இந்திய சரித்திரம் திருப்பி எழுதப்பட வேண்டும்: ராஜ் வேதம் (Post.9798)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9798

Date uploaded in London – 1 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great

ராஜ் வேதம் கூறுகிறார், இந்திய சரித்திரம் திருப்பி எழுதப்பட வேண்டும் என்று!

ச.நாகராஜன்

டாக்டர் ராஜ் வேதம் – Dr Raj Vedam -(28-12-2019 வெள்ளிக்கிழமை அன்று ஆற்றிய உரை பற்றி ஹைதராபாத்திலிருந்து India EducationDiary.com (idnewsdesk) விவரமாகக் குறிப்பிடுகிறது.

டாக்டர் ராஜ் வேதம் திங்க் டேங்கின் இணை நிறுவனர். (CoFounder of Think tank, Indian History Awareness and Research, USA)

அவர் அளித்த உரையின் தலைப்பு :- ‘Ancinet India: What our History texts do not teach us’.

அவர் உரை நிகழ்த்திய இடம் :- CCRT Regional Centre, Hyderabad

வரவேற்கத் தக்க அந்த முக்கிய உரையின் சில பகுதிகளை பாரத மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

உரையின் சில முக்கிய கருத்துக்களை மட்டும் இங்கு பார்ப்போம்:

 1. இன்றைய இந்திய இளைஞர்கள் தாங்கள் யார் என்பதை அடையாளம் காட்ட முடியாமல் திணறுகிறார்கள்.
 2. இந்தியப் பண்பாடு பழம் பெரும் பண்பாடு. ஆனால் அது நமது நாட்டின் மனச்சாட்சியிலிருந்து அகற்றப்பட்டு விட்டது.
 3. ஐந்து சக்திகள் நமது வரலாற்றிற்கு எதிராக ஒன்று பட்டு வேலை செய்து அதை ஒன்றும் இல்லாதது போலக் காட்டி விட்டன.
 4. அவைகளாவன : காலனி ஆதிக்கம், ஐரோப்பியமயமாக்கும் உத்தி, சுயநலமிகளின் ஆதிக்கம், (இந்திய நாகரிகத்திற்கு எதிராக) பட்சபாதமுள்ள தாரளமாக்கும் கொள்கையின் படி அமைந்த கல்விக் கொள்கை மற்றும் மார்க்ஸிஸ்டுகள். (Colonial, Euro-centric, vested interests, Liberal Academia bias and Marxists)
 • இவை ஒவ்வொன்றிற்கும் இப்படிச் செய்வதற்கான காரணங்கள் தனித்தனியே வெறுபட்டு உள்ளன. காலனி ஆதிக்க வரலாற்று ஆசிரியர்கள் பைபிள் கூறும் கால அட்டவணையை ஒட்டியே அனைத்தும் இருக்கப்பட வேண்டும் என்று நினைத்தனர்; ஆகவே இந்தியாவின் தொன்று தொட்ட பழங்காலத்தைப் புறக்கணித்தனர். அவர்களின் கருத்துப்படி இந்திய நாகரிகம் தொட்டில் பருவத்தில் இருந்த ஒன்று; கிரேக்கர்களே நாகரிகம் என்றால் என்ன என்பதை இந்தியர்களுக்குகுச் சொல்லிக் கொடுத்தார்கள்.

ஆனால் இவர்களின் இந்தக் கருத்து இது மாபெரும் தவறு.

 • நம்மில் பலரும் நமது வரலாற்றிலிருந்து துண்டிக்கப்பட்டவர்கள் ஆகி விட்டோம். நமது வரலாற்றைப் பார்க்கும் போது, வானவியல் அறிவை எடுத்துக் கொள்வோம். நமது புராதனமான வேதங்கள், மஹாபாரதம் உள்ளிட்டவற்றில் ஏராளமான வானவியல் குறிப்புகள் வரலாற்று நிகழ்வுகளைப் பற்றிப் பதிவு செய்துள்ளன. நமது முன்னோர்கள் வான சாஸ்திரம் நன்கு அறிந்தவர்கள். வானில் கிரகங்கள் நகர்வதை ஊன்றிக் கவனித்து அதைப் பற்றிய பல தகவல்களை வாய்மொழி மூலமாகவே அடுத்து வரும் தலைமுறைகளுக்குத் தந்து வந்தனர். பழைய கால நூல்களில் அவை எழுதப்படுவதற்கு முன்பேயே வெகு காலம் முன்னமிருந்தே அவை கவனிக்கப்பட்டு வந்தவை.
 • நமது முன்னோர்கள் தங்களது அறிவை கதைகள் மூலமாகச் சொல்லி வந்தனர். எடுத்துக்காட்டாக ஒன்றைக் காண்போம். சந்திரன் தக்ஷ மஹராஜனின் 27 புதல்விகளை மணந்தான். இந்தக் கதையானது சக்தி வாய்ந்த ஒரு கற்பித்தலுக்காக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும். கதையின் படி சந்திரன் ரோஹிணிக்கு மற்ற மனைவிகளை விட அதிக முக்கியத்துவம் தருகிறான். இது வானவியல் கணிப்பு. வானவியல் பார்வை. இந்தப் பார்வையே ஒரு கதையாக நமக்குத் தரப்பட்டுள்ளது.
 • நமது இந்திய வரலாறு 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகம் தொட்டு ஆரம்பிக்கிறது. இது ஏனெனில், காலனி எழுத்தாளர்கள் பைபிளை அடிப்படையாகக் கொண்டவர்கள். அவர்களுக்கு 4000 வருடங்களுக்கு முன்னர் எதுவும் இருந்திருக்காது என்பது அழுத்தமான ஒரு நம்பிக்கை. ஆரம்ப காலத்தில் நமது வரலாறு காலனிய மிஷனரிகளால் தான் எழுதப்பட்டு வந்தது. இப்போது அது மார்க்ஸிஸ்டு வரலாற்று ஆசிரியர்களின் கட்டுப்பாட்டிற்குள் போய் விட்டது.
 • மரபணு ஆய்வானது, 70000 ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்கள் இந்தியாவிற்கு வந்தனர் என்று தெரிவித்து நிரூபிக்கிறது. ஆனால் நமது புதைபொருள் ஆய்வின் முடிவுகளோ அதற்கு வெகு முந்தைய காலத்தைக் காட்டுகிறது! மரபணு ஆய்வின் முடிவுகள் ஆரியன் படை எடுத்தான் என்ற கொள்கையை முற்றிலுமாக முறியடித்து விட்டது!
 • மரபணு ஆய்வு,  வானவியல் அடிப்படையிலான கண்டுபிடிப்புகள், இந்தியாவிலிருந்து இதர நாடுகளுக்கு ஏற்பட்ட அறிவுப் பரிமாற்றங்கள் ஆகியன, நமது வரலாறானது சரித்திர ஆசிரியர்கள் இன்று சொல்லும் காலத்திற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக இருப்பதைக் காட்டும்.
 1. ஆரியப் படையெடுப்பு என்பதே அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்து (எதை வேண்டுமானாலும்) சொல்வதற்கெல்லாம் ஆதாரமாக (அவர்களுக்கு) அமைகிறது. ஆகவே நாம் நமது வரலாற்றை -உண்மையான வரலாற்றை- திருப்பி எழுத வேண்டும். அதை உலகிற்குத் தர வேண்டும்.

டாக்டர் ராஜ் வேதம் பல்துறை நிபுணர். பல கலைகளின் ஆதாரங்களின் அடிப்படையில் அவர் தனது கருத்தைக் கூறியுள்ளார்.

வரவேற்கப்பட வேண்டிய இந்த முயற்சிக்கு வாழ்த்துத் தெரிவிப்போம்; அவரை ஆதரிப்போம்; அவருக்கு உறுதுணையாக ஒவ்வொருவரும் நிற்போம்.

வாழ்க பாரதம்! வந்தே மாதரம்!!

***

INDEX

டாக்டர் ராஜ் வேதம், அமெரிக்க அறிஞர், பல்துறை நிபுணர், இந்திய வரலாறு 5 சக்திகளால் தவறாகத் திரித்துத் தரப்பட்டன, ஐந்து சக்திகள் எவை எவை, இந்தியரின் வானவியல் அறிவு, தக்ஷன், சந்திரன், ரோஹிணியின் கதை,

மரபணு ஆய்வு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான நாகரிகம் ஹிந்து நாகரிகம்

tags- இந்திய சரித்திரம் , ராஜ் வேதம்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: