ஆஸ்கர் பரிசு வென்ற நாவல் ஆசிரியை டில்லிக்காரி ஆர் பி ஜாப்வாலா (Post.9945)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9945

Date uploaded in London – 7 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டில்லி நகரில் கால் நூற்றாண்டுக்  காலம்  வாழ்ந்து, இந்தியா பற்றி ஆங்கிலத்தில் எழுதி, புக்கர் (Booker prize) பரிசு வென்ற திருமதி ஜாப்வாலா பிறந்ததோ ஜெர்மனியில்; குடி மகள் ஆனதோ அமெரிக்காவில்! மதமோ யூத மதம்!; மணந்ததோ இந்தியரை! இப்படி பன்னாட்டு வாசனை இருப்பதால் அவரே தன்னை ‘நான் ஒரு வெளியாள்’ I AM AN OUTSIDER என்று அழைத்துக் கொண்டார். இவரது புகழ் பெற்ற நாவல்கள் திரைப்படமாயின . இவர் நாவல், திரைக்கதை வசனம், சிறு கதைகள் எழுதுவதில் வல்லவர். பிறர் எழுதிய நாவல்களுக்கும் திரைக்கதை வசனம் எழுதிப் புகழ் பெற்றார்; பரிசுளைத் தட்டிச்சென்றார்.

ஜாப்வாலாவின் முழுப்பெயர் ரூத் பிராவர் ஜாப் வாலா RUTH PRAWER JHABWALA. அவர் ஜெர்மனியில் கொலோன் (COLOGNE)  நகரில் போலந்து நாட்டு, யூத மத தம்பதிகளுக்குப் பிறந்தார். ஹிட்லரின் நாஜி கொடுமை தாங்காமல் வெளி நாட்டுக்கு ஓடினார் . அங்கிருந்து வெளியேறக் கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இங்கிலாந்துக்கு வந்தார். லண்டன் குயீன் மேரி கல்லூரியில் பிறந்தார். மும்பையில் பிறந்து டில்லியில் பிரபல கட்டிடக் கலைஞராகத் திகழ்ந்த சைரஸ் ஜாப்வாலா  (CYRUS JHABWALA, PARSI) என்ற பார்சிக்காரரைக் கல்யாணம் செய்துகொண்டார்; மூன்று மகள்களுக்குத் தாய் ஆனார்.

இவருக்கு இந்தியாவைவிட அமெரிக்காவிலும் பிரிட்டனிலும்தான் பெயரும் புகழும் அதிகம். சிறந்த ஆங்கில நாவல்களை எழுதினார்.

21 வயதில் பிரிட்டிஷ் பிரஜாவுரிமை பெற்றபோது லண்டனுக்கு வந்த சைரஸ் ஜாப் வாலாவைச் சந்தித்து மணந்தார். பின்னர் அவருடன் தில்லிக்குச் சென்று 24 ஆண்டுகள் வாழ்ந்தார்.

இந்தியாவில் இருந்தபோது 29 வயதில் முதல் நாவல் அம்ரிதா AMRITA  வெளியானது. அதற்குப் பின்னர் அவர் எழுதிய நாவல்களும் இந்திய பூமியை அடித்தளமாகக் கொண்டவைதான். ஒரு வெளிநாட்டுக்காரர் இந்தியாவை எடைபோடும் விதத்தில் இவருடைய நாவல்கள் இருந்தன. இதனால் வெளிநாட்டினர் மதித்தனர். இந்தியாவை  வெளிநாட்டினர் எடைபோடுவதை ஏற்காத இந்தியர்கள் இவரைக் கண்டு கொள்ள வில்லை.

அவருடைய 48-ஆவது வயதில் HEAT AND DUST ‘ஹீட் அண்ட் டஸ்ட்’ நாவல் அச்சானது. ஒரு பிரிட்டிஷ் பெண்மணி  இந்தியாவில் மேற்கொண்ட பயணம் பற்றியது இந்த நாவல். பிரிட்டனின் மிகப்பெரிய இலக்கியப்  பரிசான புக்கர் (BOOKER)பரிசு இதற்குக் கிடைத்தது.

அமெரிக்காவில் குடியேறி அமெரிக்கக் குடியுரிமை பெற்ற பின்னர் திரைப்படத் தயாரிப்பாளர் ஜேம்ஸ் ஐவரி, இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் இஸ்மாயில் மெர்ச்சன்ட் (JAMES IVORY AND ISMAIL MERCHANT)  ஆகியோருடன் சேர்ந்து திரைப்படத் துறையில் நுழைந்தார். அவர் எழுதிய திரைக்கதை வசனம் இரண்டு முறை ஆஸ்கார் பரிசை ( A ROOM WITH A VIEW AND HOWARDS END ) வென்றது.

23 திரைக்கதை வசனங்கள், 12 நாவல்கள், 8 சிறுகதைத் தொகுப்புகள் இவருடைய கிரீடத்தில் சூடிய மலர்களாக மணம் வீசுகின்றன  1998ல் பிரிட்டனின் CBE சி.பி.இ. இவருக்கு கொடுக்கப்பட்டது.

பிறந்த தேதி – மே 7, 1927

இறந்த தேதி – ஏப்ரல் 3, 2013

வாழ்ந்த ஆண்டுகள் – 85

எழுதிய நாவல்கள் , கதைகள்:-

1956 – AMRITA

1958 – ESMOND IN INDIA

1960 – THE HOUSEHOLDER

1965 – A BACKWARD PLACE

1968- A STRONGER CLIMATE

1975- HEAT AND DUST

1986 – OUT OF INDIA- SELECTED STORIES

1987- THREE CONTINENTS

1993 – POET AND DANCER

1995- SHARDS OF MEMORY

–SUBHAM-

tags- ஆஸ்கர் பரிசு, நாவல் ஆசிரியை, டில்லிக்காரி ,ஆர் பி ஜாப்வாலா, R P Jhabvala

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: