனை எவர் ஒருவர் போற்றித் தினமும் துதிக்கிறாரோ அவருக்கு ஆயிரம் ஜென்மங்களிலும் தரித்திரம் வராது. சூரியனைப் போலக் காலம் தவறாமல் கடமையைச் செய்வோர் ஒரு நாளும் ஏழையாக இருக்க மாட்டார்கள்.
Those who adore and worship the sun everyday will not inherit poverty over thousands of births. People who are punctual in their duties like the sun will never be poor.
*
ஜ்யேஷ்டத்வம் ஜன்மனா நைவ குணைர்ஜ்யேஷ்டத்வமுச்யதேI குணாத் குருத்வாமாயாதி துக்தம் ததி த்ருதம் கமாத் ||
முதன்மைத்தன்மை (ஜ்யேஷ்டத்வம்) என்பது பிறப்பினால் வருவது அல்ல; ஒருவனின் குணங்களினால் பெறப்படுவது அது. அது எப்படி பாலானது தயிராகவும் நெய்யாகவும் படிப்படியாக மாறுகிறதோ அதே போல (நல்ல) குணங்களினால் அடையப்படுவது அது.
Greatness is not ascribed at birth; it is rather acquired by qualities possessed by the individual. It increases progressively like the transformation of milk into yogurt, and ghee.
*
உத்யமேன ஹி சித்யந்தி கார்யணி ந மநோரதை: | ந ஹி சுப்தஸ்ய சிம்ஹஸ்ய ப்ரவிஷந்தி முகே ம்ருகா: ||
நல்ல விளைவுகள் தளராத முயற்சியினாலும் கடும் உழைப்பினாலுமே அடையப்படும். மான் சும்மா இருக்கும் சிங்கத்தின் வாயில் விழும் மானைப் போல பகல் கனவினா (மனோரததினால்) அல்ல.
Results are obtained by hard work and industry; not by daydreaming just as deer do not fall (willingly) into the mouth of the idle lion.
* ஸ்தானப்ரஷ்டா: ந ஷோபதே தந்தா: கேஷா நகா நரா: | இதி விஞ்ஞாய மதியான் ஸ்வஸ்தானம் ந பரித்யஜேத் ||
பற்கள், மயிர், நகங்கள், மனிதர்கள் அவை அவற்றின் உரிய இடங்களில் இல்லாத போது பிரகாசிப்பதில்லை. இந்தப் பழமொழியின் உண்மையை அறிந்த புத்திசாலிகள் தங்கள் இடத்தை அதாவது ஸ்வஸ்தானத்தை விட்டு ஒரு போதும் அகலக் கூடாது. Teeth, hair, nails, and men do not shine when not in their places. Knowing this adage, the wise should not leave their place or location.
* உதயே சவிதா ரக்தோ ரக்த:ஸ்சாச்தமயே ததா | ஸம்பத்தௌ ச விபத்தௌ ச மஹாமேகரூபதா || (மஹாபாரதம்)
சூரியன் உதய காலத்திலும் அஸ்தமன காலத்திலும் சிவப்பாகக் காட்சி அளிக்கிறான. அது போலவே மஹான்கள் நல்ல காலத்திலும் ஆபத்துக் காலத்திலும் ஒரே நிலையில் (உறுதியுடன்) இருக்கிறார்கள்.
**

TAGS- சூரியனை துதி, ஏழ்மை , வராது,