உலக இந்து சமய செய்தி மடல் 25-7-2021 (Post No.9893)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 9893

Date uploaded in London –25 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை JULY 25 -ஆம் தேதி —  ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

அரசு கட்டுபாட்டிலிருந்து  கோவில்களை  விடுவிக்க விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்

அரசு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோவில்களை விடுவிக்க வழிவகுக்கும் சட்டத்தை இயற்றக்கோரி, மத்திய அரசை, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

ஹரியானாவின் பரிதாபாதில் நடந்து முடிந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இரண்டு நாள் மாநாட்டில், இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார் கூறியதாவது:தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு கட்டுப்பாட்டின்கீழ் பல கோவில்கள் உள்ளன.கோவில்களில் யார் பூஜை செய்ய வேண்டும், எப்படி பூஜை செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை, அரசு ஏன் தீர்மானிக்க வேண்டும்?

எனவே, அரசு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள கோவில்களை ஹிந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வழிவகுக்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்.அதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதேபோல் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்படுவதை தடுக்கும் கடுமையான சட்டத்தை இயற்றவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

XXXX

இந்து கடவுள், பிரதமர், அமைச்சரை விமர்சித்த பாதிரியார் கைது

இந்து கடவுளை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பனங்கரையில் சர்ச் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பிரார்த்தனை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதை கண்டித்து அருமனையில் அருமனை கிறிஸ்தவ இயக்கம், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை, முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்து கடவுள், , பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என பலர் குரல் எழுப்பினர்.

இந்நிலையில் சென்னைக்கு காரில் 4 பேருடன் தப்பி செல்கிறார் என்ற தகவல் போலீசுக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து மதுரை கருப்பாயூரணி அருகே சோதனை நடத்திய போது ஒரு காரில் பாதிரியார் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் கைது செய்தனர்.


சென்னை சென்று வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.



பாதிரியாருக்கு உடல்நலம் குன்றியதைத் தொடர்ந்து அவர் பாளையம்கோட்டை சிறையிலுள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கடைசியாக வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

xxxx

உடுப்பி அருகே ரூ.2 கோடியில் விநாயகர் கோவில் கட்டிய கிறிஸ்தவ தொழில் அதிபர்

உடுப்பியில் ஒரு கிறிஸ்தவ தொழில் அதிபர் ரூ.2 கோடி செலவில் விநாயகர் கோவிலை கட்டி அந்த கோவிலை இந்து பக்தர்களுக்கு அர்ப்பணித்து சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டி உள்ளார். 

அதுபற்றிய விவரம் வருமாறு:-

உடுப்பி மாவட்டம் சிருவா பகுதியை சேர்ந்தவர் கேபிரியல் நாசரேத் (வயது 77). இவர் தொழில் அதிபர் ஆவார். கேபிரியலின் தந்தை பேபியன் செபஸ்டின் உயிரிழப்பதற்கு முன்பு கேபிரியலுக்கு 15 சென்ட் நிலத்தை கொடுத்து இருந்தார். பின்னர் உடல்நலக்குறைவால் செபஸ்டினும், அவரது மனைவி சபீனாவும் உயிரிழந்து இருந்தனர்.

ரூ.2 கோடி செலவில்….

இந்த நிலையில் தனது தந்தை, தாயின் நினைவாக 15 சென்ட் நிலத்தில் ஒரு விநாயகர் கோவிலை கட்ட கேபிரியல் முடிவு செய்தார். அதன்படி ரூ.2 கோடி செலவில் சித்தி விநாயகர் கோவிலையும், அதன் அருகே அர்ச்சகர் தங்க ஒரு வீட்டையும் கேபிரியல் கட்டி முடித்தார்.அந்த கோவிலுக்குள் 36 அங்குலம் விநாயகர் சிலை உள்ளது. பின்னர் அந்த கோவிலை இந்து பக்தர்களுக்கு அவர் அர்ப்பணித்தார். இந்த கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு கேபிரியலின் நண்பர்களான சதீஷ் ஷெட்டி, ரத்னாகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

நண்பர்களுக்காக…

இதுகுறித்து கேபிரியல் கூறும்போது, நான் கடந்த 1959-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்ததும் வேலைக்காக மும்பைக்கு சென்றேன். மும்பையில்  சித்தி விநாயகர் கோவிலுக்கு தினமும் செல்வேன். அப்போது எனக்கு சொந்த செலவில் விநாயகர் கோவில் கட்ட வேண்டும் என்று ஆசை வந்தது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சிருவாவுக்கு வந்த நான் கோவிலை கட்ட முடிவு செய்து தற்போது கட்டி முடித்து இந்து நணபர்களுக்கு அர்ப்பணித்து உள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

XXXX

கோவில் யானை பராமரிப்பு; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


-கோவில் யானைகளை பெரிய இடங்களில், இயற்கை சூழலில் பராமரிக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த, விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழக கோவில்களில் 34 யானைகள், புதுச்சேரியில் உள்ள கோவிலில் ஒரு யானையும் பராமரிக்கப்படுகிறது. அறநிலையத் துறையின் அலட்சியத்தால், 2016 முதல், 2019 வரை, மூன்று கோவில் யானைகள் இறந்தன.

உடல் பருமன், காலில் ஏற்படும் பிரச்னையால், யானைகள் இறக்கின்றன.கோவில் யானைகளை நடை பயிற்சிக்கு கூட்டிச் செல்வதில்லை; முறையான உணவு வழங்கப்படுவது இல்லை., கோவில் அருகில் இயற்கை சூழல் நிறைந்த இடத்தில், யானைகளை பராமரிக்க வேண்டும். ஆண் யானைக்கு துணையாக, பெண் யானையையும் பராமரிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


.மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், விசார ணைக்கு வந்தது. மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Xxxx

விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ 37 கோடியில் தொங்கு பாலம்

கன்னியாகுமரி; சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 140 மீட்டர் தூரத்திற்கு கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் தொங்கு பாலம் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே 140 மீட்டர் தூரத்திற்கு தொங்கு பாலம் அமைக்கப்படும்

இதற்காக ரூ.37 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கடலுக்கு நடுவே பாலம் அமைக்க வேண்டியிருப்பதால் சென்னை ஐஐடி பேராசிரியர்களின் கருத்துகளையும் கேட்டுள்ளோம். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சுற்றுலா மாளிகை கட்டப்படும்.

xxxxxxx

திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தான அதிகாரி வேண்டுகோள்



திருப்பதியின்புனிதத் தன்மை, இயற்கை சுற்றுச்சூழலையை பாதுகாக்கவும் தேவஸ்தானம் கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது. ஆயினும் பக்தர்கள் பலர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை கொண்டு வருகின்றனர்.


அலிபிரி சோதனை சாவடியில் பக்தர்களின் உடைமைகள் முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் இருந்தால் அங்கேயே அப்புறப்படுத்த ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமலையில் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியில் பக்தர்கள் பயன்படும் வகையில் குடிநீர் தொட்டி ஆங்காங்கே அமைக்கப் பட்டுள்ளது. அதன் அருகில் கோப்பைகள், டம்ளர்கள் வைக்கப்பட்டுள்ளது. இவை தினசரி சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.

எனவே பக்தர்கள் குடிநீர் தேவைக்காக அவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்துள்ளார்.

Xxx

திருப்பதியில் DRONE டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம்: தேவஸ்தானம் முடிவு

திருப்பதி கோயிலை Drone டுரோன் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில், டிஆர்டிஓD R D O தயாரித்துள்ள டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

தொழில்நுட்ப செயல் விளக்க கூட்டம், கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 6 ம் தேதி நடந்தது. முப்படை அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு துறை தலைவர் கோபிநாத்தும் கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து, அந்த drone டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை வாங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. அத்துமீறி வரும் டுரோன்களை கண்டுபிடித்து, அதனை தடுத்து நிறுத்தி அழிக்கும் வகையில், டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை டிஆர்டிஓ தயாரித்து உள்ளது. 4 கி.மீ., தூரத்தில் வரும் டுரோனை கண்டறியும் இந்த தொழில்நுட்பம், அதன் தொலைதொடர்பு வசதியை துண்டித்து 3 கி.மீ., தொலைவில் அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒரு அமைப்பின் விலை தற்போது ரூ.25 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த தொழில்நுட்பத்தை தயாரித்து உள்ள டிஆர்டிஓ, அதனை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான உரிமத்தை பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்திடம் வழங்கி உள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டியின் ஆலோசனையை தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த தொழில்நுட்பத்தை வாங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Xxxxx

உலகம் முழுதும் இந்திய பாரம்பரிய கலை: குரு பவுர்ணமி விழாவில் சத்குரு JAGGI VASUDEV பேச்சு

”ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்கள் இந்திய பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்வார்கள்,” என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு JAGGI VASUDEV தெரிவித்தார்.

குரு பவுர்ணமியை முன்னிட்டு, சத்குருவின் சிறப்பு சத்சங்கம் ஆன்லைன் வாயிலாக நடந்தது. இதில், ஈஷா சம்ஸ்க்ருதி மாணவர்களின் இசை, நடனம் மற்றும் களரி நிகழ்ச்சி நடந்தது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு JAGGI VASUDEV பேசியதாவது:


மனிதர்கள் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருப்பதற்கு ஏராளமான சாகசம் செய்கின்றனர். துன்பம், இன்பம், கோபம், அமைதி என மனித அனுபவங்கள் அனைத்தும் நமக்குள் இருந்து தான் வருகிறது.

ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள், சிறு வயதில் இருந்தே, இசை, நடனம், களரி போன்றவற்றில், தங்கள் வாழ்வை முதலீடு செய்துள்ளனர். 24 மணி நேரமும் இந்த கலைகளுடன், வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கற்ற கலைகளை, தற்போது மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க தயாராகிவிட்டனர். அதற்காக, ‘புராஜக்ட் சம்ஸ்க்ருதி’ என்ற திட்டம், இந்த குரு பவுர்ணமி நாளில் துவங்கப்பட்டுள்ளது. இந்திய பாரம்பரிய கலைகளை உலகம் முழுவதும் எடுத்து செல்வர். இவ்வாறு, JAGGI VASUDEV  தெரிவித்தார்.

Xxxxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN

நன்றி, வணக்கம்

tags-Tamil Hindu, News roundup, 25721

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: