
Post No. 10,013
Date uploaded in London – 24 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகிலேயே திசைகளை தினமும் வணங்குபவர்கள் இந்துக்கள்தான். முஸ்லீம்கள் மெக்காவில் காபா இருக்கும் திசையை மட்டும் நோக்கி வணங்குவர். முஸ்லீம் நாடுகளின் விமான சர்வீஸில் பறந்தால் ஆசனத்துக்கு முன்னாலுள்ள COMPUTER கம்ப்யூட்டர் திரைகளில் மெக்கா இருக்கும் திசையை காட்டிக்கொண்டே வரும்.; அதை நோக்கித்தான் முஸ்லீம்கள் தொழ வேண்டும். ஆனால் இந்துக்களுக்கு அந்த கஷ்டமே இல்லை . எல்லா திசைகளிலும் கடவுள் இருக்கிறான் என்று வணங்குவார்கள் . குறிப்பாக பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளில் செய்யும் சந்தியா வந்தனத்தில் கிழக்கு தெற்கு, மேற்கு, வடக்கு என்று (வலம் வரும் திசை ) சம்ஸ்க்ருதத்தில் மந்திரம் சொல்லி வணங்குவர். இதை இந்துக்கள் சொல்லும் கவசங்களிலும் காணலாம். எல்லா திசைக்கும் உரிய கடவுளின் பெயரைச் சொல்லி அந்த திசையிலும் இறைவனின் பாதுகாப்பு இருக்கட்டும் என்று இறைவனை இறைஞ்சுவர்.
முன்னர் ஒரு கட்டுரையில் கந்த சஷ்டிக் கவசத்துக்கும் ரிக் வேதத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டோம். இன்று விநாயக கவசத்தையும் ரிக் வேதத்தையும் ஒப்பிடுவோம்.
XXX

ரிக் வேதம் RV.8-61
ரிக் வேதம் RV.8-61 துதியை ஞானக் கண்ணால் கண்டு நமக்கு அளித்த ரிஷியின் பெயர் -பர்க்கப் பிரகாதன்
XXX
8-61-15
அனைத்தையும் அறியும் இந்திரனே! விருத்திராசுரனைக் கொன்றவனே !
எங்கள் முதல், கடைசி, நடு புதல்வர்களைக் காப்பாயாக. அவன் முன் புறத்திலும் பின்புறத்திலும் காப்பானாகுக .
XXX
8-61-16
மேற்கிலிருந்தும், தெற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும் , கிழக்கிலிருந்தும் , ஒவ்வொரு திசையிலிருந்தும் காப்பானாகுக .வானிலிருந்து வரும் ஆபத்திலிருந்து காக்கவும்; எங்களை ஆயுதங்களில் இருந்து காப்பாற்றவும் (இங்கு ஆயுதம் என்பது அதேவி= மூதேவி)
XXX
8-61-17
இந்திரனே! நல்லோரின் தலைவனே ! தினமும் காக்க; இனி வரும் நாளை , அதற்குப் பின் வரும் நாளிலும் காக்க ;இரவும் பகலும் எல்லாத் திசைகளிலும் காக்கவும்
XXX
இதற்கு முந்தைய மந்திரங்களில் பகைவரை வெல்வோமாக; உணவைத் தருக (மந்திர எண் 4); எங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்க(5); நான் விரும்பும் எதையும் தருக (6); வள்ளலே ! பசுக்களையும் குதிரைகளையும் தருக (7); பாவம் அகல, கருமித் தனம் அகல, ஒளியின்மை /இருள் அகல நீ உதவியதாக எண்ணுகிறோம் (11); பயமின்மையை அருளுக(13) என்றும் வேண்டுகிறார்.
இதோ விநாயக கவசம்:–
1.விநாயக கவசமும் அதன் பலனும்:–
வளர் சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க!
வாய்ந்தசென்னி அளவுபடா அதிக சவுந்தர தேகம்
மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க! விளரற
நெற்றியை என்றும் விளங்கிய காசிபர் காக்க!
புருவந் தம்மைத் தளர்வில் மகோதரர் காக்க!
தடவிழிகள் பாலசந்திரனார் காக்க!
2.கவின்வளர் அதரம் கசமுகர் காக்க!
தால் அங்கணக்கீரிடர் காக்க!
நவில்சிபுகம் கிரிசை சுதர் காக்க!
நனி வாக்கை விநாயகர்தாம் காக்க!
அவிர்நகை துன்முகர் காக்க!
அள் எழிற் செஞ்செவி பாசபாணி காக்க!
தவிர்தலுறாது இளங்கொடிபோல் வளர்மணி
நாசியைக் சித்திதார்த்தர் காக்க!
3.காமருபூமுகந்தன்னைக் குணேசர் நனி காக்க!
களம் கணேசர் காக்க!
வாமமுறும் இருதோளும் வயங்கு கந்தபூர்வசர்
தாம் மகிழ்ந்து காக்க! ஏமமுறு மணிமுலை
விக்கின விநாசர் காக்க! இதயந் தன்னைத்
தோமகலுங் கணநாதர் காக்க!
அகட்டினைத் துலங்கு ஏரம்பர் காக்க!
4.பக்கம் இரண்டையும் தராதரர் காக்க!
பிருட்டத்தைப் பாவம் நீக்கும் விக்கினகரன் காக்க!
விளங்கிலிங்கம் வியாளபூடணர்தாம் காக்க!
தக்க குய்யந்தன்னை வக்கிரதுண்டர் காக்க!
சகனத்தை அல்லல் உக்க கணபன் காக்க!
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க!
5.தாழ்முழந்தாள் மகாபுத்தி காக்க!
இருபதம் ஏகதந்தர் காக்க! வாழ்கரம்
க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க! முன்கையை
வணங்குவார் நோய் ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க!
கேழ்கிளறும் நகங்கள் விநாயகர் காக்க!
கிழக்கினிற் புத்தீசர் காக்க!
6.அக்கினியிற் சித்தீசர் காக்க!
உமாபுத்திரர் தென்னாசை காக்க!
மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க!
விக்கினவர்த்தனர் மேற்கென்னுந் திக்கதனிற் காக்க!
வாயுவிற் கசகன்னர் காக்க!
திகழ் உதீசி தக்க நிதிபன் காக்க!
வடகிழக்கில் ஈசநந்தனரே காக்க!
7.ஏகதந்தர்பகல் முழுதுங் காக்க! இரவினும் சந்தி
இரண்டன் மாட்டும் ஒகையின் விக்கினகிருது காக்க!
இராக்கதர் பூதம் உறு வேதாளம் மோகினி பேய்
இவையாதி உயிர்த்திறத்தால் வருந்துயரும்
முடிவிலாத வேகமுறு பிணிபலவும் விலக்குபு
பாசாங்குசர்தாம் விரைந்து காக்க!
8.மதி,ஞானம், தவம், தானம், மானம், ஒளி, புகழ்,
குலம், வண்சரீரம், முற்றும் பதிவான தனம்,
தானியம், கிரகம், மனைவி, மைந்தர், பயில்
நட்பாதிக் கதியாவும் கலந்து சர்வாயுதர் காக்க!
காமர் பவுத்திரர் முன்னான விதியாரும்
சுற்றமெலாம் மயூரேசர் எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க!
9.வென்றி,சீவிதம் கபிலர் காக்க!
கரியாதியெலாம் விகடர் காக்க!
என்றிவ்வாறிது தனை முக்காலுமும் ஓதிடின்,
நும்பால் இடையூறென்றும் ஒன்றுறா, முனிவரர்காள்,
அறிமின்கள், யாரொருவர் ஓதினாலும் மன்ற ஆங்கவர்
தேகம் பிணியற வச்சிர தேகமாகி மின்னும்!
XXX
விநாயக கவசப் பலன்
10.யாத்திரையில் தோத்திரம் செய்தால் சகல
விக்கினமும் இரியல் போக
மூத்த பயன் கைகூடும் சமரின் மொழிந்
திடில் விசயம் முற்றும் நாளும்
ஏத்தியிரு முறை இருபத் தொருநாள் வந்
தித்டின் மாரணம் ஈண்டேதம்
பனமாதி நிலை பேறெய்தும்.
11.நித்தலு மூவேழுமுறை செபித்திடில்கா
ராக்கிருகநீங்கு மன்னர்
பொத்துமுளநிட்டூரம் போம் அரையன்
தனைக் காணும்போது முக்கால்
பத்தியின் ஓதிடின் அவன் தான் வசப்படுவன்
இதைத் தாளிப் பனைமெல்லேட்டில்
வைத்தெழுதிப் படிப்பினும் கேட்பினும் பூசை
வயக்கினும் வல் இடரும் தீரும்.
12.அன்பு, உறுதி, ஆசாரம் உடையார்க்கு இக்
கவசத்தை அறைக! அல்லார்க்கு
என்பெறினும் உரையற்க! எனக்கிளந்து
மரீசி தனது இருக்கை உற்றான்.
–சுபம்–
கந்த சஷ்டிக் கவசத்தில் ரிக் வேத வரிகள் – Tamil and …
https://tamilandvedas.com › கந்த-…
13 Aug 2021 — WRITTEN BY LONDON SWAMINATHAN. Post No. 9972. Date uploaded in London – 13 AUGUST 2021. Contact – swami_48@yahoo.com.
கந்த சஷ்டிக் கவசத்தில் ரிக் வேத வரிகள் – Swami’s …
https://swamiindology.blogspot.com › post-no9972
13 Aug 2021 — WRITTEN BY LONDON SWAMINATHAN. Post No. 9972. Date uploaded in London – 13 AUGUST 2021. Contact – swami_48@yahoo.com.
Tagged with விநாயக கவசம் – Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › வ…
17 Sept 2015 — DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. Written by London swaminathan.
—SUBHAM–

TAGS- விநாயக கவசம், ரிக் வேதம்,