விதவிதமான பதில்கள்! (Post No.9816)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9816

Date uploaded in London – 5 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 18 வெளியான தேதி 16-6-21 கட்டுரை எண: 9740  

நடந்தவை தான் நம்புங்கள் – 19

ச.நாகராஜன்

விதவிதமான பதில்கள்!

ரோஜா மலரே சண்டைக்காரி!

மில்டன் கண்பார்வையற்றவர்; மிகப் பெரிய கவிஞர். அவருக்கு வந்து வாய்த்த மனைவி பெரிய சண்டைக்காரி. ஒரு நாள் மில்டன் ட்யூக் ஆஃப் பர்மிங்ஹாமைச் (Duke of Buckingham) சந்திக்கச் சென்றிருந்தார் பேச்சின் இடையில் ட்யூக், மில்டனின் மனைவியை ஒரு ரோஜா என்று கூறினார். உடனே மில்டன்,” எனக்கு வண்ணங்கள் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது. (அவர் குருடர் என்பதால்).ஆனால் நீங்கள் சொல்வது உண்மையாகத் தான் இருக்க வேண்டும். தினசரி என்னை முள்கள் குத்துகிறது” என்றார்!

XXX

வஞ்சப் புகழ்ச்சி!

பிரபல காமடி நடிகர் ஸ்டான் லாரல் இளம் வயதில் மேடையில் தோன்றிப் பாடுவது உண்டு. அவருடைய பாட்டைக் கேட்ட ஒரு ரசிகர், “நீ வெகு நன்றாகப் பாடுகிறாய்! ஆனால் நீ இருக்க வேண்டியது இங்கு இல்லை; பிரபல பாடகர் கார்ல் ரோசாவோடு அல்லவா நீ சேர்ந்து பாட வேண்டும்” என்று சொன்னார்.

இதைக் கேட்ட லாரல், “ஆனால் கார்ல் ரோசா இறந்து விட்டாரே” என்று திகைப்புடன் சொன்னார்.

“எனக்குத் தெரியும், அதனால் தான் சொன்னேன்” என்றார் அந்த ரசிகர்!

XXX

அது தான் இல்லையே!

பிரபல ஆங்கிலக் கவிஞர்கள் வோர்ட்ஸ்வொர்த்தும் லேம்பும் நல்ல நண்பர்கள். இருவரும் ஒரு சமயம் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தனர். வோர்ட்ஸ்வொர்த் சொன்னார்:” என்னால் ஷேக்ஸ்பியரைப் போல எழுத முடியும், எனக்கு மட்டும்  மனம் இருந்தால்…” என்றார். லேம்ப் கொஞ்சம் திக்கித் திக்கிப் பேசுபவர்.

“ஆ..மாம்… வேற ஒண்ணும் தேவை இல்லை..  ம…ம…மனம் தான் வேணும்” என்றார் அவர்! (அது தான் உங்கிட்ட இல்லையே என்பது அவர் கிண்டல்)

XXX

அழகான பேச்சு!

அமெரிக்க ஜனாதிபதியான கூலிட்ஜ் ஒரு முறை கட்டிட அடிக்கல் நாட்டச் சென்றிருந்தார்.

அங்கிருந்த கோடாலியால் தரையை ஒரு  கொத்துக் கொத்தி அடையாளபூர்வமாக கட்டிட வேலையைத் தொடங்கி வைத்தார். அங்கு கூடியிருந்தோர், அவரிடம், “இந்தத் தருணத்தில் ஏதாவது பேசினால் நன்றாக இருக்கும். இந்த விழாவிற்குப் பொருத்தமாக இருக்குமே” என்றனர்.

உடனே கூலிட்ஜ், தான் தோண்டி எடுத்துப் போட்ட மண்ணைப் பார்த்தார்” “அதோ, என்ன அழகான மண்புழு அது” என்றார்.

XXX

ஜீரணசக்தி உள்ள டியூக்!

ட்யூக் ஆஃப் கம்பர்லேண்ட் (Duke of Cumberland) ஒரு முறை பிரபல நாடகக் கலைஞரும் நடிகருமான சாமுவேல் ஃபுட்டைச் (Samuel Foote 1720-1777) சந்தித்துப் பேசித்துக் கொண்டிருந்தார். நடிகரின் நகைச்சுவைப் பேச்சை அவர் வெகுவாக ரசித்தார். சாமுவேலை நோக்கி ட்யூக், “ மிஸ்டர் சாமுவேல், நீங்கள்  சொன்ன எல்லாவற்றையும் நான் விழுங்கி விட்டேன்” என்று சந்தோஷமாகச் சொன்னார்.

உடனே சாமுவேல், “ மதிப்பிற்குரிய ட்யூக் அவர்கள் நல்ல ஜீரண சக்தி உடையவர், ஏனெனில் அவற்றில் எதையும் திருப்பி வெளியில் கொண்டு வர மாட்டீர்களே” என்றார்!

***

INDEX

Milton, Duke of Buckingham, Wife is a rose

ஸ்டான் லாரல், கார்ல் ரோசா, நல்ல பாட்டு

கூலிட்ஜ், அடிக்கல் நாட்டு விழா, நல்ல மண்புழு

Duke of Cumberland , Samuel Foote, Jokes, Digestion power

tags- விதவிதமான பதில்கள்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: