

WRITTEN BY S NAGARAJAN
Post No. 9948
Date uploaded in London – 8 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி அவர்கள் தேர்வு செய்து வழங்கிய சில சுபாஷிதங்கள் தரப்பட்ட முந்தைய கட்டுரை எண் 9862 (வெளியான தேதி: 18-7-2021)
முயற்சியே வெற்றி தரும்!
ச.நாகராஜன்
சம்ஸ்கிருத அறிஞரான டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி (Dr.T.S. Gouripathi Sastri) அவர்களிடம் ஆந்திரா பல்கலைக்கழகம் நல்ல சில சுபாஷிதங்களைத் தேர்ந்தெடுக்குமாறு (1978இல்) பணிக்க, அவர் 36 சுபாஷிதங்களைத் தொகுத்துத் தந்தார். அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் அவரே செய்துள்ளார். அவற்றில் முதல் இருபது சுபாஷிதங்களை சென்ற கட்டுரைகளில் கண்டோம். அடுத்த ஐந்து சுபாஷிதங்கள் இதோ:-
ஷதேஷு ஜாயதே ஷூர: சஹஸ்ரேஷு ச பண்டித: |
வக்தா தசஸஹஸ்ரேஷ் தாதா பவதி வா ந வா ||
நூற்றில் ஒருவனே சூரனாகிரான். ஆயிரத்தில் ஒருவனே பண்டிதனாகிறான். பத்தாயிரத்தில் ஒருவனே பேச்சாளனாகிறான். ஆனால் ஒரு கொடையாளி பிறக்கிறானோ இல்லையோ யாருக்கும் தெரியாது!
Among hundreds a hero may be born, a scholar among thousands, an orator among tens of thousands but one does not know whether a donor is born or not!
யதி சந்தி குணா: பும்ஸாம் விகசந்த்யேவ தே ஸ்வயம் |
நஹி கஸ்தூரிகாமோத: ஷபதேன நிதார்யதே ||
நற்குணங்கள் இருப்பின் அவர்கள் தாமாகவே விகசிக்கிறார்கள். கஸ்தூரியின் மணத்தை யாராலும் உறுதிமொழியாலோ ஸத்யபிரமாணத்தினாலோ தடுத்து விட முடியாது.
If people have merits then they bloom of their own accord. Nobody can stop the fragrance of musk with an oath or swearing.
உத்தமேன ஹி சித்யந்தி கார்யாணி ந மனோரதை: |
ந ஹி சுப்தஸ்ய சிம்ஹஸ்ய ப்ரவிஷந்தி முகே ம்ருகா: ||
பெரும் திட்டங்கள் முயற்சியினாலேயே வெற்றி பெற்று முடிகின்றன. வெறும் ஆசையினால் அல்ல. தூங்குகின்ற சிங்கத்தின் வாயில் மான் தானாகச் சென்று நுழையாது.
Projects attain consummation surely by endeavor only and not by mere desires. Verily the deer do not enter the mouth of the lion who is fast asleep.
பூர்வஜன்ம க்ருதம் கர்ம தத்தைவமிதி கத்யதே |
தஸ்மாத் புருஷகாரேண வினா தைவம் ந சித்யதி ||
பூர்வ ஜன்மத்தில் செய்த கர்மங்களே அதிர்ஷ்டம் அல்லது கடவுள் என்பதாகும்.ஆகவே முயற்சி இல்லாது அதிர்ஷ்டம் அல்லது கடவுள் என்பது இல்லை.
The endeavor made in the last birth is what is known as (luck or) God. Hence no God (or luck) can succeed without endeavor.
அல்பானாமபி வஸ்தூனாம் சம்ஹதி: கார்யசாதிகா |
த்ருணைர்குணத்வமாபன்னைர்பத்யந்தே மத்ததந்தித: ||
அல்பம் என்றாலும் கூட அந்த வஸ்துக்கள் கூட்டாகச் சேரும் போது ஒரு செயலை முடிக்கின்றன. மதம் பிடித்த யானை தான் என்றாலும் கூட புல் கட்டுகளால் சேர்க்கப்பட்ட கயிறு அதைப் பிணைத்து விடுகிறது.
The group of even trivial things (united) accomplishes the action. The rutty elephants are tied by means of a rope formed of blades and grass.
***
INDEX
சூரன், பண்டிதன், பேச்சாளன், தனவான்
கஸ்தூரி மணம், நற்குணங்கள்
அதிர்ஷ்டம், கடவுள், முயற்சி
கூட்டாக இருந்தால் வெற்றி
மத யானை, புல்கட்டுக் கயிறு

TAGS- முயற்சி, வெற்றி ,