
Compiled BY LONDON SWAMINATHAN
Post No. 9840
Date uploaded in London –11 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை JULY 11 -ஆம் தேதி — ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
XXXX
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான 306 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: அமைச்சர் தகவல்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1866 ம் ஆண்டு 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு 1866 ம் ஆண்டு 330 ஏக்கர் நிலம் இருந்தது. தற்போது, 24 ஏக்கர் மட்டுமே கோயில் நிலங்கள் உள்ளன. மற்ற இடத்தில் குடியிருப்புகளும், கடைகளும் கட்டப்பட்டு ஆக்கிரமிப்புகளாக உள்ளது. அதில் இருப்பவர்கள் உரிய மனு அளித்தால், வாடகைதாரர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர். கோயில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் நோய்த் தொற்றில் இருந்து விடுபட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும், இயற்கையையும் வேண்டுவோம், மக்களும் வேண்டிக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
xxx

‘கூ‘ சமூக வலைதளத்தில் கணக்கு துவங்கிய ஆர்.எஸ்.எஸ்.
‘கூ’ சமூக வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் கணக்கு துவக்கப்பட்டுள்ளது.
‘டுவிட்டர், பேஸ்புக்’ போன்ற சமூக வலைதளங்களை போல், ‘கூ’ என்ற பெயரில் சமூக வலைதளத்தை இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் அப்ரமேயா ராதாகிருஷ்ணா, மயங்க் பிடாவட்கா ஆகியோர் துவக்கினர். இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ட சட்டவிதிகளை ஏற்க மறுத்து வருவதால், டுவிட்டருக்கும், மத்திய அரசுக்கும் மோதல் நீடித்து வருகிறது. இதையடுத்து இந்தியர்கள் பலரும், கூ சமூக வலைதளத்தில் கணக்கு துவக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ளே உள்ளிட்ட பலர், கூ சமூக வலை தளத்தில் இணைந்து உள்ளனர். இந்நிலையில் கூ சமூக வலைதளத்தில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் கணக்கு துவக்கப்பட்டு உள்ளது.
இது பற்றி ஆர்.எஸ்.எஸ்., செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘தொண்டர்கள் மற்றும் மக்களை, இந்திய மொழிகளில் தொடர்பு கொள்ளும் நோக்கில், கூ சமூக வலைதளத்தில் ஆர்.எஸ்.எஸ்., இணைந்துள்ளது’ என்றார்.
கூ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘கூ சமூகவலைதளத்தில், 65 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்கள் உள்ளனர்.இப்போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கணக்கு துவக்கியுள்ளதால், விரைவில் பயனாளர்கள் எண்ணிக்கை, ஒரு கோடியை தாண்டும்’ என, கூறப்பட்டுள்ளது
XXX
“முஸ்லிம்கள் ஆபத்தில் இல்லை” – மோகன்பகவத்
காஸியாபாத்: இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் யாருக்கும் ஆபத்து இல்லை. முஸ்லிம்கள், இந்துக்கள் என்ற இரு குழுக்கள் வேண்டாம். இணைந்து வாழ்வதே நாட்டின் வளர்ச்சிக்க உகந்தது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் உபியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் கூட்டம் காசியாபாத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மோகன் பகவத் பேசியதாவது:
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறுபவர்கள் இந்துக்களே அல்ல . வழிபாட்டை வைத்து மக்களை வேறுபடுத்த முடியாது. அனைத்து இந்தியர்களுக்கும் டிஎன்ஏ ஒன்றுதான் . இந்தியா போன்ற ஒரு ஜனநாயகத்தில், இந்துக்கள் அல்லது முஸ்லிம்களைக் காட்டிலும் இந்தியர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும் .முஸ்லிம்கள் இங்கு வாழக்கூடாது என்று கூறுபவர் ஒரு இந்து அல்ல. பசு புனிதமானது. இதனை கொல்வது தவறு, இதுபோல் ஒரு மனிதனை கொல்வதும் இந்து தர்மத்திற்கு எதிரானது. இவர்கள் மீது சட்டம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 40,000 ஆண்டுகளாக நாம் அனைவரும் ஒரே மூதாதையர்களின் வழி வந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரே மரபணு தான் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்கிற சதி வலையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். முஸ்லிம்களுக்கு எந்த விதமான ஆபத்திலும் இல்லை. நாட்டில் ஒற்றுமை இல்லை என்றால் வளர்ச்சி சாத்தியமில்லை. ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால் ஒருவருக்கு ஒருவர் பேசுவது அவசியம் இவ்வாறு அவர் கூறினார்.
XXXX


செருப்பு அணிந்து பூஜை, உதயநிதிக்கு கண்டனம்
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், சென்னையில் நடந்த, புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பூமி பூஜையில், செருப்பு காலுடன் உதயநிதி பங்கேற்றதற்கு, பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இந்து தமிழர் கட்சி தலைவர் ராமரவிக்குமார்: சென்னை, வியாசர்பாடி எம்.ஜி.ஆர்., நகரில், புதிய அடுக்குமாடி குடியிருப்பு திட்ட கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை நடந்தது. தேர்தலுக்கு முன், ‘நான் கடவுள் நம்பிக்கை அற்றவன்’ என்று பேசிய உதயநிதி, காலில் செருப்பு அணிந்து, ஹிந்து சமய கடவுள் படங்களை அவமதிக்கும் வகையில் நடந்து உள்ளார்.
கருணாநிதி சமாதிக்கு, செருப்பு அணியாது செல்லும் உதயநிதி மற்றும் அமைச்சர்கள், ஹிந்து கடவுள்களை, செருப்பு அணிந்து அவமதித்தது ஏற்க முடியாதது. இதற்கு உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்.
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா: தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றால், பூமி பூஜை நிகழ்வுகளில், கலந்து கொள்வதை தவிர்க்கலாம். ஆனால், கடவுளை அவமதிப்பது போல, காலில் செருப்பு அணிந்து கொண்டு, பூஜை செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
XXXX
திருப்பதி கோவில் பிரசாதங்களின் விலை உயர்வு

திருப்பதி பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு தினமும் பல்வேறு வகையான பூைஜகள் நடந்து வருகிறது. அர்ஜித சேவைகள் மற்றும் பூைஜகளின்போது மூலவர் ஏழுமலையானுக்கு வடை, அப்பம், தோசை, முறுக்கு, ஜிலேபி, லட்டு உள்பட 12 வகையான பிரசாதங்கள் நைவேத்தியமாக வைக்கப் படுகின்றன. இந்தப் பிரசாதங்கள் கோவில் உள்ளே மடப்பள்ளியில்
தயாரிக்கப்படுகின்றன. திருமலை-திருப்பதி தேவஸ்தானம் பிரசாதங்களின் விலையை உயர்த்தி உள்ளது.
முறுக்கு, ஜிலேபி 100 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், 25 ரூபாய் இருந்த சிறிய லட்டு 50 ரூபாயாகவும், 100 ரூபாய் இருந்த பெரிய லட்டு 200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணிவரை திருப்பாவாடை சேவை நடப்பது வழக்கம். அதில் மூலவருக்கு முறுக்கு, ஜிலேபி ஆகியவை நைவேத்தியம் செய்து, அவைகளை முன்பதிவு செய்த வி.ஐ.பி. பக்தர்களுக்கு மட்டும் கொடுப்பது வழக்கம். அதில் பிரசாதம் மீதியானால் தேவஸ்தான உயர் அதிகாரிகள், போலீஸ் உயர்
அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்குவார்கள். ஒருசில நைவேத்திய பிரசாதம் எக்காரணத்தைக் கொண்டும் பக்தர்களுக்கு விற்கப்பட மாட்டாது.
ஆனால் தற்போது முறுக்கு, ஜிலேபி பிரசாதங்களின் விலை 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இனி இந்த நைவேத்திய பிரசாதங்கள் விற்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. ைநவேத்திய பிரசாதங்களின் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வர உள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகார சபை ஒருங்கிணைப்பாளரும், கூடுதல் முதன்ைமச் செயல் அலுவலருமான ஏ.வி.தர்மாரெட்டி தெரிவித்துள்ளார்.
XXXXX
புரி ரத யாத்திரை செல்லும் பகுதிகளில் 11 முதல் 13-ந் தேதி வரை 144 தடை – கோவில் நிர்வாகக்குழு முடிவு
ஒடிசாவில் ஆண்டுதோறும் நடைபெறும் உலக புகழ்பெற்ற புரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை, வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் ரத யாத்திரையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் ரத யாத்திரை செல்லும் பகுதிகளில் தடையை மீறி பக்தர்கள் பங்கேற்காமல் இருப்பதற்காக, ரத யாத்திரை செல்லும் கிராண்ட் சாலையில் 144 தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி வருகிற 11-ந்தேதி இரவு முதல் 13-ந்தேதி காலை வரை இந்த தடை அமல்படுத்த கோவில் நிர்வாகக்குழு முடிவு செய்துள்ளது.
யாத்திரை செல்லும் பகுதிகளில் சாலையின் இருபுறமும் இருக்கும் வீடுகளில் வசிக்கும் பக்தர்கள் இந்த யாத்திரையை தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
புகழ்பெற்ற 3 தேர்களையும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் சேவையாளர்கள் இழுத்து செல்வார்கள் எனவும், இதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த சேவையாளர்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புரியில் மட்டும் யாத்திரை : உச்ச நீதிமன்றம் உத்தரவு
‘கொரோனா வைரஸ் பரவல் உள்ள நிலையில் எந்த துணிச்சலான நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஒடிசாவின் புரியில் மட்டுமே ரத யாத்திரை நடத்த வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்தாண்டு புரியில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.மாநிலம் முழுதும் ரத யாத்திரை நடத்த அனுமதிக்கக் கோரி வழக்குகள் தொடரப்பட்டன.அவற்றை ஒடிசா உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதை எதிர்த்து வைரஸ் பரவலால் கடந்தாண்டைவிட இந்தாண்டு அதிக பலியை சந்தித்துள்ளோம்.மாநிலம் முழுதும் ரத யாத்திரை நடத்துவது சரியாக இருக்காது. கடவுள் விரும்பினால் அடுத்தாண்டு சிறப்பாக கொண்டாடலாம். புரியைத் தவிர மற்ற இடங்களில் ரத யாத்திரை நடத்த அனுமதிக்க முடியாது.இவ்வாறு உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
XXXX
பெண் அர்ச்சகர் நியமனம் அவசியமா?
‘தமிழக கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டப்படி, அடுத்த 100 நாட்களில் பணி நியமனம் வழங்கப்படும். முக்கிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். அது குறித்து அறிவிப்பு பலகையும் வைக்கப்படும். ”அது மட்டுமல்ல, தமிழகத்தில் பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளது. அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அர்ச்சகர் பற்றாக்குறை உள்ள கோவில்களில் பெண்கள் நியமிக்கப்படுவர்,” என, ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார்.
இது, தமிழக அரசியல்வாதிகள், ஆன்மிகவாதி களிடையே பெரும் விவாதப் பொருளானது. தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் நாகசாமி, இதுபற்றி கூறியதாவது:அர்ச்சகர்கள் என்பவர்கள், அரசு ஊழியர்கள் அல்ல; அவர்கள் பூஜிக்கும் கடவுளின் ஊழியர்கள். அவர்கள், வணங்கும் கடவுளுக்கும், பூஜை செய்யும் கோவிலின் ஆகம விதிகளுக்கும் கட்டுப்பட்டவர்களாகவே இருப்பர்.ஆகம விதிகளை பின்பற்றி பூஜை செய்யும் கோவிலுக்கு செல்லும் முன், அர்ச்சகர்கள், தங்கள் வீடுகளிலும், வழிபாடுகளை நடத்துவர். மணமானவர்கள், ஆச்சார்யார்கள், வாழ்நாள் அர்ச்சகர்கள் என, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விதிகள் உள்ளன. விதிகளை கடைப்பிடிக்கும் முன், முறைப்படி தீட்சையும் பெறுகின்றனர்.
அர்ச்சகர்கள் கோவிலுக்குள் நுழையும் முன், பஞ்ச சுத்திகரணா என்னும், ஐந்து வித சுத்தத்தை கடைப்பிடிப்பர்.. இந்த விதிகளை தொய்வில்லாமல் பின்பற்றுவோர், அந்தந்த கோவிலுக்கு உரிய ஆகம விதிகளுக்கு உட்பட்டு அர்ச்சகராகலாம். சமூக சமத்துவம் என்ற பெயரில், அனைத்து கோவில்களிலும் பெண்களை அர்ச்சகராக்கலாம் என்பது, மேற்கத்திய கலாசாரத்தை ஒன்றிய கருத்தாக இருக்கலாம்.ஹிந்து மதத்தில், பெண்கள் தெய்வத்துக்கு நிகராக மதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மதங்களில் இல்லாத வகையில், பெண் தெய்வ வழிபாடும் உள்ளது. பெண்கள் வழிபடும் இல்லங்களில், தேவதைகள் வசிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், பெண்கள் அர்ச்சகராவதில் பல சிக்கல்கள் உள்ளன.
அரசு என்பது மதச்சார்பற்ற கொள்கை உடையது. கோவில்கள் என்பவை, மதச் சின்னங்கள். இதில், அரசு தலையிடுவது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, பெண் அர்ச்சகர் நியமனத்தில், அனைத்து தரப்பு வல்லுனர் குழுவை நியமித்து, கருத்து கேட்டு முடிவு எடுப்பதே சிறந்தது.இவ்வாறு அவர் கூறினார். நாகசாமி தொல்லியல் அறிஞர் –
XXX

சிவகிரி மடத்தின் முன்னாள் தலைவர் சுவாமி பிரகாஷானந்தா, 99 வயதில் இறந்தார்
சிவகிரி மடத்தின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலத்தின் பழமையான ஆன்மீகத் தலைவர்களில் ஒருவருமான சுவாமி பிரகாஷானந்தா வயது தொடர்பான வியாதிகளால் இறந்தார் என்று மட வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. அவருக்கு வயது 99.
ஆன்மீகத் தலைவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தவர்களில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் அடங்குவர்.
பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில், சுவாமி பிரகாஷானந்தாவை அறிவு மற்றும் ஆன்மீகத்தின் கலங்கரை விளக்கம் என்று பாராட்டினார்.
“சுவாமி பிரகாஷானந்தா ஜி அறிவு மற்றும் ஆன்மீகத்தின் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தார். அவரது தன்னலமற்ற சேவை செயல்கள் ஏழை ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தன. உன்னதமான எண்ணங்களை பிரபலப்படுத்துவதில் அவர் முன்னிலை வகித்தார்
ஸ்ரீ நாராயண குரு. அவரது மறைவால் வேதனை. ஓம் சாந்தி, ”என்று ட்வீட் TWEET செய்துள்ளார்.
சுவாமி பிரகாஷானந்தா, -சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவால் நிறுவப்பட்ட சிவகிரி மடத்தை உலகளவில் மதிக்கப்படும் ஆன்மீக மையமாக மாற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்திருந்தார்.
XXXX
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN

நன்றி, வணக்கம்
XXXXXXXXXXXXX
HARE RAMA HARE KRISHNA
/ July 12, 2021*செருப்பு அணிந்து பூஜை**, **உதயநிதிக்கு*
கவனியுங்கள்.. எல்லோரும் காலணியேடனிருப்பதை…
…..