
Post No. 9861
Date uploaded in London –17 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிராண்டி சகோதரிகள் (Bronte Sisters) மூவருக்கும் இடையேயான மிகப்பெரிய ஒற்றுமைகள் – மூவரும் நாவல் எழுதினர். மூவரும் 38 வயதுக்குள் இறந்தார்கள்!
ஆங்கிலத்தில் அதிகம் படிக்கப்பட்ட நுல்களில் Jane Eyre ஜேன் அயர் நாவலும் Wuthering Heights வுதெரிங் ஹைட் நாவலும் குறிப்பிடத்தக்கவை உணர்ச்சி வசமூட்டும் நாவல்கள் இவை .
****


ஷாலட் பிராண்டி CHARLOTTE BRONTE
பிறந்த தேதி – ஏப்ரல் 21, 1816
இறந்த தேதி – மார்ச் 31, 1855
வாழ்ந்த ஆண்டுகள் – 38
படைப்புகள் PUBLICATIONS
1847 – JANE EYRE
1849- SHIRLEY
1853 – VILLETTE
PUBLISHED AFTER SHE DIED-
1857 – THE PROFESSOR
XXXXX
எமிலி EMILY BRONTE
பிறந்த தேதி -ஜூலை 30, 1818
இறந்த தேதி – டிசம்பர் 1, 1848
வாழ்ந்த ஆண்டுகள் – 30
படைப்புகள் PUBLICATIONS
1847- WUTHERING HEIGHTS
XXXX
ஆன் ANNE BRONTE
பிறந்த தேதி – ஜனவரி 17, 1820
இறந்த தேதி – மே 28, 1849
வாழ்ந்த ஆண்டுகள் – 29
படைப்புகள் PUBLICATIONS
1847- AGNES GREY
1848 – THE TENANT OF WILDFELL HALL
XXXX
மூவரும் வடக்கு இங்கிலாந்தில் யார்க்ஷைர் பொட்டல்காட்டுப் பகுதியில் பிறந்தார்கள்.மூத்தவள் ஆன் Anne பிறந்தவுடன் தாயார் இறந்தார்.
அவருடன் பிறந்த 4 சகோதரிகளையும் ஒரு சகோதரனையும் தந்தையும் அத்தையும் வளர்க்க வேண்டியதாயிற்று . அவரோ சமயப் பிசாரகர். இரண்டு மூத்த சகோதரிகள் இளம் வயதில் இறந்தனர். ஏனையோர் வீட்டிலேயே கல்வி கற்றனர். புதர்க் காடுகளில் (மூர் moor ) விளையாடி பொழுதைக் களித்தனர். வீட்டிலுள்ள புஸ்தகங்களை எல்லாம் படித்து முடித்தனர்.பள்ளிக்கூடம் சென்ற நாட்கள் அதிகம் இல்லை. ஆயினும் ஆசிரியராகப் பணியாற்றினர் அல்லது பள்ளி நிர்வாகி பதவி வகித்தனர். சாலட் , எமிலி ஆன் ஆகிய மூன்று சகோதரிகளும் சேர்ந்து 846ல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டனர்.அவற்றில் எமிலியின் கவிதைகள் சுடர்விட்டுப் பிரகாசித்தன. அவை விற்று முடிப்பதற்குள் மூன்று சகோதரிகளும் கதை எழுத உட்கார்ந்தனர்.ஆளுக்கு ஒரு நாவலை எழுதி 1847ல் வெளியிட்டனர்.
ஆன், வயது 27, எழுதியது அக்கனஸ் க்ரே.
எமிலி , வயது 29, எழுதியது வுதெரிங் ஹைட்ஸ்
ஷாலட் , வயது 31, எழுதியது ஜேன் அயர்
மூவரும் தன் சொந்த அனுபவங்களை உணர்ச்சி பொங்க எழுதினார்கள் . இம்மூன்றில் கடைசி இரண்டு நாவல்களும் பெரிய வரவேற்பைப் பெற்றன.
ஒரு துணிச்சலான ஏழைப் பெண், கடுமையான குணம் உடைய நிலச் சுவான்தார் மீது காதல் கொண்ட கதை ஜேன் அயர் கதையாகும்.
யார்க் க்ஷைர் பொட்டல் காட்டில் (Yorkshire Moor) நடக்கும் காதல், வெறுப்பு , பழிவாங்குதல் ஆகியவற்றை வர்ணிக்கிறது வுதெரிங் ஹைட்ஸ் . இதன் மொழி அமைப்பு வேகம் மிக்கது.வேறு எந்த விக்ட்டோரியன் கால நாவலிலும் இத்தகைய வன்மொழியைக் காணமுடியாது.
1849ம் ஆண்டில் எமிலியும்,ஆனும் சகோதரனும் டிபி TB எனும் காச நோயால் இறந்தனர்.. 1854ல் ஷாலட்டு ஒரு மதப் பிரசாரகரை மணந்தார். மறு ஆண்டில் பிரசவ வேதனையில் இறந்தார் .
–SUBHAM–
TAGS – மூன்று சகோதரிகள், எமிலி, ஸாலட், ஆன் , பிராண்டி




