உலக இந்து சமய செய்தி மடல் 22-8-2021 (Post No.10,006)

COMPILED BY LONDON SWAMINATHAN

Post No. 10,006

Date uploaded in London – 22 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை ஆகஸ்ட் 22 ஆம் தேதி   ,2021


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் RANI SRINIVASAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது RANI SRINIVASAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

இன்று உலக சம்ஸ்க்ருத தினம். பாரதப் பிரதமர் தனது ட்வீட்டில் அனைவருக்கும் நாள் வாத்துக்களைத் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஆவணி பவுர்ணமி தினத்தன்று உலக சம்ஸ்க்ருத தினம் கொண்டாடப்படுகிறது.

XXX

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரா?; ஸ்டாலினை எச்சரிக்கிறார் சாமி!


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற, சட்டத்தின் வாயிலாக 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகள், முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட்டுள்ளன.

சுப்பிரமணியன் சாமி பேட்டி:

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மிகுந்த சிரமங்களுக்கு இடையே தான் முதல்வராகி இருக்கிறார். தி.க., ஆட்களின் பிடியில் சிக்கி, தவறான செயல்பாடுகளை, அரசு அதிகாரத்தின் வாயிலாக செய்கிறார். சென்னை, கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார். ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்கு, அப்பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும், அந்த பிரச்னைக்குள் நுழைந்தேன். ‘சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன்; ஆட்சியைக் கலைப்பேன்’ என சொன்னதும், ஸ்டாலின் பின்வாங்கினார். திடீரென, தி.க., சொன்னதை கேட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கியுள்ளார்.

 முதல்வர் ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம்.

முதல்வர் என்பதால், அவர் இஷ்டத்துக்கு செய்ய முடியாது. இப்படித் தான், சிதம்பரம் நடராஜர் கோவிலில், தீட்ஷிதர்களிடம் இருந்து நிர்வாக உரிமையை அரசு பறித்தது. அதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். பின், உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கிலும் வாதாடினேன். இறுதியில், நடராஜர் கோவிலை தீட்ஷிதர்களே நிர்வகிக்கலாம் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். நடராஜர் கோவில் நிர்வாகம் என்பது, பல நுாற்றாண்டுகளாக, தீட்ஷிதர்கள் அனுபவித்து வரும் சிறப்பு உரிமை. அது, அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது. அதனால், ஏற்கனவே தெளிவாக இருக்கும் பல்வேறு சட்டங்களை, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, முதல் கட்டமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன். தேவையானால், உச்ச நீதிமன்றம் வரை செல்வேன். எனவே, இந்த உத்தரவை உடனடியாக, முதல்வர் ஸ்டாலின் ‘வாபஸ்’ பெற வேண்டும். இல்லையென்றால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை ஸ்டாலின் மதிக்காமல், ஹிந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார். அதை தடுக்கவே போராடுகிறேன். புரிந்து கொண்டு, ஸ்டாலின் வாபஸ் பெற்றால், நீதிமன்ற கண்டனத்தில் இருந்து தப்பிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமனத்தால் கலாசாரம் சீரழியும்: விஷ்வ ஹிந்து பரிஷத் எச்சரிக்கை

”அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற நடைமுறையால், தமிழகத்தில் கலாசாரமும், பண்பாடும் சீரழியும். அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்,” என, விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.

ஆகம விதிமுறைகளை மீறி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என, தமிழக அரசு பலரையும் கோவில் பூஜை பணிகளுக்கு நியமித்து வருகிறது. இது பக்தர்கள் மத்தியில் கடும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. புதியதாக கோவில்களில் நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள், அர்ச்சனையின்போதும், அபிஷேக ஆராதனையின்போதும், பாராயணம் செய்யும் மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்களின் உச்சரிப்பு மாறியுள்ளது.
மந்திரங்கள் மற்றும் சைகை நடைமுறைகள் மாறியுள்ளன. இது ஆகமவிதிகளுக்கும், வேத நடைமுறைகளுக்கும் எதிரானதாக ஆன்மிகவாதிகள் கூறுகின்றனர்.


ஹிந்து மதத்துக்கான ஆகம, வேத நடைமுறைகள் 3,000 ஆண்டு பழமையானது. இதுவரை மன்னர் ஆட்சிக்காலத்தில் கூட கோவில் நடைமுறைகள் மாற்றப்படவில்லை.


ஹிந்து சமய மரபுகளை மீறி, அனைத்து தரப்பினரையும் அர்ச்சகர்களாக்க அதிகாரத்தை கொடுத்தது யார்? இதற்கென்று யாரிடமும் ஆலோசனை எதுவும் பெறாமல் நடைமுறைப்படுத்தியது தவறு. இது தெய்வக்குற்றம்.

திருமூலர் கூற்றுப்படி, அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். தற்போது அதர்மம் மேலோங்கி வருகிறது. தமிழகத்தில் கலாசாரமும், பண்பாடும் சீரழிந்து வருகிறது.

ஜனநாயக நாட்டில் ஆளுக்கொரு சட்டம் இருக்கக் கூடாது. அனைத்து சமூகத்துக்கும் பொதுவான சட்டம் வேண்டும். தமிழக அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு, வேதாந்தம் கூறினார்.

XXX

சிவாச்சாரியார்களை அழித்து விடாதீர்கள்‘: நீதியரசர்கள் உத்தரவு

சென்னை- -”எந்தெந்த கோவில்களில், எந்தெந்த முறைப்படி பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறதோ; அதன்படியே செய்ய வேண்டும் என, நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த நீதி எங்களுக்கு வேண்டும்,” என, சுவாமிநாதன் சிவாச்சாரியார் தெரிவித்தார்.

சென்னை வாழ் சிவாச்சாரியார் சமூக நல சங்கம்சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், சுவாமிநாதன் சிவாச்சாரியார் கூறியதாவது:அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என அரசு அறிவித்து, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. கோவில்களில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பூஜை செய்தவர்களை நீக்கி விட்டு, புதிய நபர்களை அர்ச்சகர்களாக நியமித்துள்ளனர். இது, ஆகம விதி மீறல்.

பெரும்பாலான கோவில்களில் சிவாச்சாரியார்கள், தினக்கூலி, வாரக்கூலி, சம்பளம் இல்லாமல் தட்சணையை மட்டும் எதிர்பார்த்து பணிபுரிந்து வருகின்றனர். அது போன்றவர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. அதைவிடுத்து, அதிக வருமானம் வரும், சிவாச்சாரியார்கள் பணியாற்றும் கோவில்களில் தான், பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அர்ச்சகர்கள் இல்லாத பல கோவில்களுக்கு அர்ச்சகர்களை நியமித்து, அனைத்து விதமான பூஜைகளையும் செய்ய வேண்டும்


அரசாங்க பணி என்பது வேறு; ஆன்மிகப் பணி என்பது வேறு.பிராமணர் சமுதாயத்தின் உட்பிரிவான ஆதிசைவர் எனும் சிவாச்சாரியார்கள் சிறுபான்மையினர். அவர்களை அழித்து விடாதீர்கள்.எந்தெந்த கோவில்களில், எந்தெந்த முறைப்படி பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறதோ; அதன்படியே செய்ய வேண்டும் என, நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த நீதி எங்களுக்கு வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் செய்திக்கு  லண்டன் ஞான மயம் குழு நன்றி தெரிவிக்கிறது

Xxx

அர்ச்சகர்கள் நியமனம்: ஆகம விதிகளை மீறிய செயல்!

”கடவுளே இல்லை என்று நாத்திகம் பேசுவோர், கடவுளை எப்படி வணங்க வேண்டும்; யார் பூஜை செய்ய வேண்டும்; எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றெல்லாம் தீர்மானிப்பது ஏன்,” என, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

அவர் கூறியதாவது: திருச்சி சமயபுரம் உள்ளிட்ட கோவில்களில், பல ஆண்டுகள் பணிபுரிந்த குருக்கள் பலரை நீக்கிவிட்டு, பிராமணர் அல்லாத பலரை அர்ச்சகர்களாக நியமித்துள்ளனர். இந்த அத்துமீறலை, தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

XXX

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற தமிழக அரசின் உத்தரவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

XXXX

மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன்: நித்தியானந்தா அறிவிப்பு

மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டதாகவும், ஆன்லைன் மூலமாக பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளதாகவும் பேஸ்புக்கில் சாமியார் நித்தியானந்தா பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மதுரை ஆதீன மடத்தின் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் உடல்நிலை குறைவால் கடந்த 12-ம் தேதி காலமானார். அவரது உடல் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் மறைவால் 293வது மடாதிபதியாக ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மதுரை ஆதினத்தின் 293வது பீடாதிபதியாக பதவியேற்றுவிட்டேன் என்று நித்தியானந்தா பேஸ்புக்கில் அறிவித்துள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு நித்தியானந்தாவை மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். இது கடும் சர்ச்சைகளை சந்தித்த நிலையில் 2019ம் ஆண்டு இந்த அறிவிப்பை அவர் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.

Xxxx

மோடி கோவிலில் திடீரென சிலை அகற்றம்   புனே நகரில் பரபரப்பு

 புனே அவுந்த் பகுதியில் பிரதமர் மோடிக்கு அந்த பகுதியை சேர்ந்த பாரதீய ஜனதா கட்சித்  தொண்டரான 37 வயது மயூர் முண்டே என்பவர் கோவில் கட்டினார். கோவிலுக்குள் மோடியின் மார்பளவு சிலையும் வைக்கப்பட்டது. 

 அயோத்தியில் ராமர் கோவிலை கட்டிய மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் எனது சொந்த இடத்தில் அவருக்கு கோவில் கட்டியதாகவும், இதற்காக ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் செலவு செய்ததாகவும் மயூர் முண்டே கூறினார். மேலும் அவர், “மோடி பிரதமரான பிறகு நாட்டில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்துக்குரிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியது, ராமர் கோவில் கட்டுவது, முத்தலாக் தடை சட்டத்தை அமல்படுத்தியது போன்றவற்றில் வெற்றி கண்டு உள்ளார்” என்று கூறியிருந்தார்.

திடீரென்று சிலை அகற்றப்பட்டதற்கு தில்லியிலிருந்து வந்த கட்சித் தலைவர் உத்தரவே காரணம் என்று  முண்டேயும் அவருடைய வழக்கறிஞரும்   பத்திரிகையாளருக்கு  நீண்ட பேட்டி அளித்தனர். பாரதீய கட்சித் தலைமை உத்தரவிட்டதால்தான் அகற்றப்பட்டது. ஆயினும் மோடி, நாட்டுக்கு விரிவான சேவை செய்து வருவதை  நாங்கள் மதிக்கிறோம் என்று அவர்கள் விரிவாகப்  பாராட்டினார்கள்.

Xxx

சீதையாக நடிக்க ரூ.12 கோடி கேட்ட கரீனா கபூருக்கு எதிர்ப்பு

ராமாயணம் படத்தில் சீதை வேடத்தில் நடிக்க கரீனா கபூர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியானது. இதற்கு வலைத்தளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

அதிக பொருட் செலவில் தயாராக உள்ள ராமாயணம் படத்தில் சீதை வேடத்தில் நடிக்க கரீனாகபூரை அணுகியதாகவும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கரீனா கபூர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதாகவும் தகவல் வெளியானது.

இதையடுத்து சீதை வேடத்துக்கு அதிக சம்பளம் கேட்டு மத நம்பிக்கையை கரீனா கொச்சைப்படுத்திவிட்டதாக வலைத்தளத்தில் பலரும் கண்டித்து வருகிறார்கள். கரீனா கபூரிடம் சீதையாக நடிக்க ரூ.12 கோடி கேட்டீர்களா? என்று கேள்வி எழுப்பியபோது அவர் தெளிவான பதில் அளிக்கவில்லை.

XXXX

நேயர்கள் அனைவருக்கும்

ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.

ஆவணி அவிட்ட வாழ்த்துக்கள்;

உலக சம்ஸ்க்ருத தின வாழ்த்துக்கள்

xxxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் RANI SRINIVASAN

நன்றி, வணக்கம்

tags – tamilnews,hindunews, 2282021

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: