குழந்தைகளுக்கு கதை எழுதிய பிரெஞ்சு ஆசிரியர் லா பாந்தேன் (9835)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9835

Date uploaded in London –10 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஸம்ஸ்க்ருதத்திலுள்ள பஞ்ச தந்திரக் கதைகளையும் கிரேக்க மொழியிலுள்ள ஈசாப் கதைகளையும் தழுவி பிரெஞ்சு மொழியில் கதை எழுதியவர் லா பாந்தேன்

ஷான் தெ லா பாந்தேன்  (JEAN DE LA FONTAINE)  கதைகள் பல மொழிகளில் வெளிவந்தன.

பிறந்த தேதி – ஜூலை 8, 1621

இறந்த தேதி – ஏப்ரல் 13, 1695

வாழ்ந்த ஆண்டுகள் 73.

லா பாந்தேன் (La Fontaine)  , மத்திய பிரான்ஸிலுள்ள ஷாதோ தேரியில் பிறந்தார்.அவருடைய தந்தை ஒரு அரசாங்க அதிகாரி. தனது மகனை கத்தோலிக்க ஏசுமத கல்லூரியில் படிக்க வைத்தார் . லா பாந்தேன்  , நன்கு படித்து வழக்கறிஞர் ஆனார். தந்தை போல அரசு பணியில் சேர்ந்து பல்வேறு துறைகளில் வேலை செய்தார் . போதுமான பணம் கிடைக்கவில்லை.

26 வயதில் ஒரு பணக்கார பெண்மணியை (heiress) மணந்தார் . அது நீடிக்கவில்லை. 1658ல் அவரது மனைவி பிரிந்து சென்றார். பின்னர் எழுத்துத் துறையில் இறங்கினார். ஆயினும் புஸ்தகம் அச்சிடக் கையில் காசு இல்லாததால் வள்ளல்களின் (Patrons) ஆதரவை நம்பி வாழ்க்கை நடத்தினார் .

அவருக்கு 43 வயதான போது குட்டிக் கதைகள் என்ற கதைத் தொகுப்பை வெளியிட்டார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இத்தாலிய கதாசிரியரான ஜியோவன்னி பொக்காஸியோ (Boccaccio) போன்றோரின்  கதைகளை கருவாக வைத்து வேடிக்கைக் கதைகள் எழுதினார். காதல் கதைகளை கிண்டலும் நக்கலும் நிறைக்கும்படி எழுதினார்.

அது அவரது வாழ்நாளிலேயே நான்கு பதிப்புகளைக் கண்டது. ஆயினும் கடைசி தொகுதியை பிரெஞ்சு அதிகாரிகள் தடை செய்தனர். அதிக ஆபாசம் இருப்பதாகக் குற்றம்சாட்டி தடை செய்தனர். அவரும் பிற்கால வாழ்வில் தான் இப்படி எழுதியது தவறே என்று வெட்கப்பட்டார்; வருத்தமுற்றார்.

குழந்தைகளுக்காக, மிருகங்களை (Animal Fables) கதாபாத்திரங்களாக வைத்து, நீதிக்கதைகளை எழுதினார். அப்போது அவருக்கு வயது 47. கிரேக்க நாட்டு ஈசாப் (Aesop) போலவே பிராணிகள் பேசின. இறுதியில் ஒரு நீதியும் இருந்தது. அதில் நகைச் சுவையையும் கலந்தார். வாழ்ககையை நல்லபடி நடத்துவது எப்படி என்று அறிவுரை வழங்கிய போதிலும் லா பாந்தேன் கதைகள் சுற்றி வளைத்துப் பேசின. இதனால் கதைகளின் நீளமும் அதிகரித்தது .

இதனுடைய இரண்டாவது தொகுப்பு வருகையில் ஸம்ஸ்க்ருத பஞ்ச தந்திரக் கதைகள் முதலிய கீழை தேசத்தியக் கதைகளைத் தழுவி எழுதினார். இது முன்னைய படைப்புகளைவிட மேம்பட்டு இருந்தன. பிராணிகள் இடையே நடைபெறும் உரையாடல்களும் சிறப்பாக அமைந்தன. பிரெஞ்சு இலக்கியத்துக்கு அவர் ஆற்றிய தொண்டினைக் கருதி அவர் பிரெஞ்சு மொழி அகாடமிக்கு தேர்தெடுக்கப்பட்டார்.

அகாடமி உறுப்பினர் பதவி மிகவும் கௌரவம் மிக்க பதவி.

இலக்கிய படைப்புகள்

1664 – SHORT TALES

1668- FABLES, FIRST VOLUME

1679- 1694 FABLES, SECOND VOLUME

–SUBHAM–

tags – குழந்தை கதை,   பிரெஞ்சு ஆசிரியர்,  லா பாந்தேன், La Fontaine

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: