

மர்மக் கதை மன்னன்; உலகில் முதல் துப்பறியும் கதை எழுதிய ‘போ’ (Post.9763)
Post No. 9763
Date uploaded in London – –22 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
மர்மக் கதை மன்னன்; உலகில் முதல் துப்பறியும் கதை எழுதிய ‘போ’ (Post.9763)
உலகில் முதலில் ஆங்கிலத்தில் துப்பறியும் கதை (DETECTIVE STORY ) எழுதியவர் அமெரிக்க கதாசிரியர் எட்கர் ஆலன் போ (EDGAR ALLAN POE) என்பவராவார்.

பயங்கரக் கதைகள் மற்றும் பயங்கரக் கவிதைகள் எழுதுவதில் முன்னனியில் நின்றவர் 19-ஆம் நூற்றாண்டின் அமெரிக்க எழுத்தாளர் எட்கர் ஆலன் போ.
போ- வுக்கு மூன்று வயது ஆனபோதே தாய் தந்தையரை இழந்தார். இதனால் அவரை அமெரிக்காவில் வர்ஜினியா ரிச்மண்டிலுள்ள ஒரு பணக்கார புகையிலை வணிகர் வளர்த்து வந்தார். ஆனால் போ- வுக்கு அது குடும்ப சூழ்நிலையைத் தரவில்லை.. போ- வும் மோசமாக நடந்து கொண்டார். படிப்பில் கவனம் செலுத்தாமல் கவிதைகள் எழுதுவதில் முனைப்பு காட்டினார். இதுவும் வளர்ப்புத் தந்தைக்குப் பிடிக்கவில்லை. இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது.
***
பிறந்த தேதி -19-1-1809
இறந்த தேதி -7-10-1849
வாழ்ந்த ஆண்டுகள்-40
***
போ – வின் படைப்புகள்
1833 – MANUSCRIPT FOUND IN A BOTTLE
1839- THE FALL OF THE HOUSE OF USHER
1840- TALES OF THE GROTESQUE AND ARABESQUE
1841 – THE MURDERS IN THE RUE MORGUE
1843 – THE GOLD BUG
1845 THE RAVEN AND OTHER POEMS
1845 -THE PIT AND THE PENDULUM
1845 -TALES
1849 -ANNABEL LEE
***
சூதாட்டம் மூலம் பெரும் கடனாளியாகிய போ, 1827ல் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற நேரிட்டது. 1831-ம் ஆண்டில் வெஸ்ட்பாயின்ட் மிலிட்டரி அகாடமி, இவரை கல்வி நிறுவனத்திலிருந்தே வெளியே தள்ளியது.
24 வயதில் அவர் எழுதிய பாட்டிலில் கண்ட எழுத்து MANUSCRIPT FOUND IN A BOTTLE என்னும் சிறுகதை வெற்றி அடைந்து பரிசையும் பெற்றது . பின்னர் பல பத்திரிகைகளில் பணியாற்றினார். ஆயினும் எதிலும் நிலைத்து நிற்க முடியவில்லை. இவருடைய அதீத குடிப் பழக்கத்தினால் ஒவ்வொரு நிர்வாகமும் அவரை வெளியே அனுப்பியது.
இதற்கு நேர் மாறாக அவர் இயற்றிய கதைகளும் கவிதைகளும் பெரும் புகழ் ஈட்டித் தந்தன. 31 வய தல் கதைத் தொகுப்பினை வெளியிட்டார். அதற்குப் பின்னர் அவர் எழுதிய THE MURDERS IN THE RUE MORGUE
(ரூ மார்க்கில் படுகொலைகள்) என்ற புஸ்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதும் அந்த கொலைக் கதைதான் உலகின் முதல் துப்பறியும் கதை (Detective Story) என்று கருதப்படுகிறது
இப்படி மர்மக்கதை எழுதினாலும் அவருக்கு பேய், பிசாசுகள் என்றால் பயம் ;மரணம் குறித்தும் பயந்தார். இப்போது வரும் பயங்கரக் கதைகள், மர்மக் கதைகள், குற்றம் பற்றிய கதைகள் அனைத்திலும் போ -வின் ஒரு அம்சத்தையாவது காணலாம். அந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தினார். வருங்கால மர்மக் கதைகளுக்கு போ அஸ்திவாரம் இட்டார் என்றால் மிகையில்லை .
போ எழுதிய கதைகள் திரைப்படத்திலும் டெலிவிஷன் தொடர்களிலும் இடம்பெற்றன . சில கதைகள் முழு அளவிலும் மற்றவற்றில் சில அம்சங்களையும் காணலாம். ‘ஹவுஸ் ஆப் அஷர்’ என்ற கதை திரைப்படமாகியது. ‘பேய்பிடித்த அரண்மனை’ என்ற இவரது கவிதைத் தலைப்பு ஒரு திரைப்படத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது; போவின் கதை, கவிதைத் தொகுப்பு வசனங்களை மேலும் பல டெலிவிஷன் தொடர்களிலும் கையாண்டனர்





-SUBHAM-
–subham–
மர்மக் கதை மன்னன், முதல் துப்பறியும் கதை, எட்கர் ஆலன் போ