பலாப்பழம் சாப்பிடலாம், டயபடீஸ் இருந்தாலும்! (Post No.9953)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9953

Date uploaded in London –  9 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருநெல்வேலியிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஆரோக்கிய மாத இதழான ஹெல்த்கேர்-இல், ஆகஸ்ட் 2021 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

பலாப்பழம் சாப்பிடலாம், டயபடீஸ் இருந்தாலும்!                         

ச.நாகராஜன்

இனிப்புச் சுவையே வாழ்க்கையில் கூடாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பவர்கள் டயபடீஸ் என்னும் நீரிழிவு நோய் வியாதி உள்ளவர்கள். இவர்களுக்கு ஒரு நல்ல செய்தி அறிவியல் ஆய்வுகளின் முடிவில் வெளி வந்துள்ளது. ஆம, இனிக்கும் பலாச்சுளையை தைரியமாக டயபடீஸ் உள்ளவர்கள் சாப்பிடலாம். என்ன ஒரு ‘இனிப்பான செய்தி!

பலாப்பழம் ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் விடமின்களின் உறைவிடம். ஆனால் இனிப்பும் ஏராளமாக இருக்கிறது.

150 கிராம் பலாச்சுளையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உள்ளவை இவை:- 

கலோரிகள் 143,                                                                        

கொழுப்புச் சத்து – 1 கிராம்,                                                       

 புரோட்டீன் – 3 கிராம்,                                                         

கார்போஹைட்ரேட் (Carbs) – 35 கிராம்,                                                 

 ஃபைபர் – 2 கிராம்,                                                                      

விடமின் B6 – 29% தினசரி மதிப்பில் (Of the Daily Value – DV),                                                  

விடமின் C – 23% of the Daily Value DV.

விடமின் C  சிறந்த ஆன்டி ஆக்ஸிடண்ட்! இதய நோய்க்கும் டயபடீஸ் டைப் 2விற்கும் வழி வகுக்கும் நீண்ட நாள் வீக்கத்தை இது கட்டுப்படுத்தும். இதில் கார்போஹைட்ரேட்ஸ் இருந்து சர்க்கரை சத்தை அதிகப்படுத்தும் என்பது உண்மை தான். ஆனால் மற்ற ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்தை சரியாக்கும் என்பதும் உண்மையே.  

 பலாப்பழத்தில் க்ள்செமிக் இண்டெக்ஸ் 50 முதல் 60 வரை உள்ளது. (100 என்ற அளவீட்டின் படி) (glycemic index (GI) of about 50–60 on a scale of 100)                               இந்த GI என்பது எவ்வளவு சீக்கிரமாக உங்கள் உணவு வகைகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது என்பதைக் காட்டும் ஒரு குறியீடு.     எடுத்துக்காட்டாக, இதை விவரிப்பதென்றால், சுத்தமான சர்க்கரை – அதாவது குளுகோஸ் – 100 என்ற அளவில் ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்துகிறது. வெள்ளை ரொட்டி (White Bread) 75 என்ற அளவைக் கொண்டுள்ளது.    

                                                            பலாப்பழத்தில் உள்ள புரோட்டினூம் ஃபைபரும் ஜீரண இயக்கத்தை மெதுவாக ஆக்கி, ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதைத் தடுக்கிறது.அதனால் குறைந்த GI  கொண்டுள்ளது.                                                                        

பலாப்பழம் மீடியம் க்ளெசெமிக் லோட் (GL) கொண்டுள்ளது. GL என்பது உணவில் உள்ள கார்போஹைட்ரேட் எண்ணிக்கையை எடுத்துக் கொள்வதைப் ப்ற்றியும் GI பற்றியும் குறிக்கும் ஒரு அளவீடாகும். ஆகவே இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் காட்டும் ஒரு சரியான அளவீடாகும்.

இரத்த அழுத்தம் : GL 0 முதல் 10 முடிய இருப்பின் இரத்த அழுத்தம் குறைவு.

பலாப்பழத்தில் GL 13 முதல் 18 வரை உள்ளது. GL 20 இருந்தால் அது அதிகம் என்பதன் அறிகுறி. அதுமட்டுமல்ல, பலாப்பழத்தில் ஃப்லாவொனாய்ட் ஆன்டி ஆக்ஸிடன்ட் (flavonoid antioxidant) அதிகம் உள்ளது. இது நீண்ட நாள் வியாதிகளால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க வல்ல ஒன்றாகும்.        

சில ஆய்வுகள் பலாப்பழமானது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது என்று காட்டுகின்றன. ஆனால் இந்த ஆய்வுகள் மிருகங்களின் மீது மேற்கொள்ளப்பட்டவை என்பதால் மனிதர்களுக்கு இந்த முடிவை உறுதியாகச் சொல்ல முடியுமா என்ற சந்தேகம் உள்ளது.

பலாப்பழம் குறைந்த அமில அளவைக் (Low Acidity Level) கொண்டுள்ள ஒன்று. பலாப்பழம் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கிறது. பாலுடன் பலாச்சுளையை வைத்து அரைத்து தோலில் பூசி சிறிது நேரம் வைத்திருப்பதால் இளமைப் பொலிவுடன் இருக்கும் மினுமினுப்பான தோல் உருவாகிறது.

இதில் உள்ள அதிக அளவு புரோட்டீன்கள் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இது இரத்த சோகையையும் குறைக்கிறது, ஹீமோகுளோபின்  கொண்ட இரும்புச் சத்து இதில் நிறைய இருப்பதால் தான் இந்த நன்மை ஏற்படுகிறது. அடர்த்தியான கேஸமும், நல்ல கண்பார்வையுக் கூட பலாப்பழக் கொட்டைகளால் ஏற்படுகிறது. இதில் உள்ள விடமின் ஏ சக்தியால் இந்த நன்மை எற்படுகிறது. பலாப்பழ கொட்டைகளைப் பொடி செய்து சாப்பிடுவதால் ஜீரணக் கோளாறுகள் நீங்குகின்றன. தசைக் கட்டமைப்பையும் இது அழகுற ஆக்குகிறது.

பலாப்பழத்தில் உள்ள புரோட்டீன்கள் கொலஸ்ட்ரால் இல்லாதவை என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

உடல் எடை கூடி விட்டதே என்று கவலைப்படுவோருக்கும் பலா ஒரு அரிய ம்ருந்து.  அதில் உள்ள ஃபைபர் ஜீரணத்தை ஊக்குவிக்கிறது. பலா தேவையற்ற கொழுப்புச் சத்தை உடலில் சேர விடாமல் தடுக்கிறது.

இதில் உள்ள விடமின் சி உடலில் ஏற்படும் நோய்களை வர விடாமல் எதிர்ப்புச் சக்தியைத் தருகிறது. விடமின் சி இரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரிக்கிறது.

பலாப்பழத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு பொடாசியமும் உள்ளது. ஆகவே இது வாஸோடிலேடராக அதாவது இரத்த நாளங்களை இயல்பாக ஓய்வுடன் இயங்கச் செய்வதாக ஆக்குகிறது. ஆகவே உடலின் இரத்த அழுத்தம் – ப்ளட் ப்ரஷர் – சீராக ஆகிறது. இரத்த அழுத்தம் கூடி இருந்தால் அதைக் குறைக்கிறது.ஒன்றாகும்.

பலாப்பழத்தின் இன்னொரு அரிய பயன் அது எலும்புகளை வலுவுள்ளதாக ஆக்குகிறது. கால்சியம் இதில் உள்ளது என்பதால் தான் இந்த நன்மை. விடமின் சி இருப்பதால் கால்சியத்தை உறிஞ்ச இது ஏதுவாகிறது.

இதில் உள்ள மக்னீஷியம் தூக்க வியாதி உள்ளவர்களுக்கு ஒரு அரும் வரபிரசாதமாகும்.இது மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர்களை அளவுடன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. ஆகவே நல்ல தூக்கம் ஏற்படுகிறது. தூக்கமே வரவில்லை என்பவர்கள் பலாப்பழத்தைச் சாப்பிட ஆரம்பித்தால் நல்ல பயன் தெரியும்!

அட,இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள், பலாப்பழத்தைச் சாப்பிட கூலியா தர முடியும்! பலாப்பழத்தைச் சாப்பிட ஆரம்பியுங்கள், பலன் கண்டு மகிழுங்கள்!!

***

tags- பலாப்பழம் , டயபடீஸ்,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: