
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9774
Date uploaded in London – – –25 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
டாக்டர் டி.எஸ்.கௌரிபதி திரிபாதி அவர்கள் தேர்வு செய்து வழங்கிய ஐந்து சுபாஷிதங்கள் கட்டுரை எண் 9753இல் (வெளியான தேதி: 20-6-2021) தரப்பட்டது. அடுத்த ஐந்து சுபாஷிதங்கள் இந்தக் கட்டுரையில் காணலாம்.
தோட்டத்தில் நுழைந்தாலும் கள்ளிச் செடியையே தான் தேடும் ஒட்டகம்!
ச.நாகராஜன்
சம்ஸ்கிருத அறிஞரான டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி (Dr.T.S. Gouripathi Sastri) அவர்களிடம் ஆந்திரா பல்கலைக்கழகம் நல்ல சில சுபாஷிதங்களைத் தேர்ந்தெடுக்குமாறு (1978இல்) பணிக்க, அவர் 36 சுபாஷிதங்களைத் தொகுத்துத் தந்தார். அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் அவரே செய்துள்ளார். அவற்றில் முதல் ஐந்து சுபாஷிதங்களை சென்ற கட்டுரையில் கண்டோம். அடுத்த ஐந்து சுபாஷிதங்கள் இதோ:-
ஸ்லோகார்தாஸ்வாதகாலே து சப்தோத்பத்திவிசிந்தகா: |
நீவீ மோக்ஷணவேலாயாம் வஸ்த்ரமூல்யவிசிந்தகா: ||
ஒரு கவிதையை (ஸ்லோகத்தை) ரசிக்கும்போது அதிலுள்ள வார்த்தைகள் எந்த வேர்ச்சொற்களைக் கொண்டுள்ளன என்று கவலைப்படுவோர், ஒரு பெண்மணியின் ஆடைகளை அவிழ்க்கும் போது அவள் இடையில் அணிந்திருக்கும் ஆபரணங்களின் விலை என்னவாயிருக்கும் என்று கவலைப்படுவோரைப் போலத்தான் (என்று சொல்ல வேண்டும்)!
Those who are worried about the derivation of the words at the time of the relishing the poem are really like those who worry about the cost of the lady’s waist garments while undressing them.
*

கர்ணாம்ருதம் சூக்திரஸம் விமுச்ய தோஷேஷு யத்ன: சுமஹான் கலஸ்ய|
அவேக்ஷதே கேலிவனம் ப்ரவிஷு: க்ரமேலக: கண்டகஜாலமேவ ||
செவிக்கு அமிர்தமான சூக்திகளின் சாறை ஒருவர் தரும் போது அதிலுள்ள நல்லனவற்றை விட்டு விட்டு, குறைகளைக் கண்டுபிடிக்கும் மோசமானவரின் முயற்சி பிரமாதம் தான்! ஒட்டகமானது ஒரு தோட்டத்தில் நுழையும் போது கள்ளிச் செடி எங்கிருக்கிறது என்பதைத் தான் தேடும்.
Greatest is the endeavour of the wicked man in (locating) the defects leaving the quintessence of the wise saying really Ambrosia to the ears. The camel (searches) finds the cactus only when it enters a garden.
*
பரிஸ்ரமஞ்ஞம் ஜனமந்தரேன மௌனவ்ரதம் விப்ரதி வாக்மிநோபி |
வாசம்யமா: சந்தி வினா வஸந்தம் பும்ஸகோகிலா: பஞ்சமசஞ்சவோபி ||
மிகப்பெரும் பேச்சாளர்கள் கூட, ஒரு அறிவாளியின் முயற்சி எத்தகையதாயிருக்கும் என்று உணரும் ஒருவர் இருக்கும் போது தவிர மற்ற நேரத்தில், மௌன விரதத்தையே மேற்கொள்வர். ஆண் குயில்கள் மிக ரம்யமான ஐந்தாம் ஸ்வரத்தை தனது குரலில் எழுப்பும் சக்தியைக் கொண்டிருந்தாலும் கூட வசந்த காலத்தைத் தவிர இதர காலங்களில் மௌனமாகவே இருக்கும்.
Even the great orators take the vow of silence except when they find a person who knows what is meant by scholarly endeavor. Although the male cuckoos endowed with the capacity to sing the (charming) fifth musical note in their voices keep quiet except in the spring.

*
யஸ்ய நாஸ்தி ஸ்வயம் ப்ரஞ்ஞா சாஸ்த்ரம் தஸ்ய கரோதி கிம் |
லோசனாப்யாம் விஹீனஸ்ய தர்பண: கிம் கரிஷ்யதி ||
இயல்பான அல்லது உள்ளார்ந்த பகுத்தறிவைக் கொண்டிராத ஒருவனுக்கு ஒரு அறிவாளி அறிவை அடைய எடுத்துக் கொள்ளும் முயற்சி என்ன லாபத்தைத் தரும்? இரண்டு கண்களையும் இழந்த ஒருவனுக்கு கண்ணாடியினால் என்ன பயன்?
How can the knowledge or the discipline wrought by a scholarly endeavour benefit a person who is destitute of inherent or natural discrimination? What can a mirror do to a person who is destitute of both of the eyes?
*
யஸ்ய நாஸ்தி விவேகஸ்து கேவலம் யோ பஹுஸ்ருத: |
ந ஸ ஜானாதி சாஸ்த்ரர்தாத் தர்வீ பாகரஸாந்வி ||
இயல்பாக பகுத்தறியும் அறிவைக் கொண்டிராமல் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு, ஒரு அகப்பைக்கு உணவின் சுவை என்னவென்று எப்படித் தெரியாதோ அது போலவே, உள்ளார்ந்த அர்த்தம் என்னவென்று ஒரு போதும் தெரியாது. The person who is devoid of discrimination but who reads widely never knows the (real) meaning, i.e., the (real) essence of the disciplines just as the ladle does not know the relish of a dish.
***
Index :
கவிதையை ரசிப்பது எப்படி?
நல்ல சூக்திகளில் குறை காணுபவன்
அறிவாளிகள் மௌனமாக இருக்கும் சமயம்
இயல்பான பகுத்தறிவு இல்லாதவனுக்கு எவ்வளவு படித்தாலும் பயனில்லை.

–subham–
tags- குயில் , ஒட்டகம், சுபாஷிதம்