
பிரடெரிக் நீட்ஸே , கடவுள் பற்றி (GOD IS DEAD) இப்படிச் சொல்லலாமா? (Post No.9751)
Post No. 9751
Date uploaded in London – –19 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
கடவுள் செத்துப்போனான்’ ‘GOD IS DEAD’ என்றார் புகழ் பெற்ற ஜெர்மானிய தத்துவ ஞானி பிரெடெரிக் நீட்ஸே FRIEDRICH NIETZSCHE . கிறிஸ்தவ மதத்தையும் தாக்கினார். ஏன் ?
நீட்ஸே யார் ?
புகழ்பெற்ற ஜெர்மனி நாட்டு தத்துவ ஞானி (Phiosopher) , மொழியியல் (Philologist) அறிஞர்.
பிறந்த தேதி – 15 அக்டோபர் , 1844
இறந்த தேதி – 25 ஆகஸ்ட், 1900
வாழ்ந்த ஆண்டுகள் 55
நீட்ஸேயின் எழுத்துக்கள், படைப்புகள் மேலை நாட்டு அரசியல் மற்றும் இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின .
ஒரு சின்ன ஜெர்மானிய கிராமத்தில் நீட்ஸே பிறந்தார்.அவருக்கு 5 வயதானபோது தந்தை இறந்தார். இதனால் அவரது சகோதரியையும் அவரையும் தாயார் வளர்த்தார். அவர் பான் (BONN) நகர பல்கலைக்கழகத்தில் இறையியல் (THEOLOGY) படிப்பில் சேர்ந்தார். பின்னர் அதை விட்டு தத்துவம் (PHILOSOPHY) படிக்கச் சென்றார்.
நீட்ஸே அதி மேதாவி. 24 வயதிலேயே சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள பேஸல் (BAZEL) பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆனார் அப்போது பிரபல ஜெர்மானிய இசை மேதை, சாஹித்ய கர்த்தா ரிச்சர்ட் வாக்னருடன் (RICHARD WAGNER) நட்பு ஏற்பட்டது. நீட்ஸே கொண்டிருந்த கருத்துக்களையே அவரும் கொண்டிருந்தார்.
அரசியல் மற்றும் சமூகம் பற்றிய தனது கருத்துக்களை அன் ‘டைம்லி மெடிடேஷன்ஸ்’ என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். ஜெர்மானிய கலாசாரம் மற்றும் அப்போதைய நிறுவனங்களை அவர் சாடினார்.
தனது புரட்சிகரமான கருத்துக்களை ‘தஸ் ஸ்போக் ஜராதுஷ்ட்ரா’ (THUS SPOKE ZARATHUSTRA) என்ற நூலிலும் ‘பியாண்ட் குட் அன்ட் ஈவில்’ (BEYOND GOOD AND EVIL) என்ற நூலிலும் பிரகடனம் செய்தார்.
கிறிஸ்தவ மதம் இக்காலத்துக்குப் பொருந்தாது. தனி மனிதர்கள் எது நல்லது எது கெட்டது என்பதை பகுத்துணர்ந்து சொல்ல வேண்டும் ,பின்பற்ற வேண்டும் என்று கூறி “கடவுள் இறந்துவிட்டார் God is Dead” என்ற வாசகத்தின் மூலம் வெளியிட்டார்.
இதைக்கேட்ட பல அறிஞர்கள் மூக்கின் மீது விரல் வைத்து அதிசயித்தனர்; மேலும் பலர் வெகுண்டு எழுந்தனர்.
ஒரு நல்ல உதாரண புருஷன்/ எடுத்துக்காட்டான மனிதன் என்பவன் தன் உணர்ச்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அதை ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்த வேண்டும் என்றார் . இது 19-ஆவது நூற்றாண்டின் நாவல்களிலும் நாடகங்களிலும் செல்வாக்கு பெற்று புதிய கதாபாத்திரங்களை உருவாக்கியது.
நீட்ஸே சொல்லாத விஷயங்களை அவரது பெயரில் ஹிட்லரின் ஜெர்மானிய நாஜி கடசியினர் பரப்பியதால் அவருடைய பெயருக்கு களங்கம் ஏற்பட்டது; யூத மத எதிர்ப்புக்கு நாஜி கட்சிக்காரர்கள் நீட்ஸேயின் பெயரைப் பயன்படுத்தி பிரசாரம் செய்தனர். பிற்காலத்தில் இந்தப் புளுகு அம்பலப்படுத்தப்பட்டது. பின்னர் நீட்ஸேயின் புகழ் மீண்டும் உச்சிக்குச் சென்றது .
நீட்ஸேயின் முக்கிய படைப்புகள் இதோ :-
1872- THE BIRTH OF TRAGEDY
1873-76 UNTIMELY MEDITATIONS
1878-90 HUMAN, ALL -TOO- HUMAN
1883-85 THUS SPOKE ZARATHUSTRA – A BOOK FOR ALL AND NONE
1886 BEYOND GOOD AND EVIL
1887 ON THE GENEOLOGY OF MORALS
1889 TWILIGHT OF THE IDOLS
XXX
PUBLISHED AFTER HE DIED:–
1901 THE WILL TO POWER
1908 ECCE HOMO
சுவிட்சர்லாந்தில் சில்வபானா ஏரி இருந்த இடத்தில் இரண்டு சாலைகளுக்கு இடையே நடக்கும்போது பிரமிடு வடிவிலுள்ள மிகப்பெரிய பாறையைக் கண்டவுடன் அவருக்குத் தோன்றிய எண்ணங்களை தஸ் ஸ்போக் ஜராதுஷ்ட்ரா புஸ்தகத்தில் 4 பகுதிகளாக வெயிட்டார். இது ஒரு தத்துவ நாவல். இதில் அதிக சொற்சிலம்பம் உண்டு; பிற மொழிகளில் அப்படியே மொழி பெயர்க்க முடியாது. ஒவ்வொரு சொல்லையும் அவர் எப்படி, என்ன பொருளில் பயன்படுத்துகிறார் என்பதை விளக்க வேண்டிவரும்.

–SUBHAM–



TAGS- பிரடெரிக் நீட்ஸே ,GOD IS DEAD , கடவுள் பற்றி,