

Post No. 9911
Date uploaded in London –30 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிரெஞ்சுப் புரட்சியைத் (FRENCH REVOLUTION )தூண்டிவிட்ட பல்வேறு அம்சங்களில் ஒன்று உலகம் முழுதும் பரவிய ஒரு கோஷம் ஆகும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் Liberty, Equality, Fraternity என்ற கோஷத்தைப் பரப்பியவர் தத்துவ ஞானியும் , நாவல் ஆசிரியரும் ஆன ஷான் ஷாக்க்ஸ் ரூஸோ JEAN JACQUES ROUSSEAU ஆவார் . ரூசோவின் எழுத்துக்களில் இவை இருந்தாலும் புரட்சிக்காலத்தில் இவற்றை சேர்த்து முன்வைத்தவர் மாக்ஸ்மில்லியன் ரோபஸ்பியர் என்பவர் ஆவார் .
பிறந்த தேதி – ஜூன் 28, 1712
இறந்த தேதி- ஜூலை 2, 1778
வாழ்ந்த ஆண்டுகள் – 66
பிரெஞ்ச் மொழி இலக்கியத்தில் இவருக்கு முக்கிய இடம் உண்டு. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் ஒரு கடிகாரத் தயாரிப்பாளரின் மகனாகப் பிறந்தார். அவர் பிறக்கும்போதே அவருடைய தாயார் இறந்தார். ‘என் பிள்ளையை யார் வேண்டுமானாலும் வளர்க்கலாம்’ என்று அவர் அறிவித்தார். அதற்கேற்ற அம்மாதான் அவருக்கு கிடைத்தார். இதனால் 16 வயதிலேயே வீட்டை விட்டு ஓடினார் . ‘ஓடு காலி’யாக 4 ஆண்டுகளுக்குப் பல நாடுகளில் சுற்றித் திரிந்தார். இருபது வயதானபோது பாரிசில் குடிபுகுந்தார். அங்கே தெரெசா லவாசர் என்ற தையல்கார பெண்மணியுடன் தொடர்பு ஏற்பட்டது. அவரைத் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தை ஆனார். அந்த 5 பேரையும் அநாதை விடுதிகளில் சேர்த்துவிட்டார். இதுதான் பிரெஞ்சு தத்துவ ஞானியின் அழகு!
இங்கு ஒரு முக்கிய விஷயத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவில் ஒருவரைப் படித்தவர் என்று சொன்னால் (அந்தக்காலத்தில்; இப்போது அல்ல) அவர் கற்கக் கசடு அறக் கற்று அதற்குப்பின்னர் அதுபோல, படித்தது போல, நடந்தார் என்பது பொருள். ஆனால் மேலை நாடுகளில் படிப்புக்கும் சுய வாழ்வுக்கும் சம்பந்தம் இராது. பெரும்பலாலோரின் வாழ்வு நாற்றம் அடிக்கும் வாழ்வே. இந்தியாவில் ஒருவர் ‘மகான் ஆன பின்னர்’ இப்படிப் பார்க்க முடியாது. அவர்கள் வாழ்வு தூய வாழ்வாகவே இருக்கும். அருணகிரிநாதர் போன்றோர் பாவ (sinful) வாழ்விலிருந்து மீண்டுவிட்ட பின்னர் இப்படிப் பார்க்க முடியாது. மேலை நாடுகளிலோ புகழ் பெற்ற ஓவியர், கவிஞர், புலவர், கதாசிரியர், தத்துவ ஞானிகள் வாழ்வு எல்லாம் ஊழல் மலிந்த தாகவே இருக்கும்).
ரூஸோ தனது கவர்ச்சியால் இலக்கிய வட்டத்தில் பலருடன் தொடர்பு கொண்டார் . அதில் ஒருவர் 1751 முதல் வெளியான பிரெஞ்ச் மொழி கலைக்களஞ்சியம் எழுதும் பணியில் இவருக்கும் ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். இதனால் எழுத்தில் ஆர்வம் பிறந்தது. 49 வயதில் முதல் நாவல் ஜூலி வெளியானது. இது குடும்ப வாழ்வின் மஹிமை பற்றியது! இது அவருக்குப் புகழ் ஈ ட்டித் தந்ததுடன் ஐரோப்பிய புதினப் படைப்புகளில் ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியது. பின்னார்தான் இவருடைய சிந்தனைகள் அடங்கிய சோஷல் காண்ட்ராக்ட் SOCIAL CONTRACT என்னும் சமூக ஒப்பந்தம் நூல் வெளியானது. அதில் இவருடைய பொன்மொழிகளைக் காணலாம்.
மனிதன் சுதந்திரமாகப் பிறக்கிறான். பின்னர் எப்போதும் சங்கிலியால் பிணைக்கப்படுகிறான் என்ற வாசகம் இவருடையது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற இவரது கோஷமும் பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டது. பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் வந்தே மாதரம் கோஷம் போலவும், நேதாஜியின் ஜெய்ஹிந்த் கோஷம் போலவும் இது பிரான்ஸ் எங்கும் எதிரொலித்தது .
ரூசோவின் இலாககிய படைப்புகள் பல்வேறு துறைப்பட்டது. கலை , இசை முதலியன பற்றியும் எழுதினார். அறத்தைப் போதிக்கும் எமிலி போன்ற நாவல்களை எழுதினார். பல ஆபரா/ OPERA இசைப் பாடல்களையும் எழுதினார்.
இவருடைய சுய சரிதை என்று சொல்லப்படும் கன்பெஷன்ஸ் CONFESSIONS (ஒப்புதல் வாக்குமூலம்) என்ற நூல் இவர் இறந்த பின்னர் வெளியானது. சுவையான நூல் என்ற போதிலும் அது ரூஸோவின் உண்மை வாழ்க்கை வரலாறு அல்ல.

PUBLICATIONS
1750- DISSCOURSE ON THE SCIENCES AND ARTS
1753- DISCOURSE ON THE ORIGIN OF INEQUALITY
1761- JULIE OR THE NEW HELOISE
1762- EMILE OR A NEW SYSTEM OF EDUCATION
1762- THE SOCIAL CONTRACT
PUBLISHED AFTER HE DIED
1782- CONFESSIONS
–SUBHAM-





TAGS- ரூசோ ரூஸோ , பிரெஞ்சு ROUSSEAU