



Post No. 9808
Date uploaded in London –3 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பள்ளிக்கூடத்தில் ‘சைலஸ் மார்னர்’ , ‘மில் ஆன் தி ப்லாஸ்’ நாவல்களையோ அவற்றின் சுருக்கத்தையோ படித்திருப்பீர்கள் . அவற்றின் மூலம் புகழ் பெற்ற கதாசிரியை ஜார்ஜ் எலியட் (George Eliot) ஆவார்.அவருடைய இயற் பெயர் மரியம் ஆன் இவான்ஸ் (Mariam Ann Evans) . ஆங்கில நாவல் எழுதியோர் வரிசையில் பிரபலமானவர்களின் ஒருவர் அவர். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் கதைகள் எழுதிய அவர் புகழ் இன்று வரை நீடித்து வருகிறது.
பிறந்த தேதி – நவம்பர் 22, 1819
இறந்த தேதி – டிசம்பர் 22, 1880
வாழ்ந்த ஆண்டுகள் – 61

அவர் எழுதிய மேலும் இரண்டு புகழ்மிகு கதைகள் —
ஆடம் பீட் , மிடில் மார்ச்
ஜார்ஜ் எலியட் இங்கிலாந்தில் வாரிக் க்ஷைரில் (Warwickshire) பிறந்தார். அப்போது இங்கிலாந்து பெரும் மாறுதல்களைக் சந்தித்தது. நீராவி என்ஜின்கள், புதிய ரயில் பாதைகள், எந்திரங்களுடன் பெரிய தொழிற்சாலைகள் என்று பெரிய தொழில் புரட்சி ஏற்பட்டது. அவரும் நல்ல பள்ளிகளில் சேர்ந்து கல்வி கற்றார். 1849-ம் ஆண்டில் தந்தை இறந்த பின்னர் ஐரோப்பாவில் பல இ டங்களைப் பார்த்துவிட்டு லண்டனில் குடியேறினார்.
ஜார்ஜ் ஹென்றி லூயிஸ் என்ற எழுத்தாளருடன் ஜெர்மனிக்குச் சென்றார். அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆயினும் முறையான மண முறிவு (Divorce) கிடைக்கவில்லை. ஆயினும் ஜார்ஜ் இறக்கும் வரை 24 ஆண்டுகளுக்கு அவருடன் வாழ்ந்தார் எலியட். அந்தக் காலத்தில் இது மிகவும் வெறுக்கப்பட்ட செயல். எங்கு போயினும் அவரின் முதுகுக்குப் பின்னால் கிசு கிசுப் பேச்சு எழும்.
அவருக்கு 40 வயதான பொழுது முதல் சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டார். அந்தக் காலத்தில் ஆண்களே , எழுத்துலகில் ஆதிக்கம் செலுத்தினர். ஆகையால் இந்தப் பெண்மணியும் ஜார்ஜ் எலியட் என்ற புனைப் பெயரில் எழுதத் தொடங்கினார்.
‘ஆடம் பீட்’ என்ற பெயரில் இவர் வெளியிட்ட சோக மய காதல்கதைக்கு இவரது தந்தையே முன்னுதாரணம் ஆனார். அந்தக் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தவுடன் இ முன்னனி எழுத்தாளராகக் கருதினர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஸைலஸ் மார்னர் கதை வெளியானது. இதில் ஒரு இளம் பெண்ணின் காதலில் மயங்கிய ஒரு கருமி அவளுக்காக எல்லா பணத்தையும் சேமித்த கதாபாத்திரம் வருகிறது.
இதற்குப் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் எழுதிய மிடில் மார்ச் (Middlemarch) புதினம்தான் அவருடைய சிறந்த படைப்பு என்று இலக்கிய உலகம் எடைபோடுகிறது ஜார்ஜ் எலியட்டின் கதைகளில் சாதாரண மனிதர்களே கதா நாயகர்கள். அவர்களுடைய அன்றாடப் பிரச்சினைகளே கதைகளின் முக்கிய விஷயம். நிதர்சன நிலையைக் காட்டியதால் அவர் தனக்கு என ஒரு இடத்தைப் பிடித்தார்.
இவருடைய முக்கிய கதைகள்:-
1858- SCENES OF CLERICAL LIFE
1859- ADAM BEDE
1860 – THE MILL ON THE FLOSS
1861 – SILAS MARNER
1863 – ROMOLA
1866 – FELIX HOLT, THE RADICAL
1868 – THE SPANISH GYPSY
1871-72- MIDDLEMARCH
1876 – DANIEL DERONDA



-SUBHAM-
tags – ஜார்ஜ் எலியட், George Eliot
