உபநிஷத் மொழிபெயர்த்த, நோபல் பரிசு வென்ற, கவிஞர் W B.யேட்ஸ் (Post.9955)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9955

Date uploaded in London – 9 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அயர்லாந்து நாட்டின் புகழ்பெற்ற நாடக ஆசிரியர், கட்டுரையாளர், கவிஞர் வில்லியம் பட்லர் யேட்ஸ் WILLIAM BUTLER YEATS  ஆவார்.

புராண, புராதன விஷயங்களில் ஆர்வம் கொண்ட அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசும் கிடைத்தது. அழகான ஐரிஷ் நடிகையைத் திருமணம் செய்துகொண்ட அவர், புரோஹித் சுவாமி PUROHIT SWAMI என்பவருடன் சேர்ந்து இந்து மதத்தின் உயர்ந்த தத்துவ நூல்களான பத்து உபநிஷதங்களை ஆங்கிலத்தி ல்  மொழிபெயர்த்து 1938-ம் ஆண்டு வெளியிட்டனர். ஆங்கிலப்புலவர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர் வரிசையில் முதல் வரிசையில் நிற்பவர் யேட்ஸ் . அயர்லாந்தில் பிறந்து அயர்லாந்தில் வாழ்ந்து அயர்லாந்தின் பழமைக் காவியங்களைத் தொகுத்து அவற்றைப் போற்றியதால் ஐரிஷ் மக்களின் பெருமதிப்பையும் பெற்றார்.

டபிள்யூ .பி. யேட்ஸ் அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளினில் DUBLIN, IRELAND பிறந்தார். அவர் இருபதாம் நூற்றாண்டின்  இணையற்ற ஆங்கில மொழி எழுத்தாளர் . தன்னுடைய காலத்தில் வாழும் மிகப்பெரிய கவிஞர் GREATEST POET  என்று T.S.. எலியட்டால் பாராட்டப்பட்டவர் . 1923-ம் ஆண்டில் அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது லண்டனிலும் அயர்லாந்திலும் மாறி, மாறி வாழ்ந்தாலும் அயர்லாந்தையே தாய்வீடாகக் கொண்டவர்.லண்டனில் வாழ்ந்த காலத்தில் அவருக்கு இந்து மதம் , புத்த மதம் முதலிய ஆசிய சமயங்களில் ASIAN RELIGIONS  வேட்கை பிறந்தது. மனிதனுக்கு அப்பாற்பட்ட அதீத ஆற்றலில் SUPER NATURAL POWERS நம்பிக்கை ஏற்பட்டது . அயர்லாந்திலும் இத்தகைய நம்பிக்கை இருந்ததால் அயர்லாந்தின் நாட்டுப்புற கதைகளையும் நம்பிக்கைகளையும் தொகுத்து நூல்களாக வெளியிட்டார்.

24 வயதிலேயே இந்த நூல்கள் அச்சாகின. அவருடைய கவிதைகளில் பழங்காலம் பற்றிய ஏக்கம் இருக்கும். நாம் பொன்னியின் செல்வன் நாவலைப் படித்துவிட்டு சோழர் காலத்தில்  வாழ மாட்டோமா என்று ஏங்குவது போல.

1936ம் ஆண்டில் புரோஹித் சுவாமி என்ற இந்தியருடன் மத்திய தரைக்கடல் பிரதேசம் மற்றும் மயோர்கா MAJORCA தீவுகளில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போதுதான் இந்து மத உபநிஷத்துகளில் மிகவும் முக்கியமான பத்து உபநிடதங்களை TEN PRINCIPLE UPANISHADS இருவரும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தனர் .

1889-ல் மாட் கான் MAUD GONE  என்ற ஐரிஷ் நடிகையைக் கண்டு, காதல் கொண்டு, அவரைக் கல்யாணம் செய்துகொண்டார். மாட் கான்  அயர்லாந்தில் ஆங்கில ஆட்சிக்கு சாவு மணி அடிக்கப் போராடியர். இவரும் மனைவிக்கு ஆதரவாக  அயர்லாந்து அரசியலில் குதித்தார். இதன் தாக்கத்தை இவருடைய கவிதைகளில் காணலாம் .

எழுத்தின் ஆற்றலை, பேனா  முனையின் வலிமையை, ணர்ந்த அவர் தனது கவிதைகளையும், நாடகங்களையும் அயர்லாந்து ஓன்றுபட பயன்படுத்தினார். ஐரிஷ் புராணக் கதைகளையும் வாய் மொழி இலக்கியத்தையும் தொகுத்து இரண்டு நூல்களாக வெளியிட்டார். 1896-ல் அயர்லாந்துக்குத் திரும்பிய அவர் லேடி கிரிகரி LADY GREGORY என்ற பெண்மணியை , பணக்கார பிரபு வம்ச பெண்ணைச் சந்தித்தார். அவருக்கும் இவரைப் போலவே பழமையில் ஆர்வ இருந்ததால் 1904-ம் ஆண்டில் ABBEY THEATRE GROUP  அப்பி தியேட்டர் குரூப்பை நிறுவினார். இது மிகவும் பிரபலம் அடைந்தது . மக்களைக்  கவரும் நாடகங்களை இருவரும் மேடை ஏற்றினர்

எ விஷன் A VISION – ‘நான் காணும் காட்சி’ என்ற நூலில் இவர் தனது நம்பிக்கைகளையும் உணர்ச்சிகளையும் வெளியிட்டார். வயது ஆக ஆக அவர் நம்பிக்கை ஆல் போல் தழைத்தது; அருகு போல வேரூன்றியது. இவருடைய நான்கு நாடகங்களையும் பல கவிதைகளையும் படிக்காத ஆங்கில இலக்கிய ரசிகர்கள் இல்லை.

Maud Gone

பிறந்த தேதி – ஜூன் 13, 1865

இறந்த தேதி – ஜனவரி 28, 1939

வாழ்ந்த ஆண்டுகள் – 73

எழுதிய நூல்கள் –

1889- THE WANDERINGS OF OISIN AND OTHER POEMS

1893- THE CELTIC TWILIGHT

1894 – THE LAND OF HEART’S DESIRE

1897 – THE SECRET ROSE

1902 – CATHLEEN NI HOULIBAN

1925 – A VISION

1928- THE TOWER

1933- THE WINDING STAIR

1936- 39 THE LAST POEMS AND PLAYS

–SUBHAM–

tags- உபநிஷத், மொழிபெயர்த்த, நோபல் பரிசு , கவிஞர் W B.யேட்ஸ் , W B YEATS

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: