


Post No. 9863
Date uploaded in London –18 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆங்கில நாவல் ஆசிரியரும், கவிஞரும் கட்டுரையாளருமான ஜார்ஜ் ஆர்வெல்( GEORGE ORWELL ) லின் உண்மைப் பெயர் எரிக் ஆர்தர் பிளேர்( ERIC ARTHUR BLAIR ) ஆகும். அவர் எழுதிய அனிமல் ஃபார்ம் (ANIMAL FARM) மற்றும் நைன்டீன் எய்ட்டி போர் (NINETEEN EIGHTY FOUR) (1984) ஆகிய இரண்டும் புகழ் பெற்ற நாவல்கள் ஆகும். அரசியல் நிலவரத்தை ( SATIRE) கேலியும் கிண்டலும் செய்யும் பழி கரப்பு அங்கதம் நிறைந்தவை அவை.
“எல்லா பிராணிகளும் சமமானவை (சம உரிமை உள்ளவை); ஆனால் சில பிராணிகள் மற்றவற்றைவிட கொஞ்சம் கூடுதல் சமத்துவம் உடையவை “ (All animals are equal, but some are more equal than others) என்ற இவருடைய பொன்மொழி அரசியலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சமத்துவம் என்று சொல்லிக்கொண்டு ஏற்ற தாழ்வுகளை ஆதரிக்கும் அரசியல்வாதிகளை சாடும் வாசகம் இது.
ஆங்கில தம்பதியருக்கு இந்தியாவில் பிறந்தவர் ஜார்ஜ். ஆயினும் குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். லண்டனில் ஈடன் (Eton College) கல்லூரியில் படித்த பின்னால் 1922 முதல் 1927 வரை பர்மாவில் போலீஸ் வேலையில் இருந்தார் . ஐரோப்பாவுக்குத் திரும்பி வந்த பின்னர் குறைந்த சம்பள வேலைகளை மேற்கொண்டு அதே நேரத்தில் தான் எழுதியவற்றை அச்சிட முயன்றார்.
முப்பது வயதில் முதல் புஸ்தகம் (DOWN AND OUT IN PARIS AND LONDON)
வெளியானது. அதில் தன்னுடைய வாழ்க்கையை விவரித்தார். பின்னர் எழுதிய நாவல் (THE ROAD TO WIGAN PIER) ஒன்றில் அந்தக் காலத்தில் பிரிட்டனில் உழைக்கும் வர்க்கம் பட்ட கஷ்டங்களை சித்தரித்தார்.
ஸ்பெயின் நாட்டின் உள் நாட்டு யுத்தத்தில் (Spanish Civil War) ) இடது சாரி ரிபப்ளிகன் தரப்பில் போரிட்டு காயம் அடைந்தார். இடதுசாரி எண்ணங்கள் இருந்தபோதும் ரிபப்ளின்களை ஆதரித்த கம்யூனிஸ்டுகளை வெறுத்தார் . அவர்களைத் தாக்கி ஒரு நாவலும் (HOMAGE TO CATALONIA) எழுதினார்.
இரண்டாவது உலகப் போர் காலத்தில் ராணுவ சேவை செய்யும் தகுதி இல்லாததால் பி.பி.சி.யில் பணியாற்றினார்.உலகப் போர் முடியும் தருவாயில் அனிமல் பார்ம் (Animal Farm) கதை எழுதினார். இதில் மனித ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடும் பிராணிகள் அவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு புது ஆட்சி அமைக்கின்றன. பன்றிகள் ஆட்சியாளர் பதவியில் அமர்கின்றன அதாவது புரட்சி என்பது எப்படி கேலிக் கூத்து ஆகிவிடும் என்பதை படம்பிடித்துக் காட்டுவதே அவர் நோக்கம்.
‘1984’ என்ற தலைப்பில் நாவல் எழுதிய பின்னர் காச நோயால் (TB) இறந்தார். 1984 நாவலில் சர்வாதிகார ஆட்சியில் எப்படி பயந்து சாக வேண்டி இருக்கிறது என்பதை வருணிக்கிறார். எப்போதும் (Big Brother is Watching You) பெரிய ஆசாமி உன்னைக் கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்ற வசனம் அதில் திரும்பத் திரும்ப வரும். இதுவும் பிற்காலத்தில் அடிக்கடி பயன்படும் பொன்மொழியாக மாறியது.
ஜார்ஜ் ஆர்வெல்
பிறந்த தேதி – ஜனவரி 23, 1903
இறந்த தேதி – ஜனவரி 21, 1950
வாழ்ந்த ஆண்டுகள் – 46
அவருடைய நூல்கள்:–
1933- DOWN AND OUT IN PARIS AND LONDON
1934 – BURMESE DAYS
1935 – A CLERGYMAN’S DAUGHTER
1936- KEEP THE ASPIDISTRA FLYING
1937- THE ROAD TO WIGAN PIER
1938- HOMAGE TO CATALONIA
1939- COMING UP FOR AIR
1945 – ANIMAL FARM
1949- NINETEEN EIGHTY- FOUR
–subham–




tags- அனிமல் ஃபார்ம் , ஜார்ஜ் ஆர்வெல், George Orwell