நோபல் பரிசை வாங்க மறுத்த நாவல் ஆசிரியர் ஷான் பால் சார்த்ர (Post.9891)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9891

Date uploaded in London –25 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகப் புகழ் பெற்ற பிரஞ்சு மொழி நாவல் ஆசிரியர் , நாடக ஆசிரியர், தத்துவ ஞானி ஷான் பால் சார்த்ர JEAN PAUL SARTRE   1964-ம் ஆண்டு இலக்கிய நோபல் பரிசை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார்  “எழுத்தாளர்களை ஒரு நிறுவனம் போல நடத்துவதை  தான்  ஏற்க முடியாது” என்று சொல்லிவிட்டார்.

இருபதாம் நூற்றாண்டின்  தலை சிறந்த சிந்தனையாளர்களில் (THINKER ) ஒருவர்; பெரிய தத்துவ ஞானி (PHILOSOPHER) ; புகழ்பெற்ற புதின எழுத்தாளர் (NOVELIST) ஷான் பால் சார்த்ர,  பாரிஸ் நகரில் பிறந்து அங்கேயே கல்வி கற்றார். வாழ்நாளின் பெரும் பகுதியை பாரிஸ் நகரிலேயே கழித்தார். மாணவப் பருவத்திலேயே சிமோன் த பொவ்வார்  (SIMONE DE BEAUVOIR)  என்ற பெண்ணைச் சந்த்தித்து துணைவராக ஏற்றார் . அவர் இருபதாம் நூற்றாண்டின் பெண்ணிய (FEMINIST WRITER) எழுத்தாளர்களில் முன்னனியில் நின்றவர் ஆவார்.

ஷான் பால் சார்த்ர , பட்டம் பெற்ற பின்னர் ஆசிரியர் பணியில் அமர்ந்தார். தத்துவ இயலைக் கற்பிக்கும்போதே எழுத்துத் துறையில் நுழைந்தார். 33 வயதில் நாசியா NAUSEA என்ற நாவலை எழுதி அச்சிட்டார். அதில் தான் நம்பிய புதிய தத்துவக் கருத்தைப் பரப்பினார். அந்தக் கருத்துக்கள் பிற்காலத்தில் ஒரு தத்துவ நூலாகவும் BEING AND NOTHINGNESS  வெளிவந்தது

இரண்டாவது உலகப் போரில் பிரெஞ்சு ராணுவத்தில் பணியாற்றினார். ஹிட்லர் தலைமையிலான ஜெர்மன் ராணுவம் இவரைப் பிடித்தது. ஆனால் அங்கிருந்து தப்பி ஓடினார் . ஜெர்மானிய ஆக்ரமிப்பைக் கண்டித்து எழுதினார். போர் அனுபவத்தால் இவர் அரசியலில் காலடி எடுத்துவைத்தார். இடதுசாரிக் கருத்துக்களை முன்வைத்து, தனது தத்துவ நூல்களில் கம்யூனிச விதைகளை விதைத்தார்; தீவிர இடதுசாரிக் கட்சியைத் துவக்கினார் .

நாவல்கள் எழுதுவதைவிட நாடகம் எழுதுவதில் முனைந்தார். உலக மஹா யுத்தம் முடியும் தருவாயில் அவருடைய நோ எக்சிட்  NO EXIT நாடகம் மேடை ஏறியது மூன்று ஆட்கள் ஒரு அறையில் சிக்கிக் கொள்கின்றனர். போகப்போக அது ஒரு நரக வாழ்வு என்பதை அவர்கள் உணர்கிறார்கள் என்பதே இந்த நாடகத்தின் மையக்  கருத்து.

அரசியல் பற்றியும் தார்மிக நெறிகள் பற்றியும் சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களை  சுவையான நாடகக் கதைகளிடையே வைத்தார். வாழ்நாள் முழுதும் அரசியல் கருத்துக்களை விடாப்பிடியாக , குரங்குப் பிடியாகப் பிடித்துக்கொண்டார். அமெரிக்கா நடத்திய வியட்நாம் போரையும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் அல்ஜீரியா நாட்டை பிரான்ஸ் ஆளுவதையும் கண்டித்தார்.

பிறந்த தேதி – ஜனவரி 21, 1905

இறந்த தேதி – ஏப்ரல் 15, 1980

வாழ்ந்த ஆண்டுகள் – 74

எழுதிய நூல்கள் :–

PUBLICATIONS

1938- NAUSEA

1939- INTIMACY

1943- THE FLIES

1943- BEING AND NOTHINGNESS

1944 – NO EXIT

1945 – THE AGE OF REASON

1945 – THE REPRIEVE

1948 – DIRTY HANDS

1959- THE CONDEMNED OF ALTONA

1960 – THE CRITIQUE OF DIALECTICAL MATERIALISM

–SUBHAM—

tags- பிரஞ்சு மொழி ,நாவல் ஆசிரியர் , நாடக ஆசிரியர், தத்துவ ஞானி, ஷான் பால் சார்த்ர, JEAN PAUL SARTRE

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: