90,000 கடிதம், 500 புஸ்தகம் — அவர் பெயர் ஐசக் அஸிமோவ் (Post No.9851)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9851

Date uploaded in London –14 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

90,000 கடிதம், 500 புஸ்தகம் — அவர் பெயர் ஐசக் அஸிமோவ்

விஞ்ஞான கற்பனைக் கதைகளை (Science Fiction)  எழுதுவதில் உலகில் கொடிகட்டிப் பறந்தவர் ஐசக் அஸிமோவ்  ISAAC ASIMOV . ரஷ்யாவில் பிறந்து சிறு வயது முதல் அமெரிக்காவில் வளர்ந்த விஞ்ஞானி.

புதினங்கள் (Novels) பலவகை- காதல் கதைகள், பயங்கரக் கதைகள், பேய்-பிசாசு கதைகள், கொலை- துப்பறியும் கதைகள், சோக வாழ்வுக் கதைகள் என பலப் பல. சமீப காலத்தில் உருவான ஒரு வகை,  அறிவியலைப் பயன்படுத்தி என்ன என்ன அதிசயங்கள் நடக்கலாம் , என்ன என்ன குற்றங்கள் நடக்கலாம் என்ற புதிய வகை ஆகும். பெரும்பாலும் வெளி உலக வாசிகள் (E.T.)வருகை, அங்கே நாம் பயணித்தல் (Inter Galactic Travel)  , வெளி உலக வாசிகளுடன் போர் (Space War) என்று பல அதீத கற்பனைக் கதைகள் (Science Fiction) . இவற்றில் பெரும் வெற்றி அடைந்தவர் ஐசக் அஸிமோவ் .

ஐசக் அஸிமோவ் பிறந்த தேதி – ஜனவரி 2, 1920

இறந்த தேதி – ஏப்ரல் 6, 1992

வாழ்ந்த ஆண்டுகள் – 72

எழுதிய மற்றும் ‘எடிட்’ செய்த புஸ்தகங்கள் எண்ணிக்கை – 500

எழுதிய கடிதங்கள் – 90,000

விஞ்ஞான புனைக்கதைகளை (Science Fiction)  எழுதுவதில் 50 ஆண்டுக் காலத்துக்கு எழுதுவோர் போட்டி இன்றி புகழ் ஈட்டியவர் . ரஷ்யாவில் பிறந்த அவர், மூன்று வயதில் பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறி எட்டு வயதில் , அமெரிக்கக் குடி மகன் ஆனார்.

சிறுவனாக இருந்த பொழுதே அஸிமோவ் விஞ்ஞான விஷயங்களை ஆர்வத்தோடு பயின்றார். கார்ட்டூன் புஸ்தகங்களை படிப்பதற்கு அவருடைய தந்தை அனுமதி மறுத்தார். ஆனால் ஒரு புஸ்தகத்தில்  கதைகளுக்கு முன்னர் விஞ்ஞான (Science Wonder Stories) என்ற சொல் இருந்ததால்  அதை  தந்தை அனுமதித்தார்.

அந்தப் புஸ்தகம் முழுதும்  அறிவியலை அடிப்படையாகக் கொண்ட கதைகளே இருந்தன. ஐசக்கும் அவைகளில் மயங்கியனார் . கிட்டத்தட்ட அத்தகைய  புஸ்தகங்களுக்கு அடிமை ஆனார்.

17 வயதில் முதல் அறிவியல் கற்பனைக் கதையை எழுதினார். அதைப் படித்த அவருடைய தந்தை பிரபல சஞ்சிகையொன்றுக்கு (Prestigious Magazine) அனுப்பும்படி சொன்னார். அவரும் அவ்வாறே செய்தார் . அனால் பெருத்த ஏமாற்றம்; அந்தக் கதை வெளியாகவில்லை. ஆயினும் அந்த இதழின் ஆசிரியரான ஜான் கேம்ப் பெல் (John campbell) என்பவரைச் சந்தித்துப் பேசினார். அவர் இவருக்கு நல்ல யோசனைகளை வழங்கி நீண்ட காலத்துக்கு வழிகாட்டியாக இருந்தார். பின்னர் பல கதைகளையும் வெளியிட்டார்.

பள்ளிக்கூடத்தில் அசிமோவுக்குப் பிடித்த பாடம் அறிவியல்தான். 1948ம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் (Ph.D)  பட்டம் பெற்றார் 1949 முதல் 30 ஆண்டுகளுக்கு பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயோ கெமிஸ்ட்ரி (Bio Chemistry in Boston University) எனப்படும் உயிர் வேதியல் பாடத்தைக் கற்பித்தார்.

முப்பது வயதிலேயே பெப்பிள் இன் தி ஸ்கை (Pebble in the Sky) என்ற முதல் நாவலை வெளியிட்டார். ரோபோ(I, Robot) என்னும் இயந்திர மனிதன் பற்றிய புனைக் கதைகளை அதே ஆண்டில் வெளியிட்டார். 400 புஸ்தகங்களுக்கு மேல் அவர் வெளியிட்டார்.

ஆயினும் பெரும்பாலானவை பாமர மக்களுக்கு விஞ்ஞான விந்தைகளை விளக்கும் புஸ்த கங்கள் தான்.புதினங்கள் எவ்வளவு புகழ் சேர்த்தனவோ அவ்வளவு புகழை விஞ்ஞானப் புஸ்தகங்களும் சேர்த்தன. அவருக்கு அறிவியலென்பது அத்துப்படி ஆனதால்  எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும் அதன்  மூலம்

என்னென்ன அற்புதங்கங்கள் நிகழும் என்று  அறிவித்தார். படங்கள்  மூலம் காட்டினார். பல்வேறு விருதுகளையும் ஐசக் அசிமோவ் வென்றார். அவரது படைப்புகள் பல டெலிவிஷன் நிகழ்ச்சிகளுக்கும் திரைப்படங்களுள்ளும் அடிகோலின .

அவருடைய முக்கிய புஸ்தகங்கள்:

1950- PEBBLE IN THE SKY

1950 – I.ROBOT

1951 – THE STARS , LIKE DUST

1951- 53 – FOUNDATION (3 VOLUMES)

1954- THE CAVES OF STEEL

1957- THE NAKED SUN

1969- NIGHTFALL AND OTHER SSTORIES

1972- THE GODS THEMSELVES

1976- THE BICENTENNIAL MAN

1986- FOUNDATION AND EARTH

–SUBHAM

Tags- ஐசக் அஸிமோவ் , விஞ்ஞான கற்பனைக் கதை, Science Fiction) Isaac Asimov,

.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: