
Post No. 9778
Date uploaded in London – –26 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புகழ்பெற்ற ராபின்ஸன் க்ரூஸோ கதையை அறியாதவர்கள் எவரும் இல்லை. இதை எழுதியவர் டேனியல் டீ ஃபோ (DANIEL DEFOE) .
டேனியல் டீஃபோவை ஆங்கில நாவல்களின் தந்தை (Father of the English Novel) என்று அழைப்பார்கள் அவருடைய ராபின்ஸன் க்ரூஸோ (ROBINSON CRUSOE) நாவல் மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.
டீ போவின் படைப்புக்கு முன்னால் , கதைகள் அனைத்தும் நாடகங்களாகவோ செய்யுட்களாகவோ எழுதப்பட்டன. டீ போதான் முதன்முதலில் உரைநடையில் நம்பத் தகுந்த கதாபாத்திரங்களைப் படைத்து எளிய நடையில் கதை எழுதினார்.கதையின் சூழ்நிலையும் நம்பத் தகுந்த வகையில் அமைந்தது .
டீ போ, லண்டனில் கசாப்புக் கடைக்காரர் மகனாகப் பிறந்தார் .படிப்பு முடிந்தவுடன் ஐரோப்பாவில் சுற்றுப் பயணம் செய்தார். வணிகராக, வியாபாரியாக வாழ்க்கை நடத்தினார். இளம் வயதில் அவர் துவங்கிய வியாபாரங்கள் அனைத்தும் நஷ்டத்தில் முடிந்தன. இதனால் பெரும் கடன் வலையில் சிக்கிக்கொண்டார் .
எழுத்து மூலம் சம்பாதிக்கலாமே என்று எண்ணி எழுதத் துவங்கினார். சமுதாயத்திலுள்ள அநீதி, அக்கிரமங்களை விமரிசித்து எழுத ஆரம்பித்தார். துவக்க காலத்தில் நூற்றுக் கணக்கான துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார் அவர் எழுகாத விஷயமே இல்லை. அரசியல், சமயம், பூகோளம், பயணம், பேய் பிசாசு, மர்மம் என்று எழுதித் தள்ளினார். அவர் அரசியல் பற்றி எழுதியது அங்கத நடையில் இருந்ததை பலரும் விரும்பினர் . ஆயினும் அவரால் கிண்டலும் கேலியும் செய்யப்பட்ட அரசியல்வாதிகள், டீபோவுக்கு எதிராக அணி திரண்டனர் .பல நேரங்களில் இது சொல்லொணா கஷ்டங்களைக் கொடுத்தது. ஒரு முறை சிறையிலும் அடைக்கப்பட்டார் .
40 வயதில் ஞானோதயம் பிறந்தது. இனிமேல் அரசியல்வாதிகள் பற்றி எழுத வேண்டாம் என்று முடிவு செய்து கதைகள் எழுதத் துவங்கினார். அவற்றில் கிடைத்த வெற்றியால்தான் நாம் இன்று அவரின் புகழ் பாடுகிறோம்.
டீபோவுக்கு 59 வயதான போது அவர் எழுதிய ராபின்ஸன் க்ரூஸோ – கதைதான் அவருக்கு அழியாப்புகழ் ஈட்டித் தந்தது . ஒரு மனிதன் கப்பல் விபத்தில் சிக்கி, உடைந்த கப்பலிலிருந்து தப்பி ஒரு தீவை அடைகிறான் அங்கு மனிதர்களே இல்லை. தனிமையில் அவன் என்ன செய்தான் என்பது இக்கதையாகும் இதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. டீபோவின் புகழ் எங்கும் பரவியது .
அலெக்ஸ்சாண்டர் செல்கிர்க் என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதியதே ராபின்சன் க்ரூஸோ கதை ஆகும். அவருடைய இரண்டாவது நாவல் மோல் பிளான்டர்ஸ் MOLL FLANDERS . இதற்கும் நல்ல வரவேற்பு. இன்று ஆங்கில இலக்கியம் படிப்போர் இந்த இரண்டு நாவல்களையும் அறிந்தே ஆகவேண்டும் என்ற அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
பிறந்த ஆண்டு- 1660
இறந்த தேதி – ஏப்ரல் 24, 1731
வாழ்ந்த காலம் – 71 ஆண்டுகள்
அவர் எழுதிய நூல்கள்
1719- ROBINSON CRUSOE
1719 – FURTHER ADVENTURES OF ROBINSON CRUSOE
1720- MEMOIRS OF A CAVALIER
1720- CAPTAIN SINGLETON
1722- MOLL FLANDERS
1722 – A JOURNAL OF THE PLAGUE YEAR
1722 – COLONEL JACK
1724- ROXONA
தமிழில் வேதநாயகம் பிள்ளை எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ , ராஜம் அய்யர் எழுதிய ‘கமலாம்பாள் சரித்திரம்’ போன்ற பெருமை உடைத்து டீபோவின் கதைகள்.
–SUBHAM—
TAGS– ராபின்சன் க்ரூசோ , டேனியல் டீபோ, Daniel Defoe, Robinson Crusoe

