பிறரிடமும் தன்னைப் போன்ற குணங்கள் இருப்பதைக் கண்டு மகிழ்பவன் அரிது (9824)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9824

Date uploaded in London – 7 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டாக்டர் டி.எஸ்.கௌரிபதி திரிபாதி அவர்கள் தேர்வு செய்து வழங்கிய ஐந்து சுபாஷிதங்கள் கட்டுரை எண் 9774 (வெளியான தேதி: 25-6-2021) தரப்பட்டது. அடுத்த ஐந்து சுபாஷிதங்கள் இந்தக் கட்டுரையில் காணலாம்.

பிறரிடமும் தன்னைப் போன்ற குணங்கள் இருப்பதைக் கண்டு மகிழ்பவன் அரிதே தான்!

ச.நாகராஜன்

சம்ஸ்கிருத அறிஞரான டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி (Dr.T.S. Gouripathi Sastri)   அவர்களிடம் ஆந்திரா பல்கலைக்கழகம் நல்ல சில சுபாஷிதங்களைத் தேர்ந்தெடுக்குமாறு (1978இல்) பணிக்க, அவர் 36 சுபாஷிதங்களைத் தொகுத்துத் தந்தார். அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் அவரே செய்துள்ளார். அவற்றில் முதல் பத்து சுபாஷிதங்களை சென்ற கட்டுரைகளில் கண்டோம். அடுத்த ஐந்து சுபாஷிதங்கள் இதோ:-

ப்ரக்ஞா விவேகம் லபதே பின்னைராகமதர்ஷனை: |

கியத்தா ஷக்யமுன்னேதும் ஸ்வதர்கமனுதாவத: ||

அறிவு வெவ்வேறு விதமான தர்சனங்களைக் கற்று விவேகத்தை அடைகிறது. தனது சொந்த தர்க்கத்தைப் பற்றி கொண்டே இருந்து ஒருவன் எவ்வளவு தூரம் தான் முன்னேற முடியும்?

Knowledge attains discrimination with the study of diverse disciplines. How far can one proceed on in thinking by clinging to one’s own logic?

*

யத்னேனானுமிதோப்யர்த: குஷலைரநுமாத்ருபி: |

அபியுக்ததரைரன்யைரன்யதைவோபபாத்யதே ||

மிகப்பெரிய தர்க்கவாதிகளின் கூரிய முயற்சியால் அடையப்பட்ட முடிவுகள் கூட மற்ற தர்க்கங்களைக் கொண்டுள்ள இன்னும் சிறந்த அறிஞர்களால் ஒதுக்கி வைக்கப்படுகிறது.

Even the conclusion drawn by great (intellectual) effort by shrewd logicians is set aside by better thinkers of other disciplines.

*

நாகுணீ  குணினம் வேத்தி குணீ  குணிஷு மத்ஸரி |

குணீ  ச குணராகீ ச விரல: ஸரளோ ஜன: ||

நல்ல குணங்களைக் கொண்ட ஒருவனை குணமே அற்ற ஒருவனால் புரிந்து கொள்ள முடியாது. குணங்களைக் கொண்டுள்ள ஒருவன் இன்னொரு அதே போன்ற குணங்களைக் கொண்டுள்ளவனைப் பார்த்து பொறாமைப் படுகிறான்.  எவன் ஒருவன் அரும் குணங்களைத் தான் கொண்டுள்ள போதும் மற்றவர்களிடம் அதே குணங்கள் இருப்பதைப் பார்த்து (மகிழ்கிறானோ) விரும்புகிறானோ அப்படிப்பட்டவனைப் பார்ப்பது அரிது தான்!

The man destitute of merits cannot (even) understand a person endowed with them. The man endowed with merits is jealous of the persons endowed with merits. That person endowed with merits and straight (frank) and likes them (in others) is indeed rare!

*

உபகாரிஷு ய சாது: சாதுத்வே தஸ்ய கோ குண: |

உபகாரிஷு ய சாது: ஸ சாது சாத்பிருச்யதே ||

தனக்கு உதவி செய்யும் ஒருவனிடம் பண்புடன் நடந்து கொள்ளும் ஒருவனிடம் என்ன பெருமை இருக்கிறது? ஒருவன் தன்னிடம் மோசமாக நடந்து கொண்ட போதும் எவன் ஒருவன் அவனிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறானோ அவனே உண்மையில் சாது (பெருமைப்படத்தக்க பிரபு) என்று பெரியோர் கூறுகின்றனர்.

What is great about the decency of a man who is decent towards those who help him? The noble people call such a man as (really) noble who is well disposed towards those who have wronged him.

*

தோஷானபி குணீ கர்தும்  தோஷீகர்தும் குணானபி |

ஷக்தோ வாதீ ந தத்தத்யம் தோஷா தோஷா குணா குணா: ||

 திறன் வாய்ந்த, எப்போதும் குதர்க்கம் செய்யும் ஒருவன் நல்லனவற்றை தோஷம் (குறைகள்)  உள்ளவை என்றும் குறை உள்ளவற்றை நல்லவை என்றும் கூறும் திறன் கொண்டவன். ஆனால் அது சரியில்லை;

எனெனில் நல்லது நல்லது தான்! குறை, குறை தான்.

An  (clever or crafty) argumentator is capable of showing demerits as merits and merits as demerits. But that is not right, ‘because’ demerits are demerits and merits are merits.

***

INDEX

ஸ்லோக ஆரம்பம் : ப்ரக்ஞா விவேகம், யத்னேனானுமிதோப்யர்த, நாகுணீ, உபகாரிஷு, தோஷானபி

அறிவு, சொந்த லாஜிக்

குணம் கொண்டவனைப் பாராட்டல்

உண்மை பிரபு யார்?

தோஷம் தோஷமே, குணம் குணமே

tags-  சுபாஷிதங்கள்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: