சாக்ரடீஸ், பிளாட்டோ பற்றி எழுதிய லூசியஸ் அப்யூலியஸ் (Post.9812)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9812

Date uploaded in London –4 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரோமானிய சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த லூசியஸ் அப்யூலியஸ் (LUCIUS APULEIUS) எழுதிய ஒரே ஒரு லத்தீன் மொழி நாவல்தான் இன்று நமக்குக்  கிடைத்துள்ளது  .அந்த நாவலின் பெயர் மெடமார்பசிஸ் ( THE METAMORPHOSES); அதாவது உருமாற்றம்.

ரோம் நகர ஆட்சி ஒரு காலத்தில் வட ஆப்ரிக்கா வரை பரவி இருந்தது. அப்போது மடவ்ரா  MADAURA (மதுரா??) எனும் நகரில் லூசியஸ் அப்யூலியஸ்  ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தார். பெரிய அதிகாரியின் மகன் என்பதால் வட ஆப்ரிக்காவின் கார்தேஜ் நகரிலும் பின்னர் கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதன்ஸிலும் கல்வி கற்றார்.

பிறந்த ஆண்டு – 123

இறந்த ஆண்டு – 150

வாழ்ந்த ஆண்டுகள் -27

அப்பா சேர்த்து வைத்த செல்வத்தைப் பயன்படுத்தி ஆசிய கண்டத்தின் தொலை தூர  நகரங்களுக்குப் பயணம் செய்து நல்ல அனுபவம் பெற்றார். பல மதங்கள், பல கலாசாரங்கள், மாய ஜால வித்தைகள் முதலியவற்றை அறிந்தார். அவைகளைப் பயன்படுத்தி மெட்டாமார்பசிஸ் நாவலை எழுதினார். இதன் மற்றோரு பெயர் தங்கக் கழுதை THE GOLDEN ASS.

இது ஒரு பழி கரப்பு அங்கத நாவல் (SATIRE). ரோம சாம்ராஜ்யத்திலுள்ள மத குருமார்களையும் . போலி மருத்துவர்களையும் கிண்டலும், கேலியும் செய்யும் நாவல்.. எகிப்திய புராணத்தில் ஆசிரிஸ்- ஐசிஸ் (OSIRIS- ISIS) கதை மிகவும் பிரபலமான கதை. அதைப் பயன்படுத்தி இவர் புதினம் படைத்தார். இவரது கதையில் , கதாநாயகன் ஒரு கழுதை . அதை ஐசிஸ் என்னும் எகிப்திய தேவதை ஒரு ஆண்மகனாக மாற்றிவிடுகிறது இது மன்மதன்- ரதி காதல் கதை போன்றது.. கிட்டத்தட்ட கவிதை படிப்பது போன்ற உரைநடை நூல் இது.

அப்யூலியஸ்  ஒரு விதவையை மணந்தார். இது பிடிக்காத சிலர், இவர் மாய மந்திரங்களை பயன்படுத்தி அந்தப் பெண்ணை வலையில் சிக்க வைத்ததாகக் குற்றம் சாட்டினார்கள் . அப்யூலியஸ் தன்னை நிரபராதி என்று காட்ட வழக்காடு மன்றத்தில் அழகிய உரை நிகழ்த்தினார். இது அப்பாலஜி (THE APOLOGY) என்ற நூலாக பின்னர் வெளிவந்தது. கோர்ட்டும் அவரை விடுவித்தது.. பின்னர் அவர் கார்த்தேஜ் (CARTHAGE) நகருக்குத் திரும்பி வந்தது தத்துவம் மற்றும் பேசும் கலை பற்றி (PHILOSOPHY AND RHETORIC) பாடம் நடத்தினார்.

இவர் சாக்ரடீஸ், பிளாட்டோ பற்றி கட்டுரைகளும் எழுதியுள்ளார்.. கார்த்தேஜ் நகரிலும் ஏனைய பல இடங்களிலும் இவருக்கு சிலைகள் சமைக்கப்பட்டன.  இவர் ரோமானிய சாம்ராஜ்யத்தில் பெருமளவுக்கு மதிக்கப்பட்டார் என்பதற்குச் சிலைகள் சான்று பகர்கின்றன.

அப்யூலியஸ் எழுதிய நூல்கள்:-

SECOND CENTURY CE

THE METAMORPHOSES (LATER KNOWN AS THE GOLDEN ASS)

THE APOLOGY

THE FLORIDAESSAYS ON THE GREEK PHILOSOPHER PLATO, INCLUDING ‘ON THE GOD OF SOCRATES’.

–SUBHAM-

tags :- லூசியஸ் அப்யூலியஸ் ,LUCIUS APULEIUS ,Metamorphoses

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: