சேலையில் கண்ணன் லீலை! (Post No.9963)

WRITTEN BY LONDON POET DR A. NARAYANAN

Post No. 9963

Date uploaded in London – 11 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சேலையில் கண்ணன் லீலை– சேலை கவர்ந்தவனே சேலை கொடுத்தவன்

கண்ணனையே  கணவனாயடைய கோபியக்

கன்னியர்கள் காத்யாயனீ நோன்பு காத்துக்

களைந்த ஆடைகளைக்  கரையில் வைத்துக்

களிப்புடன் யமுனை நதியில் நீராட  அங்கு

வந்த வாசுதேவனுக்கு வம்புக் கிழுப்பதற்கு

வாய்ப்பாக நாணம் நதியிலேப் பறிபோகும்

அச்சமில்லா ஆய்ச்சியக் கன்னியருக்குப்

பாடம் கற்பிக்க கரையிருந்த சேலைகளை

ஒரு தருக்கிளையில் தொங்க தொங்கியதோ

மங்கையர்  நாணமும் மரக்கிளையிலே

கண்ணன் கவர்ந்த சேலைகள் தருக்கிளையிலே

கண்ட கழுத்தளவு நீரில் நின்ற கன்னியர்கள்

கெஞ்சியும் கொஞ்சியும் தளராக் கார் வண்ணன்

சாத்திரமேற்கா நிர்வாண நீராட்டத்தில் வரம்பு

மீறி வழுவிய நீங்கள் அந்நிலையிலேயேக் கரை

ஏறி சேலை பெறுவதோர் பரிகாரமெனக் கண்டிக்க

தண்ணீர் வெந்நீராக கண்ணீர் சொரிந்த கன்னியர்

மன்னிக்க மன்றாட மரம் தழுவிய சேலைகளை

மங்கையரிடை தவழ மனமிரங்கிய மாதவன்

சேலை கவர்ந்தீன்ற முதல் லீலை

பண்டொரு நாள்  கௌரவன் துரியோதனன்                     

பங்காளிப் பகையில் பாண்டவர் உடைமைகளைப்         

பறிக்கத் தருமனை சூதாட்டத்துக் கீர்த்து வஞ்சகச்      

சூதில் வாரி எடுத்தானோ  தம்பிகளுட்படத் தரும        

னுடைமையெலா மெனும் நிலையில் தலை தரை       

நோக்கத் தன்னயும் பணயமாய் வைத்திழந்த காலை    

துரியோதனன் காலுருண்டதோ பஞ்சவர் முடி                     

எஞ்சியவளோ பாஞ்சாலி விட்டதைப் பிடிக்க                                                 

மிஞ்சியது வெறி கெஞ்சியது விவேகம் ஆனால்                    

மத களிர் சூதில் மிதிபட்டாளோ பாஞ்சாலி !                   

பகடையுருட்டாட்டத்தில் பணயமாய் பறிபோன

பஞ்சாலியைத்  துரியோதனன் அரசவைக்கிழுத்து

அரங்கேற்றியதோ அவள் கற்புக் களவாடும்

காட்சியாக துயிலுரிக்கத்  தம்பி துச்சாசனனை

ஏவ இடை தழுவிய சேலையை வலிவான கரங்கள்

இழுக்கத் தடுத்துப் பிடித்தப் பஞ்சாலி கைகள் தளர

இரு கரங்கள் மேல் தூக்கிக் கோவிந்தாவென்றக்

கூக்குரலில் வண்ணச் சேலைகள் ஓயா அலைபோல    

பூ மகளையும் போர்த்து விஞ்சுமளவு வர கோவிந்தன்

விந்தையே சேலையைக்  கொடுத்ததும்.

 நாராயணன்

Poem by Dr A Narayanan, London

Xxx

One more poem by Dr A Narayanan

காலன் கணக்கு

கழுதைபோல் சுமந்த வினைகள் காலங்கள் கடந்தும்

உழுத உடலில் விதைத்த கருமங்களில் சருமப்பை வாட

விழுந்த தருணம் இரு கரங்கள் விண்ணோக்கி த்

தொழ நாடி நரம்பு தளர்ந்த பின் நாராயணனை

விழித்தாலும் வேந்தனோ வேதியனோ வித்தகனுக்கோ 

கூனிக் குறுகிய வினைகளின் சுமை அசலுக்கு விஞ்சிய

வட்டிக் கடன் போலக் காலனெனும் கடன்காரன் கதவைத்  

தட்டி கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்துக் கழியாதோ

உன் கணக்குப் பல சன்மங்களிலு மென இவர் வீடு 

காலியாக விளைந்த மறு பிறவி தொடருமெங்கோ

 நாராயணன்   

Poem by Dr A Narayanan, London

tags- சேலை, கண்ணன், லீலை,  கவர்ந்தவன் ,கொடுத்தவன், 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: