
Post No. 9912
Date uploaded in London –30 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆகஸ்ட் 2021 நற் சிந்தனை காலண்டர்
ஆகஸ்ட் மாத பண்டிகைகள் – 3 ஆடிப் பெருக்கு , 8 ஆடி அமாவாசை , 11- ஆடிப் பூரம், 15- சுதந்திர தினம், அரவிந்தர் பிறந்த தினம், 20- மொகரம், 21- வரலெட்சுமி விரதம், ஓணம் , 22- ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன், 23 காயத்ரி ஜபம், 30- கிருஷ்ண ஜெயந்தி .
அமாவாசை -8, பெளர்ணமி -22, ஏகாதசி விரத நாட்கள் – 4, 18
சுப முஹுர்த்த நாட்கள் -20, 26
முதல் எண் ரிக் வேத மண்டலத்தையும், அடுத்த எண் துதியையும் , மூன்றாவது எண் மந்திரத்தையும் குறிக்கும் .

xxxx
ஆகஸ்ட் 1 ஞாயிற்றுக் கிழமை
வருணனே! எல்லா மக்களும் பிழை செய்கிறார்கள் நாங்களும் உன் விதியை மீறுகிறோம். கோபப்பட்டு எங்களை அழித்து விடாதே -1-25-1, 1-25-2
xxx
ஆகஸ்ட் 2 திங்கட் கிழமை
கண்டேன், கண்டேன், கண்ணுக்கினியன கண்டேன்.அவனுடைய தேரையும் இந்த பூமியில் கண்டேன். என் துதிப்பாடலையும் அவன் ஏற்றுக்கொண்டான் – 1-25-18
xxx
ஆகஸ்ட் 3 செவ்வாய்க் கிழமை
என் நினைவுகள் , மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்லும் பசு மாடுகளைப் போல, எல்லோரும் போற்றும் அவனையே நாடிச் செல்கிறது 1-25-16
xxx
ஆகஸ்ட் 4 புதன் கிழமை
பேரறிஞனான வருணன் எங்களை நாள்தோறும் நன்னெறியில் செலுத்துவானாக ; எங்கள் ஆயுளை நீடிப்பானாக -1-25-12
xxx
ஆகஸ்ட் 5 வியாழக் கிழமை
நாங்கள் வாழ மேலேயுள்ள, நடுவிலுள்ள,கீழேயுள்ள பந்த பாசங்களிலிருந்து கட்டுக்களிலிருந்து, தளைகளிலிருந்து அவிழ்த்து விடுங்கள் – 1-24-21
Zxxx

ஆகஸ்ட் 6 வெள்ளிக் கிழமை
உணவின் தலைவனே ; நீ ஒளி ஆடைகளை அணிந்து கொள் ; எங்கள் வேள்வியை ஏற்றுக்கொள் – 1-26-1
Xxx
ஆகஸ்ட் 7 சனிக் கிழமை
அக்னியே , நீ தந்தை, நான் மகன்;நீயும் நானும் உறவினர்கள் ; நான் உன் நண்பன்; நீ என் நண்பன் – 1-26-3
Xxx
ஆகஸ்ட் 8 ஞாயிற்றுக் கிழமை
அமிர்த சொரூபனே , எங்களுடைய துதிப்பாடல்கள் , நம் இருவருக்கும் இன்பம் தரட்டும் – 1-26-9
Xxx
ஆகஸ்ட் 9 திங்கட் கிழமை
அக்னியே ,எங்கும் செல்லும் நீ, எங்களை அருகிலிருந்தோ தொலைவிலிருந்தோ துன்புறுத்த நினைப்பவர்களிடமிருந்து காத்தருள்க 1-27-3
Xxxx
ஆகஸ்ட்10 செவ்வாய்க் கிழமை
சித்திரபானுவே /அக்னியே , நீ நதியின் அலைகளைப் போல செல்வங்களை பகிர்ந்து கொடுக்கிறாய்; யாகம் செய்ப்பவனுக்குப் பொழிகிறாய் 1-27-6
xxx


ஆகஸ்ட் 11 புதன் கிழமை
பெரிய தேவர்களுக்கு நமஸ்காரம் ; சிறிய தேவர்களுக்கு நமஸ்காரம் ; இளைஞர்களுக்கு நமஸ்காரம்; முதியோருக்கு நமஸ்காரம்; சக்திமிக்க நாங்கள் எல்லா தேவர்களையும் போற்றுகிறோம் நான் பெரிய தேவர்களுக்கு மறக்காமல் துதி பாடுவேனாக 1-27-13
xxx
ஆகஸ்ட் 12 வியாழக் கிழமை
இந்திரனே ! உரலில் இடிக்கும்போது உலக்கை விழும் நேரத்தை சரியாக அறிந்து ,இடிப்பதற்கு உதவும் பெண்களைப் போல நீயும், இந்த உரலில் இடிக்கும்போது விழும் சோம ரஸத்துளிகளைப் பருகுவாயாக 1-28-3
Xxx
ஆகஸ்ட் 13 வெள்ளிக் கிழமை
இந்திரனே! கழுதை போலக் கத்தி அபஸ்வரம் பாடும் எங்கள் எதிரிகளை வீழ்த்துவாயாக. எங்களுக்கு ஆயிரக் கணக் கில் குதிரைகளையும் பசுக்களையும் தருவாயாக- 1-29-5
Xxx
ஆகஸ்ட் 14 சனிக் கிழமை
இந்திரனே இந்த சோம ரசம் உனக்கானது. கருத்தரித்த பெட்டைப் புறா விடம் வரும் ஆண் புறா போல வருக்கிறாய். அப்போது எங்கள் தோத்திரங்களையும் ஏற்பாயாக 1-30-4
Xxx


ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக் கிழமை
அக்கினியே, பேரறிஞநான நீ, தீமையான செயல்புரிவோரை நற்பணியில் ஈடுபடுத்துகிறாய் வீரர்கள் செய்யும் போரில் பரந்த செல்வமாக இருக்கிறாய் . நீ போரிலே வலியோரைக் கொண்டு மெலிந்தவர்களை கொன்றாய்.1-31-6
Xxx
ஆகஸ்ட் 16 திங்கட் கிழமை
ஏ நான்கு கண்கள் உடைய அக்கினியே , புனிதர்களை நீ காக்கிறாய் உனக்கு அ வி அளிக்கும் மனிதனின் மந்திரத்தை நீ மனதில் இருத்திப் போற்றுகிறாய் 1-31-11
Xxx
ஆகஸ்ட் 17 செவ்வாய்க் கிழமை
அக்கினியே , நீ எங்களுடைய அசட்டையை மன்னிக்கவும் . நாங்கள் தீய வழியில் சென்று விட்டோம்.. நீயே நண்பன்; நீயே தந்தை.எல்லோரையும் ஊக்கப் படுத்துகிறாய். எல்லோரையும் கவனித்துக் கொள்பவனும் நீயே -1-31-16
Xxxx
ஆகஸ்ட் 18 புதன் கிழமை
நான் இந்திரன் செய்த வீரதீரத் செயல்களை சொல்கிறேன். வஜ்ராயுதனான அவன் மேகத்தைப் பிளந்தான்.தண்ணீரை பூமிக்குத் தள்ளினான்.மலைகளில் தண்ணீர் செல்ல வழிகளைக் கீறினான் 1-32-1
xxx
ஆகஸ்ட் 19 வியாழக் கிழமை
இந்திரனே, நீ அஹி என்னும் பாம்புகளிடையே தோன்றிய மேகத்தைப் பிளந்தாய்; பின்னர் மாயாவிகளின் மாயையை அழித்தாய்; அப்பால் சூரியனையும், வானத்தையும் உஷை என்னும் உதய காலத்தையும் தோற்றுவித்தாய். பின்னர் உன்னை எதிர்க்க எந்தப் பகைவனும் இல்லை 1-32-4
xxxx
ஆகஸ்ட் 20 வெள்ளிக் கிழமை
இந்திரனே நீ அஹி என்னும் பாம்பு அரக்கனைக் கொல்லும்போது உன் இதயத்தில் பயம் நுழைந்தபோது நீ யாரை நாடினாய் ? கலங்கிய நீயே 99 நதிகளை பருந்து போல விரைந்து கடந்தாயே 1-32-14
Xxxx


ஆகஸ்ட் 21 சனிக் கிழமை
வாருங்கள், நாம் திருடப்பட்ட பசுக்களை மீட்க இந்திரனிடம் செல்லுவோம். பகைமையற்ற அவன் நம்முடைய பேரரறிவை அதிகப்படுத்துகிறான் ; பிறகு அவன் பசுக்களின் செல்வத்தைக் காணும் உத்தம ஞானத்தை அளிப்பான் 1-33-1
xxx
ஆகஸ்ட் 22 ஞாயிற்றுக் கிழமை
என் மனம் மரத்தின் உச்சியில் கட்டிய கூட்டுக்குப் பருந்து பாய்வது போல இந்திரனிடத்தில் பாய்கிறது . மறைந்திருக்கும் செல்வம் தரும் அவனைப் புகழ்மிகு கீதம் இசைத்துப் போற்றுகிறேன் 1-33-2
Xxxx
ஆகஸ்ட் 23 திங்கட் கிழமை
அவன் பூமியின் எட்டு திசைகளையும், மூன்று வறண்ட பகுதிகளையும், ஏழு நதிகளையும் ஒளிமயமாக்கினான்.சவிதா தேவனின் கண் தங்க நிறமானது ; வழிபடுபவனுக்கு தேர்ந்து எடுத்த செல்வத்தை அவன் அளிக்கிறான் (சவிதா= சூரிய தேவன்)-1-35-8
Xxxx
ஆகஸ்ட் 24 செவ்வாய்க் கிழமை
அக்கினியே ! உன்னுடைய எரிக்கும் சுவாலைகளால் தானம் அளிக்காத அத்தனை போரையும் மட்பாண்டங்களை தடிகளால் அடிப்பது போல அடித்து நொறுக்கு – 1-36-16
மருத்துக்கள் (காற்று தேவன்) புள்ளி மான்களோடும் ஈட்டிகளோடும் மின்னும் நகைகளோடும், தாமே துலங்கும் ஒளியோடும் ஒருமித்துப் பிறந்தார்கள்- 1-37-2
xxxx
ஆகஸ்ட் 25 புதன் கிழமை
மருத்துக்கள் மொழியைப் பிறப்பிக்கிறார்கள்; தண்ணீரை அவற்றின் வழிகளிலே செலுத்துகிறார்கள்; அவர்கள் கதறும் பசுக்களை முழங்கால் அளவு நீருள்ள இடத்தில் பருக அனுப்புகிறார்கள் 1-37-10
xxx

ஆகஸ்ட் 26 வியாழக் கிழமை
மருத்துக்களே எப்போது உங்கள் இரு கைகளாலும் எங்களை மகனைத் தந்தை தூக்குவது போல தூக்குவீர்கள்? 1-38-1
xxx
ஆகஸ்ட் 27 வெள்ளிக் கிழமை
பேரறிஞனான இந்திரனே ! எங் களுக்கு நிறைய செல்வத்தைக் கொடு ; ஆனால் வணிகனைப் போல செயல்படாதே – 1-33-4
Xxx
ஆகஸ்ட் 28 சனிக் கிழமை
அஸ்வினி தேவர்களே ! ஒரு நாளைக்கு மும்முறை வந்து குற்றங்களை நீக்கும் நீங்கள் இன்று எங்கள் வேள்வியை ன்று முறை தேனால் தெளியுங்கள்.; இனிமைப் படுத்துங்கள். காலையிலும் மாலையிலும் எங்களுக்கு வலிமை தரும் உணவைப் படையுங்கள் 1-34-3
Xxx
ஆகஸ்ட் 29 ஞாயிற்றுக் கிழமை
3 முறை எங்கள் மனைக்கு வாருங்கள்; நீதியுள்ள மனிதனிடம் 3 முறை செல்லுங்கள்; உங்கள் பாதுகாப்புக்கு உரியவர்களிடம் 3 முறை தோன்று ங்கள்; எங்களுக்கு 3 மடங்கான அறிவைக் கற்பியுங்கள்; உங்களுக்குத் திருப்தி தரும் பொருட்களை 3 முறை தாருங்கள்; மழையைப் பொழியும் இந்தி ரண் போல் 3 முறை உணவைப் பொழியுங்கள் 1-34-4
Xxxx
ஆகஸ்ட் 30 திங்கட் கிழமை
ஒளியுள்ள உலகங்கள் மூன்று உண்டு; இரண்டு சவிதா அருகில் இருக்கிறது . ஒன்று மானிடர்களை எமலோகத்துக்கு கொண்டு செல்கிறது; தேரின் அச்சாணி போல அமிர்தர்கள் ஸவிதாவில் நிலைக்கிறார்கள்; சவீதாவின் சிறப்பை அறிபவன் எங்களுக்கு கூறட்டும். 1-35-6
xxx
ஆகஸ்ட் 31 செவ்வாய்க் கிழமை
உங்கள் வாயால் ஸ்லோகங்களை சொல்லுங்கள். மழையைபி பரவலாக்கும் மேகத்தைப் போல அதை பரத்துங்கள்;காயத்ரீ சூக்தத்தைப் பாடுங்கள் 1-38-14
–subham–

tags — மேலும் ,ரிக்வேத, பொன்மொழிகள், ஆகஸ்ட் 2021, காலண்டர்