ரஷிய கவிஞர், மீனவர் மகன் மிகைல் லொமொனோசொவ் (Post No.9996)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9996

Date uploaded in London – 19 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மிகைல் லொமொனோசொவ் MIKHAIL LOMONOSOV , ரஷியாவில் மீனவர் மகனாகப் பிறந்தார். பெரும் கவிஞராகவும் விஞ்ஞானியாகவும், மொழிகள் பற்றிய அறிஞராகவும் உயர்ந்தார். நம்ம ஊர் வேத வியாசரை நினைவு படுத்துகிறார் மிகைல் லொமனோசொவ்.

அவர்  பல விஞ்ஞானக்  கண்டுபிடிப்புகளை செய்தார் .ரஷிய மொழியை இலக்கியத்திற்கு ஏற்றவாறு செம்மைப்படுத்தினார் . தானே பல விஷயங்களையும் கவிதைகளையும் எழுதி முன்னோடியாகத் திகழ்ந்தார்.

மிகைல் லொமனோசொவ் LOMONOSOV ரஷியாவின் வட பகுதியில் ஒரு மீனவரின் மகனாகப் பிறந்தார்.

அவர் தந்தையின் தொழிலைப் பின்பற்றி மீன் பிடித்து வந்தார். ஆயினும் அவருக்கு அறிவு வேட்கை பிறந்தது. கல்வி கற்கத்  துடியாய்த் துடித்தார்.19 வயதானபோது கையில் கால் துட்டுக் காசு இல்லாமல் நடந்தார் , நடந்தார் தலைநகர் மாஸ்கோவுக்கே நடந்தார்.

மாஸ்கோவுக்கு வந்த லொமொனோசொவ் தன்னுடைய குலம், கோத்திரம் ஆகியவற்றை மறைத்து, புமையை மட்டும் காட்டி, உயரர்ல மக்கள் மட்டுமே கற்கும் பெரிய கல்வி நிறுவனங்களில் பயின்றார். அவரது புலமையை அறிந்த, ஆசிரியர்கள் அவரை 25 வயதில் உயர்கல்விக்காக ஜெர்மனிக்கு அனுப்பினர். அங்கே அவர் கவிதைகளை எழுதத் துவங்கினார். படிப்பு முடிந்து ரஷியாவுக்குத் திரும்பிய அவருக்கு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அகாடமியில் ACADEMY OF St. PETERSBURG ரசாயனப் பேராசிரியர் பதவி கொடுக்கப்பட்டது. இது நடந்தது 1745ம் ஆண்டில்.

ரஷ்யாவின் முதல் ரசாயன சோதனைச் சாலையை முதல் முதலில் நிறுவினார் . பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்தார்.  பன்னாட்டு ஆராய்ச்சிகளையும் விட இவர் முன்னனியில் நின்றார்; தாய் நாடாகிய ரஷ்யாவை மிகவும் நேசித்த அவர் அங்கே விஞ்ஞானத்தையும் கலாசாரத்தையும் பரப்புவதே தமது கடமை என்று கருதினார்.. அக்காலத்தில் பிரெஞ்சு மொழிதான் பெரிய இலக்கிய மொழி என்று கருதப்பட்டது, அதற்கு மாற்றாக ரஷ்ய மொழி திகழ அவர் அரும்பாடுபட்டார் . ரஷ்யாவின் பல பகுதிகளில் ரஷ்ய மொழி வெவ்வேறுவிதமாகப் புழங்கியது. அவற்றை எல்லாம் ஆராய்ந்து ரஷ்ய மொழியைச் செம்மைப்படுத்தினார். இலக்கியத்துக்காக மூன்று வகை பாணியை – STYLES ஸ்டைலை உருவாக்கினார். கதைகள், சோக நிகழ்வுகள், நகைச்சுவை படைப்புகள், இதிகாசங்கள் ஆகியவற்றுக்கு என தனித்தனி பாணிகளை வகுத்தார். அவரே கவிதைகள் எழுதியதோடு ரஷ்ய மொழியில் நிறைய  விஞ்ஞான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதினார்.

பிறந்த தேதி -நவம்பர் 19, 1711

இறந்த தேதி – ஏப்ரல் 15, 1765

வாழ்ந்த ஆண்டுகள் – 53

எழுதிய நூல்கள் –

1743 – Morning Meditation

1743 – Evening Meditation on the

Majesty of God

1750 – Tamira and Selim

1752- Demofont

1756 – Hymn to the Beard

-subham–

tags- ரஷிய கவிஞர், மீனவர் மகன்,  மிகைல் லொமொனோசொவ், Lomonosov

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: