வெள்ளி பற்றிய சுவையான தகவல்கள் – – Part 1 (Post No.9908)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9908

Date uploaded in London –29 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இதுவரை 35 தனிமங்களின்/மூலகங்களின் அற்புதங்களை கண்டோம். இன்று வெள்ளி SILVER என்னும் உலோகம் பற்றிய செய்திகளை அறிவோம்.

பல நாடுகளில் கிணறுகளிலும், குளங்களிலும், புனித நீர் நிலைகளிலும்  மக்கள் வீசி எறிந்த வெள்ளிக் காசுகள் இருக்கின்றன. அதாவது வெள்ளிக்கு தண்ணீரை சுத்தப்படுத்தும் குணம் இருப்பதை அறிந்த பழங்கால மக்கள் மற்றவர்களும் இப்படிச் செய்யட்டுமே என்று கருதி அதற்குப் பல சமய நம்பிக்கைகளையும் கற்பித்து இருக்கலாம். உதாரணத்துக்கு நாம் மருத்துவ குணமுள்ள துளசி, வில்வம், அருகம் புல் போன்றவற்றை இந்து தெய்வங்களுக்குப் படைக்கிறோம். அதனால் நம்மை அறியாமலேயே நமக்கு கிடைக்கும் மருத்துவ  பலன்களையும் அனுபவித்துப் பயன் அடைகிறோம்.

புகழ் பெற்ற சைரஸ் (Cyrus) என்ற பாரசீக மன்னன், எங்கே சென்றாலும்  பெரிய வெள்ளிப்பபானைகளில்  குடிநீரைக் கொண்டு செல்வாராம். அதுவும் கூட ஒரு குறிப்பிட்ட ஆற்றிலிருந்து எடுத்து காய்ச்சி வடித்துப் பின்னர் வெள்ளிக் குடங்களில் நிரப்புவார் என்று புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஹெரோடோட்டஸ் (Herodotus  485- 425 BCE) எழுதி வைத்துள்ளார் . கொஞ்சம் வெள்ளி இருந்தாலே கிருமிகள் இறந்து விடும் என்பது தற்கால விஞ்ஞான  ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. நீச்சல் குளங்களை குளோரின் வாயு ஏற்றி சுத்தப் படுத்துவதை விட வெள்ளி உலோக உப்புக்களைக் கலந்து சுத்தப்படுத்துவதே மேல்.

அமெரிக்காவில் விளையாட்டு வீரர்களுக்காக வெள்ளி இழை கலந்து நெய்யப்பட்ட சாக்ஸ்/ socks காலுறைகள் விற்கப்படுகின்றன. அவர்களுக்கு அதிகமாக வியர்த்து, அங்கே உற்பத்தியாகும் பாக்டீரியா கிருமிகளால் துர் நாற்றம் வீசுவதை இது தடுக்கும். ஆனால் எல்லா பாக்டீரியாக்களையும் வெள்ளி கொல்லாது . கனடா  நாட்டு வெள்ளிச் சுரங்கங்களில் கண்டுபிடிக்கப்பட்ட  ஒருவகை பாக்டீரியா தேவை இல்லாத வெள்ளியை செல் சுவர்களில் தள்ளிவிடுவதையும் கண்டு பிடித்துள்ளனர்.

இந்தியர்களுக்கும் வெள்ளியின் அருமை தெரியும். கோவில்களில், குறிப்பாக வைஷ்ணவ கோவில்களில், அதிகமான வெள்ளிப்பாத்திரங்களைக் காணலாம். உலகிலேயே பெரிய வெள்ளிப் பாத்திரம் ஜெய்ப்பூரில் மஹாராஜா அரண்மனையில் உள்ளது . 200 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று பெரிய வெள்ளிப் பானைகள் செய்யப்பட்டன.இவற்றில் 4000 லிட்டருக்கு மேல் கங்கை ஜலத்தை சேமித்து வைக்கலாம். ஜெய்பூர் மன்னர் லண்டனுக்கு இங்கிலாந்து மன்னரின் பட்டமேற்பு விழாவுக்கு கப்பலில் வந்த போது இதில் கங்கா ஜலம் கொண்டுவரப்பட்டது. அவர் பயணம் செய்த கப்பலில் மூன்று பிரம்மாணடமான பானைகளில் கங்கை நீர் எடுத்துவரப்பட்டது. ஒவ்வொரு பானையும் 5 அடி உயரமும் 15  அடி சுற்றளவும் உடையது.

xxx

தேவையற்ற ரசாயன ஆயுதங்களை அகற்றவும் வெள்ளி பயன்படுகிறது.மஸ்டர்ட் கேஸ், நெர்வ் கேஸ் (Mustard Gas, Nerve Gas)  எனப்படும் யுத்த கால விஷ வாயுக்களை, விஷமற்ற உப்புக்களாக மாற்ற வெள்ளி நைட்ரேட் கரைசலும் (Silver Nitrate and Nitric Acid)   நைட்ரிக் அமிலமும் பயன்படுகின்றன.

வெள்ளி என்பது தங்கம் போலவே பளபளப்பானது . கம்பியாக இழுக்கலாம்; தகடுகளாகத் தட்டலாம். ஒரு கிராம் வெள்ளியை 2 கிலோ மீட்டர் நீளக் கம்பியாக இழுக்கலாம் . இது அமிலங்களின் கரையக்கூடியது.

வெள்ளி உலோகத்துக்கு இரு  ஐசடோப்புகள் இருந்தாலும் அவைகளுக்கு கதிரியக்கம் கிடையாது

கந்தகம் என்னும் மூலகம்  இதனுடன் சேர்ந்து ஸல்பைடுகளை (Sulphides)  உண்டாக்குகிறது. இது கருப்பு நிற உப்புக்களாக படியும். இதனால்தான் வெள்ளிப்  பாத்திரங்களையும், நகைகளையும் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியிருக்கிறது . அதிக கந்தகம் அடங்கிய வெங்காயம், உள்ளிப் பூண்டு, முட்டை போன்றவற்றை வெள்ளிப்பாத்திரங்களில் வைக்கக் கூடாது .

நாளைய தினம் மருத்துவ மற்றும் தொழில் உபயோகங்களைக் காண்போம்.

–தொடரும் 

tags- வெள்ளி, Silver

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: