விக்டோரியன் கால புகழ் மிகு கவிஞர் ஆல்ப்ரெட் டென்னிஸன் (Post No.9900)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9900

Date uploaded in London –27 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

விக்டோரியன்  காலத்திய புகழ் மிகு கவிஞர் ஆல்ப்ரெட் டென்னிஸன் ALFRED TENNYSON ஆவார்.

இசை நயம் மிக்க உணர்ச்சி கொப்பளிக்கும் சிறிய பாடல்களை ஆங்கிலத்தில் லிரிக் LYRIC என்பர். அவைகளை எழுதுவதில் அதி சமர்த்தர் டென்னிசன்;  அவருடைய யுலிஸிஸ் ULYSSES கவிதையைப் படித்தவர்களுக்கு இது புரியும்

ஆல்ப்ரெட் டென்னிஸன், ஒரு கிறிஸ்தவ மத போதகரின் மகன். அவரே அவருக்குக் கல்வி கற்பித்தார். கவிதைகள் பற்றி ஆர்வத்தையும் உண்டாக்கினார். இதனால் அவர் 15 வயதிலேயே கவிதை எழுதினார். பைரன் பிரபு பாணியில் கவிதை எழுதத் துவங்கினார். BYRON பைரன், இவருக்கும் முந்தைய பெருங் கவிஞர்.

18 வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அப்போது அவருடைய சகோதரர்கள் எழுதிய கவிதைகளுடன் இவர் கவிதையும் புஸ்தகமாக வெளிவந்தது. அங்கு படிக்கையில் ஆர்தர் ஹாலம் ARTHUR HALLAM என்பவருடன் நட்பு மலர்ந்தது. டென்னிசன் தொடர்ந்து கவிதைகளை எழுதி வந்தார்

இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பில் மிகவும் பிரபலமான மரியானா MARIANA இடம்பெற்றது. இந்தத் தொகுப்பு விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தது. பலர் குறையும் சொன்னார்கள். அடுத்த தொகுப்பில் மிகவும் பிரபலமான THE LOTUS EATERS ‘லோட்டஸ் ஈட்டர்ஸ்’ பாடலும் THE LADY OF SHALOTT ‘தி லேடி ஆப் தி ஷலோட்’ ட்டும் இடம்பெற்றன. இதற்கு அடுத்த ஆண்டில் அவரது ஆப்த நண்பர்  ஆர்தர் ஹாலம் ARTHUR HALLAM இறந்தார். இது டென்னிசனுக்கு பெரிய மனத் தொய்வை உண்டாக்கியது. அடுத்த ப த்து ஆண்டுகளுக்கு கவிதை எழுதிய போதும் எதையும் வெளியிடாமல் அமைதி காத்தார்.

1842ல் டென்னிசன் வெளியிட்ட இரண்டு தொகுதி கவிதைகளில் ஆர்தர் பற்றிய கவிதையும் யூலிஸிஸ் ULYSSES கவிதையும் இருந்தன. இவை பெரும் வரவேற்பைப் பெற்றன இதைத் தொடர்ந்து அவர் 1850-ல் ஆஸ்தான கவிஞராக POET LAUREATE  நியமிக்கப்பட்டார். அவர் புகழ்  எங்கும் பரவியது. . அதே ஆண்டில் ஹாலம் நினைவாக ‘இன் மெமோரியம்’ IN MEMORIAM கவிதையை எழுதினார். இது அவருடைய மிகச் சிறந்த படைப்பாகும்.

பின்னர் வெளியான MAUD மாட் தொகுப்பில் தான், ‘சார்ஜ் ஆப் தி லைட் ப்ரிகேட்’ CHARGE OF THE LIGHT BRIGADE அச்சாகியது பின்னர் ஆர்தர் கதைகளைப் பிரதிபலிக்கும் ‘ஜடில்ஸ் ஆப் தி கிங்’  IDYLLS OF THE KING என்ற காவியத்தை  எழுதினார்.

பிறந்த தேதி – ஆகஸ்ட் 6, 1809

இறந்த தேதி – அக்டோபர் 6, 1892

வாழ்ந்த ஆண்டுகள் – 83

PUBLICATIONS

1827- POEMS BY TWO BROTHERS

1830- POEMS, CHIEFLY LYRICAL

1832- POEMS

1842- POEMS- TWO VOLUMES

1847- THE PRINCESS

1850- IN MEMORIAM

1855- MAUD

1859-85- IDYLLS OF THE KING

1884 – BECKETT

1892- THE FORESTERS

—SUBHAM-

ALSO READ…………..

டென்னிசன் மாக்ஸ்முல்லர் சம்பவங்கள் | Tamil and …

https://tamilandvedas.com › tag › ட…

· Translate this page

22 Apr 2016 — Tagged with டென்னிசன் மாக்ஸ்முல்லர் சம்பவங்கள் … (for old articles go to tamilandvedas.com OR …

Havanas | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ha…

  1.  

Translate this page

21 Apr 2016 — Max Muller about Tennyson: Habits die hard! (Post No 2745). 610-Max-Mueller-India-Stamp-1974-225×300. Compiled by London swaminathan.

TAGS – கவிஞர், ஆல்ப்ரெட் டென்னிஸன், டென்னிசன், TENNYSON, யூலிஸிஸ், ULYSSES

Leave a comment

2 Comments

  1. Kannan B

     /  July 27, 2021

    When i read this my memory goes back to my college days . in those days we hadProse, poetry &Shakespeare papers. I readThe Lotus Eaters & Ulysses. Your captionin the beginning comes as the concludinglines of Ulysses,  am i correct?Very absorbing article.Kannan, BNew DelhiSent from my Samsung Galaxy smartphone.

  2. THANKS FOR YOUR COMMENTS. YES, THE FAMOUS QUOTE COMES AT THE END OF ULYSSES. IT SHOWS THE INDOMITABLE SPIRIT OF HUMAN BEINGS. . IT IS LIKE OUR BHAGAVD GITA QUOTE ‘UTHTHISHTA! YASO LABHA!’

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: