நோபல் பரிசு பெற்ற தாகூர் (Post No.9881)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9881

Date uploaded in London –22 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்தியாவில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் ரவீந்திரநாத் தாகூர். அவர் வங்காளி மொழிக் கவிஞர். நாடக ஆசிரியர்,ஓவியர் ஆவார் . இவர் எழுதிய கீதாஞ்சலி என்னும் நூலுக்காக 1913ல் நோபல் பரிசு பெற்றார். ஐரோப்பியர் அல்லாத ஒருவருக்கு இப்பரிசு கிடைத்தது அதுவே முதல் தடவை.

தாகூர், கல்கத்தாவில் பிராமண குடும்பத்தில் பிறந்தார். பாதிக் கல்வியை இங்கிலாந்தில் கற்றார். இவரது குடும்பம் பணக்கார குடும்பம். எட்டு வயதிலேயே இவருக்குக் கவிதை எழுதும் ஆற்றல் வந்தது. இவர் எழுதிய ஜனகண மன… இந்தியாவின் தேசீய கீதமாகத் திகழ்கிறது. இதே போல எங்களது தங்க வங்காளம் – அமர் சோனார் பங்களா – வங்கதேசம் என்னும் நாட்டின் தேசீய  கீதமாக உளது.

தாகூருக்கு 17 வயதானபோது அவருடைய கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. 30 வயதானபோது கிழக்கு வங்கத்தில் உள்ள (இப்போது அது வங்கதேசம் என்னும் நாடு) குடும்ப நிலன்புலன்களைக் கவனிக்கச் சென்றார். அங்கு திரட்டிய கிராமீய கதைகள், நாட்டுப்புற கதைகளையும் நம்பிக்கை களையும் பிற்காலப்  படைப்புகளில் பயன்படுத்தினார்.

தாகூர் பழைய சம்பிரதாய நடையை, பாணியைக் கைவிட்டு, மக்கள் பேசும் மொழியில் எழுதினார். இது வங்காளி மொழியில் பெரிய மாற்றங்களைக் கொணர்ந்தது. இது சம்பிரதாயக் கவிஞர்கள் அறிஞர்களுக்குப் பிடிக்காததால் ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது ஆயினும் தாகூர் தளராமல் இந்திய கலாசாரத்தை மேலை உலகில் பரப்பும் பணியை எழுத்து மூலமாக மேற்கொண்டார்.அதேபோல மேற்கத்திய கலாசாரம் குறித்து வங்காளி மொழியில் எழுதினார்.

இதனால் அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் தாகூரின் புகழ் பரவியது. இந்திய கலாசாரம், மேற்கத்திய கலாசாரம், தத்துவம் ஆகியவற்றை இணைத்து ஒரு கல்வி நிறுவனத்தை உருவாக்கினார். இயற்கை அழகு கொஞ்சும் சாந்திநிகேதன் என்ற இடத்தில் இந்த நிறுவனம் பிற்காலத்தில் விஸ்வபாரதி பல்கலைக் கழகமாக மாறியது. .இறைவனின் படைப்புகள் எல்லாம் ஒன்றே என்றும் அவற்றில் ஒருமைப்படுத்தும் சிந்தனை இழையோடுகிறது என்றும் நம்பினார். பிரிட்டிஷ் ஆடசியிலிருந்து இந்தியா விடுதலை பெறவேண்டுமென்றும் குரல் எழுப்பினார். இவர் கவிதை, நாடகங்களோடு தத்துவ நூல்கள், நாவல்களையும் எழுதியுள்ளார்.

1913ல் இவருடைய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலிக்கு நோபல் பரிசு கிடைத்தது. வங்காளி மொழியில் தான் எழுதிய கவிதைகள் பலவற்றை எடுத்து அவரே மொழிபெயர்த்து ஆங்கிலத்தில் வெளியிட்டதால் இந்தப் பரிசினைப் பெற முடிந்தது. பக்தி என்பது இதன் அடித்தளமாக அமைந்துள்ளது. ‘நான் பாடுவதெல்லாம் உனக்காகவே’ என்பது இதில்  இழையோடும் கருத்து ஆகும் இந்த நூல் வெளியானபோது அவருக்கு வயது 49.  இரண்டாயிரத்தும் மேலான பாடல்களுக்கு இசையும் அமைத்தார். அவை இன்றும் மேற்கு வங்க மாநிலத்திலும், வங்கதேசத்திலும்  பாடப்படுகின்றன. இவருடைய பாடல்களை சுவாமி விவேகானந்தரும் பாடியுள்ளார். எழுபது வதில் ஓவியம் தீட்டத் துவங்கினார். அதிலும் சிறந்து விளங்கினார்.

தாகூர் பிறந்த தேதி மே 7, 1861

இறந்த தேதி – ஆகஸ்ட் 7, 1941

வாழ்ந்த ஆண்டுகள் – 80

இலக்கியப் படைப்புகள்:-

1878- A POET’S TALE

1894- THE GOLDEN BOAT

1902 – BINODINI (VINOTHINI)

1910- GITANJALI

1910- GORA

1914 – CHITRA

1916- THE HOME AND THE WORLD

1931 – THE RELIGION OF MAN

1939- SHYAMA

1940-  MY BOYHOOD DAYS

–SUBHAM–tags- நோபல் பரிசு, ரவீந்திரநாத் தாகூர்., வங்காளி மொழி, ஜனகண மன, கீதாஞ்சலி

TAGS- நோபல் பரிசு, தாகூர் ,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: