
Post No. 9838
Date uploaded in London –11 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Brahma
If the red slayer think he slays,
Or if the slain think he is slain,
They know not well the subtle ways
I keep, and pass, and turn again.
Far or forgot to me is near;
Shadow and sunlight are the same;
The vanished gods to me appear;
And one to me are shame and fame.
They reckon ill who leave me out;
When me they fly, I am the wings;
I am the doubter and the doubt,
I am the hymn the Brahmin sings.
The strong gods pine for my abode,
And pine in vain the sacred Seven;
But thou, meek lover of the good!
Find me, and turn thy back on heaven.

அமெரிக்காவின் 19-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற கட்டுரையாளர் , புலவர் எமர்சன் (RALPH WALDO EMERSON) ஆவார் . இந்து மதமும் இந்தியாவும் இவரது கட்டுரைகளிலும் கவிதைகளிலும் பரிணமிக்கிறது. பிரம்மா முதலிய இந்து தெய்வங்கள் இவருடைய கவிதைகளில் பிரகாசிக்கின்றனர். ஆயினும் இவர் இந்துமதம் பற்றி மட்டுமே பாடியவர் என்று நினைத்துவிடக் கூடாது.
எமர்சன், ஒரு பாதிரியாரின் மகன். பாஸ்டன் நகரில் பிறந்தார். பாஸ்டன் பிராமணர்கள் (Boston Brahmans) என்ற அறிஞர்கள் வரிசையில் இவரது குடும்பத்தினரும் உண்டு. தந்தையை எட்டு வயதிலேயே இழந்த போதும் அவர் சேகரித்த இந்தியா, இந்து மதம் பற்றிய புஸ்தகங்களை இவர் படித்ததை இவரது படைப்புகள் மூலம் அறியலாம். அமெரிக்க பண்பாட்டின் வளர்ச்சியில் இவரது பங்களிப்பு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
தந்தையைப் போலவே ஹார்வர்டில்(Harvard) கற்றார். அவரைப் போலவே கிறிஸ்தவ மதப் பிரச்சாரகர் ஆனார். ஆனால் 29 வயதில் இவருக்கும் கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சர்ச்சிலிருந்து வெளியேறினார். அதே ஆண்டில் இங்கிலாந்துக்கு விஜயம் செய்த்தார் . பிரபல எழுத்தாளர் தாமஸ் கார்லைலுடன் (Thomas Carlyle) நட்பு மலர்ந்தது.
அமெரிக்காவுக்குத் திரும்பிய பின்னர் மாசாசூசெட்ஸ் பகுதியில் கான்கார்டில் (Concord) குடிபுகுந்தார். கல்லூரி விரிவுரையாளராகவும் கட்டுரையாளராகவும் மாறினார். 33 வயதில் , அவருடைய முதல் புஸ்தகம் நேச்சர் (Nature) அச்சாகியது. அதில் தன்னுடைய எண்ணங்களை பிழிந்து தந்தார்.
பாரம்பர்ய எண்ணங்களின் செல்வாக்கிலிருந்து விடுபட்டு தனித்துவம் இருக்க வேண்டும். தன்னைத்தானே சார்ந்து வாழ வேண்டும் என்ற கருத்துக்களை விதைத்தார். உங்களுடைய சுய புத்தியைப் பயன்படுத்தி நல்லது கெட்டதைப் பகுத்தறியுங்கள் . இயற்கையோடிணைந்த எளிய வாழ்க்கை வாழுங்கள் என்று எழுதினார்.
இவருடைய விரிவுரைகள், சொற்பொழிவுகள் இவரைப் புகழ் பெற வைத்தன. ஐரோப்பிய செல்வாக்கிலிருந்து அமெரிக்கா விடுபடவேண்டும்; .புதிய அமெரிக்க கலாசாரத்தை உருவாக்குவோம் என்று அறைகூவல் விடுத்தார். 38 வயதில் அவர் வெளியிட்ட முதல் கட்டுரைத் தொகுப்பில் இவற்றைக் காணலாம்.
அதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தவுடன், 44-ஆவது வயதில் முதல் கவிதைத் தொகுப்பினை வெளியிட்டார். பின்னர் அடிமை ஒழிப்பு இயக்கத்திலும், பெண்ணுரிமை இயக்கத்திலும் ஈடுபட்டார்.
பிறந்த தேதி -மே 25, 1803
இறந்த தேதி- ஏப்ரல் 27, 1882
வாழ்ந்த ஆண்டுகள் – 78

இவரது இலக்கிய படைப்புகள் –
1836 – NATURE
1841 – ESSAYS
1844 – ESSAYS
1847 – POEMS
1850- REPRESENTATIVE MEN
1856- ENGLISH TRAITS
1860- THE CONDUCT OF LIFE
1867 – MAY DAY AND OTHER PIECES
1870- SOCIETY AND SOLITUDE
1893- NATURAL HISTORY OF INTELLECT
Xxxx



எனது முந்தைய கட்டுரைகளிலிருந்து …..
பிளாட்டோவும் நானும் ஒன்றே!
ரால்ப் வால்டோ எமர்சன் (R W EMERSON) என்பவர் அமெரிக்காவின் புகழ்மிகு கவிஞர், தத்துவ அறிஞர், கட்டுரையாளர்.
அவர் ஒரு முறை கிரேக்க அறிஞர் பிளாட்டோவின் நூல் ஒன்றை பக்கத்து வீட்டு கிராமத்தானுக்குப் படிக்கக் கொடுத்தார். அந்த கிராமத்து ஆசாமி கொஞ்ச நாட்களுக்குப் பின்னர் அதைத் திருப்பிக் கொடுத்தார்.
எமர்ஸன் கேட்டார்:
புஸ்தகத்தைப் படித்தீர்களா? எப்படி இருந்தது? உங்கள் அபிப்ராயம் என்ன?
அந்தப் பட்டிக்காட்டான் சொன்னான்,
படித்தேனே! பிளாட்டோ என்னைப் போலவே கொள்கை உடையவர். என்னுடைய அச்சுதான் அவர்!
xxxx

HITCH YOUR WAGON TO A STAR
அமெரிக்கக் கவிஞரும் கட்டுரையாளருமான ரால்ப் வால்டோ எமர்சன் (1803-1882) ஒரு கட்டுரையில் எழுதிய வாசகம் ஆங்கில நூல்களில் ‘ஊக்கமுடைமை’ பற்றிய சிறந்த மேற்கோளாகப் பயன்படுத்தப்படுகிறது. உனது வாகனத்தை (பிறர் உதவியுடன்) நட்சத்திரத்தை நோக்கி நகர்த்து ‘Hitch your wagon to a star’ என்றார். இதன் உட்பொருள் உயர்ந்த குறிக்கோள் உடையவனாக இரு. ஏற்கனவே வெற்றி பெற்றவரின் பாதையைப் பின்பற்று என்பதாகும்
இதில் வியப்பான விஷயம் என்ன வென்றால் இதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே சோழ மன்னன் கோபெருஞ்சோழன் சொல்லியிருக்கிறான்:–
புறம் 214 (கோப்பெருஞ் சோழன்): யானை வேட்டைக்குப் போகிறவன் வெல்வான். யானையுடன் திரும்பி வருவான். குறும்பூழ் வேட்டைக்குப் போவோன் அது இல்லாமலும் திரும்புவான். உயர்ந்த குறிக்கோளுடன் கூடிய உயர்ந்தோனாக விளங்குக. இமயம் போல் புகழ் அடைக.
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு (புறம் 214)
ஆங்கிலப் பழமொழிகள்
இதை வேறு சில ஆங்கிலப் பழமொழிகளிலும் காணலாம்.
He who aims at the moon may hit the top of a tree; he who aims at the top of a tree unlikely to get off the ground.
நிலவை எட்டிப் பிடிக்க முயல்பவன் மரத்தின் உச்சியையாவது தொடுவான்; மரத்தின் உச்சியை அடைய முயல்பவன், தரையை விட்டுக்கூட எழுதிருப்பது சந்தேகமே- என்கிறது ஆங்கிலப் பழமொழி.
See mickle, and get something; seek little and get nothing (mickle = much)
இன்னொரு பழமொழியும் இதை வலியுறுத்தும். ‘நிறையக் கேட்டால் கொஞ்சமாவது கிடைக்கும்; கொஞ்சம் கேட்டால் ஒன்றும் கிடைக்காது’ என்று சொல்கிறது இப்பழமொழி!
நன்கொடை வசூலிக்கப் போகிறவர்களுக்கு இது நன்கு விளங்கும். ஆயிரம் ரூபாய் நன்கொடை கேட்டால், கொடுப்பவன் பாதியாவது கொடுப்பான். விற்பனையாளர் தந்திரமும் இதுதானே! ஒரு பொருளின் விலையை ஆயிரம் ரூபாய் என்பான். நாம் நூறு ரூபாய்க்குத் தருகிறாயா? என்போம். கடைசியில் 500 ரூபாயில் பேரம் முடிவடையும். ஆக வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள் இருந்தால்தான் நாம் முன்னேறுவோம். குறிக்கோளே இல்லாதவர் இறந்தர்க்குச் சமம். மரக்கட்டையும் அவர்களும் ஒன்றே என்பான் வள்ளுவன் (குறள் 600).
வள்ளுவனும் ஊக்கமுடைமை என்னும் அதிகாரத்தில் இரண்டு குறள்களில் மிக அழகாகச் சொல்கிறான்:
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள் 595
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளாமை தள்ளினும் நீர்த்து– குறள் 596
ஆனால் மேற்கூறிய எல்லா மேற்கோள்களுக்கும் முன்னதாகவே கண்ணபிரான் இக்கருத்தை பகவத் கீதையில் முன்வைத்துவிட்டான்:-
உத்தரேத் ஆத்மனாத்மானம் நாத்மானம் அவசாதயேத் – பகவத் கீதை (6-5)
ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும். தன்னையே தன்னைத் தாழ்த்தக் கூடாது; உனக்கு நீயே நண்பன், நீயே பகைவன்.
புறநானூற்றில் இமயம் போல உயர்ந்து புகழ் அடைவாயாக (பாடல் 214) என்பது கீதையிலும் இருக்கிறது
(கீதை 11-33) எழுந்திரு ! புகழடை!! உத்திஷ்ட ! யசோ லப !!

—subham–
tags – பிரம்மா , அமெரிக்க கவிஞர், ரால்ப் வால்டோ எமர்சன் , Emerson, Brahma poem,