
Post No. 10,022
Date uploaded in London – 26 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அனைத்து வழிபாடும் சிவனையே சேர்கிறது!
ச.நாகராஜன்

இந்து மதத்தின் உன்னதமான இறை கொள்கையால் உலகிலுள்ள அனைத்து அறிஞர்களும் அதை வியந்து பாராட்டிப் போற்றுகின்றனர்.
ஏகம் ஸத்! விப்ரா: பஹுதா வதந்தி!!
உண்மை ஒன்றே; அதை அறிஞர்கள் பலவாறாகக் கூறுகின்றனர்.
ஆக இந்த ஒரே பிரம்மம் என்ற கொள்கையே வேதக் கொள்கை.
இதிலிருந்து விரிந்து பரந்த பல கொள்கைகளை இன்று க்வாண்டம் மெகானிக்ஸ், க்வாண்டம் பிஸிக்ஸ் போன்ற நவீன அறிவியல் துறைகளும் கூட அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளன; விஞ்ஞானிகள் வியக்கின்றனர்.
ஸ்வாமி விவேகானந்தர் சிகாகோவில் சர்வமத மாநாட்டில் 1893ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி உரையாற்றினார்.
அவர் தனது உரையில் புஷ்பதந்தர் இயற்றி அருளிய சிவ மஹிம்ன ஸ்தோத்ரத்தில் வரும் ஏழாம் ஸ்லோகத்தின் அர்த்தத்தை எடுத்துரைத்தார் இப்படி:-
I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings:
“As the different streams having their sources in different places all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee.”
சிவமஹிம்ன ஸ்தோத்ரத்தில் வரும் ஸ்லோகமும் அதன் அர்த்தத்தையும் கீழே காணலாம். (ஆதாரம், நன்றி :- https://www.sanskrit-trikashaivism.com/en/shiva-mahimna-stotram-normal-translation/597)
त्रयी साङ्ख्यं योगः पशुपतिमतं वैष्णवमिति प्रभिन्ने प्रस्थाने परमिदमदः पथ्यमिति च। रुचीनां वैचित्र्यादृजुकुटिलनानापथजुषां नृणामेको गम्यस्त्वमसि पयसामर्णव इव॥७॥ Trayī sāṅkhyaṁ yogaḥ paśupatimataṁ vaiṣṇavamiti prabhinne prasthāne paramidamadaḥ pathyamiti ca| Rucīnāṁ vaicitryādṛjukuṭilanānāpathajuṣāṁ nṛṇāmeko gamyastvamasi payasāmarṇava iva||7||
“The three Veda-s (trayī), Sāṅkhya (sāṅkhyam), Yoga (yogaḥ), the doctrine (matam) of Paśupati (paśupati) –i.e. the Śaiva doctrine– (and) the Vaiṣṇava (doctrine) –pertaining to Lord Viṣṇu– (vaiṣṇavam iti)”; in (these) different (prabhinne) source(s) (prasthāne) (there are) thus (iti ca) this (idam) and that (adas) way (pathyam) toward the Highest (State) (param) –i.e. there are various ways of realizing the Supreme Self or Śiva–. For the men (nṛṇām) who are devoted (juṣām) to multiple (nānā) paths (patha), straight and crooked ones (ṛju-kuṭila), in accordance with the variety (vaicitryāt) of their appetites (rucīnām), You (tvam) are (asi) the only (ekaḥ) goal to be attained (gamyaḥ), just as (iva) the ocean (is) (arṇavaḥ) with regard to the waters (payasām) –i.e. the water of rivers, rain, etc. ultimately flows into ocean–||7||
த்ரயீ ஸாங்க்யம் யோக: பசுபதி மதம் வைஷ்ணவ மீதி
ப்ரபின்னே ப்ரஸ்தானே பரமித மத: பத்ய மிசி ச |
ருசீனாம் வைசித்ர்யாத் ருஜுகுடில நானாபத ஜுஷாம்
ந்ருணாமேகோ கம்யஸ் த்வமஸி பயஸாமர்ணவ இவ || (ஸ்லோகம் 7)
பொருள் :- வைதிக மதம், கபிலரின் ஸாங்க்ய மதம், பதஞ்சலியின் யோக மதம், சைவ மதம், பாஞ்சராத்திர மதம் என்று சாஸ்திர மார்க்கம் பலவிதமாக இருக்கும் போது இது தான் சிறந்தது அது தான் இதமானது என்றபடி (முன் வாசனையின் படி) விருப்பங்கள் வேறுபடுவதால் நேராயும் கோணலாயும் உள்ள பற்பல மார்க்கங்களில் (அல்லது மதங்களில்) செல்லுகின்ற மனிதர்களுக்கு நேராகவும் வளைவாகவும் செல்லுகின்ற நதிகளுக்கு (அடையும் ஒரே இடமாக அமையும்) கடல் போல பரமேஸ்வரனாகிய நீர் ஒருவரே புகலிடமாக இருக்கிறீர்!
இந்த மந்திரக் கருத்தையே தனது சிகாகோ உரையில் ஸ்வாமி விவேகானந்தர் எடுத்துரைத்தார்; உலகையே தன் வசம் ஈர்த்தார்.
தினமும் காயத்ரி மந்திரம் ஜெபித்து சந்தியாவந்தனம் செய்யும் போது கூறும் மந்திரம் இது:
ஆகாஸாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம்
ஸர்வ தேவ நமஸ்கார: ஸ்ரீ கேசவம் ப்ரதி கச்சதி
ஆகாஸாத் – ஆகாயத்திலிருந்து
பதிதம் தோயம் – கீழே விழும் நீர்த்துளியானது
யதா கச்சதி ஸாகரம் – எப்படிக் கடலைச் சென்று அடைகின்றதோ (அதே போல)
ஸர்வ தேவ நமஸ்கார: – அனைத்து தேவர்களுக்கும் செய்யும் நமஸ்காரம் (வழிபாடு)
ஸ்ரீ கேசவம் ப்ரதி கச்சதி – ஸ்ரீ கேசவனையே சென்று அடைகிறது.
இதையும் இங்கு நினைத்துப் பார்த்து மகிழலாம்.
கச்சியப்ப சிவாசாரியார் தமிழில் இயற்றிய கந்த புராணம் ஆறு காண்டங்களைக் கொண்டது.
- உற்பத்தி காண்டம் 2) அசுர காண்டம் 3) மகேந்திர காண்டம் 4) யுத்த காண்டம் 5) தேவ காண்டம் 6) தக்ஷ காண்டம்.
10345 செய்யுள்களைக் கொண்ட அற்புத நூல் இது.
தக்ஷ காண்டத்தில் 24 படலங்கள் உள்ளன. இதில் மட்டும் 2067 செய்யுள்கள் உள்ளன.

அவற்றுள் முதல் படலமாக அமைவது உபதேசப் படலம். அதில் வரும் 17வது செய்யுள் இது:-
“யாதொரு பொருளை யாவர் இறைஞ்சினும் அதுபோய் முக்கண்
ஆதியை அடையும் அம்மா அங்கது போலத் தொல்லை
வேதம துரைக்க நின்ற வியன்புகழ் அனைத்தும் மேலாம்
நாதனை அணுகும் எல்லா நதிகளுங் கடல்சென்றென்ன”
இதன் பொருள் எளிதில் விளங்கக் கூடிய ஒன்றே.
கடலை எல்லா நதிகளும் சென்று அடைவது போல பழம்பெரும் வேதம் உரைக்கும் மேலான புகழ் அனைத்தும் சிவனையே சேரும். எந்த ஒரு பொருளை யார் இறைஞ்சிடினும் அது முக்கண் ஆதி பிரானையே அடையும்.
ஆதிப் பரம்பொருள் ஒன்றே. அதை யார் எப்படி வழிபட்டாலும் அது அந்தப் பரம்பொருளையே சென்று சேரும்.
இதுவே வேதம் கூறும் கொள்கை!
எத்துணை அற்புதமானது!
வாழிய வேதம்! வாழிய பாரதம்!! வாழ்க வாழ்க இணையிலா இந்து மதம்!!!
****
INDEX
ஸ்வாமி விவேகானந்தா சிகாகோ உரை
சிவ மஹிம்ன ஸ்தோத்ரம்
சந்தியாவந்தன மந்திரம்
கந்த புராணம் உபதேசப் படலச் செய்யுள்
tags – வழிபாடு, சிவ, மஹிம்ன ஸ்தோத்ரம்
