
WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,028
Date uploaded in London – 28 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கேள்விகள்! ஆலயப் பாதுகாப்புக் கேள்விகள் ஆயிரம்!
ச.நாகராஜன்
ஸ்வாமி விவேகானந்தர் கூறியது நூற்றுக்கு இருநூறு சதவிகிதம் சரி தான்! ஹிந்துக்களுக்கு Organizing திறன் அவ்வளவாக தற்காலத்தில் இல்லை என்றார்.
உண்மை தான்! அடிமேல் அடி அடித்து நம்மை மழுங்க வைத்து விட்டனர் முகலாயர்கள், போர்த்துக்கீசியர்கள், வெள்ளைக்காரர்கள்!
சரி, சுதந்திரம் பெற்ற பின்னராவது நமது ஆலயங்களுக்கு விடிவு காலம் பிறக்குமா என்று எண்ணிப் பார்த்தால், அது மிக மோசமாக அல்லவா போய்க் கொண்டிருக்கிறது! ஸ்வாமிஜி கூறியது போல நமக்கு அனைத்து ஹிந்துக்களையும் ஓரிழையில் இணைக்கு Organizing Capacity இல்லை என்பது நிதரிசனமாகத் தெரிகிறது.
இதைப் புரிந்து கொண்டுள்ள நாசகார சக்திகள் நம் ஆலயங்களையும் அதன் மூலம் வேர் விட்டு வளர்ந்த நம் பண்பாட்டிற்கும் குறி வைத்து அவற்றைச் சிதைக்க முயல்கின்றன; சிதைக்கின்றன!
இன்று ஹிந்து ஆலயங்கள் இருக்கும் நிலை பற்றி நம்மில் 99 சதவிகிதம் பேருக்கு உண்மை நிலை என்னவென்றே தெரியாது. (இதில் என்னையும் சேர்த்துக் கொள்ளலாம்)
சரி கேள்விகளாகவது தொகுத்துப் பார்க்கலாம் என்று நினைத்தால் மளமளவென அருவியாகக் கொட்டுகிறது கேள்விகள்!
இந்த நேரத்தில் 1968 முதல் ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் கமிட்டியை உருவாக்கி அதற்காக உழைத்து உயிரையும் ஈந்த சேலம் திரு எம்.ராமசாமி அவர்களை நினைத்துப் பார்க்கிறேன். மானனீய கோபால்ஜி ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்த்தின் சஹ பிராந்த ப்ரச்சாரகராக இருந்ததோடு ஆலயத்தின் மீது கொண்ட அக்கறையையும் அதற்காக இரவு பகலாக அவர் உழைத்ததையும் நினைத்து வியக்கிறேன். ஹிந்து முன்னணி இயக்கம் தொடங்கி இந்துக்களின் விழிப்புணர்ச்சிக்காக் அல்லும் பகலும் அனவரதமும் அவர் உழைத்த பான்மையை எண்ணிப் பார்க்கிறேன். அணில் போல மதுரை மாவட்ட ஆலயப் பாதுகாப்புக் கமிட்டிச் செயலாளராக இருந்து மதுரையில் விக்டோரியா எட்வர்ட் ஹாலில் மாபெரும் மதுரை மாவட்ட மாநாட்டை நடத்தியதை எண்ணிப் பார்க்கிறேன்.
என் மேல் திரு ராமசாமி, மானனீய கோபால்ஜி கொண்டிருந்த அன்பை நினைத்துப் பார்க்கிறேன்.
அவர்களின் ஆன்மா ஹிந்து ஆலயங்கள் விடுதலை அடையும் வரை நம்முடன் இருந்து வழி நடத்தும். இதில் ஐயமே இல்லை.
சரி இனி கேள்விகளுக்கு வருவோம். ஆயிரம் கேள்விகளையும் தொகுக்க ஆசை தான்.
முதலில் ஆரம்பத்தையாவது செய்வோமே!
பாரதத்தில் இருக்கும் கோவில்களை மொத்தமாகத் தொகுத்துப் பார்ப்பது இமாலய வேலை .ஆகவே முதலில் பிள்ளையார் சுழியாக தமிழகத்தைப் பற்றி மட்டும் நாத்திகர் கும்பல் செய்யும் நாசவேலைகளுக்கு இடையில் தமிழகக் கோவில்களைப் பற்றி சில கேள்விகளைக் கேட்போம்.
விடைகளைச் சேகரிக்க முயற்சிப்போம். குறைகளைப் போக்க எல்லோரும் இணைந்து ஆலோசித்து வழிகளைக் கண்டு அவற்றைக் கடைப்பிடிப்போம்.
பழைய மகோன்னதமான காலத்திற்கு ஆலயங்களைக் கொண்டு செல்வோம்.

கேள்விகள் இதோ:-
தமிழகத்தில் மொத்தம் எத்தனை ஆலயங்கள் உள்ளன?
இவற்றில் மன்னர்கள் கட்டியவை எத்தனை?
மன்னர்கள் ஆலயங்களுக்குக் கொடுத்த மானியங்கள், நகைகள், சொத்துக்கள் எவ்வளவு?
இவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளனவா?
அப்படியானால் ஆவணங்கள் எங்கே? கல்வெட்டுக்கள் முறையாகப் படி எடுக்கப்பட்டுள்ளனவா? அவை எங்கே?
மன்னர்கள் அல்லாமல் பின்னாளில் எழுந்த ஆலயங்கள் எத்தனை?
இவற்றை இந்து அறநிலையத் துறை எடுத்துக் கொண்டதா?
இந்து அறநிலையத் துறை பற்றி அரசியல் சட்டமும், தமிழக அரசுச் சட்டங்களும் என்ன சொல்கின்றன?
அறங்காவலர் எத்தனை கோவில்களுக்கு உள்ளனர்.
150 கோவில்களுக்கும் மேலாக அறங்காவலர்கள் இல்லை என்று ஆலய ஆர்வலர்கள் சொல்வது தெரிகிறது. ஏன் இல்லை?
இதற்கு அரசு கூறும் பதில் என்ன?
ஒரே அறங்காவலர் இன்னொரு கோவிலில் தக்கார். ஒரே தக்கார் இன்னொரு கோவிலில் அறங்காவலர்! இந்த இழிநிலை ஏன்? (உதாரணம் சமயபுரம் – திருச்சி கோவில்)
திருநெல்வேலி நாதஸ்வரக்காரரை ஏன் வெளியில் போகச் சொல்ல வேண்டும். பத்து வருடங்களுக்கும் மேலாக வெறு 1500 ரூபாய் சம்பளம் பெறும் இந்த பக்தரை ஏன் வெளியில் அனுப்பி இன்னொருவரை அங்கு நியமிக்க முயல வேண்டும்? லஞ்சம் பெற்று இன்னொருவரை அதிக சம்பளத்தில் நிறுவ நடக்கும் முயற்சியா?
அறங்காவலரின் சம்பளம் கோவில் வாரியாக எவ்வளவு?
அதே சமயம் கோவில் அர்ச்சகரின் சம்பளம் எவ்வளவு?
கோவில் உண்டியல் வருமானம் எவ்வளவு – கோவில் வாரியாக?
கோவிலின் அசையாச் சொத்துக்கள் எவ்வளவு? அது யார் வசம் இருக்கிறது? அதன் வருமானம் என்ன?
வந்தது என்றால் எவ்வளவு?
அதற்கு ஆடிடிங் உண்டா? (External Auditing இல்லவே இல்லை)
வரவில்லை என்றால் ஏன் வசூல் செய்யவில்லை?
ஆக்கிரமித்தோரை அகற்றினோம் என்றால் அவர்கள் யார்? அவர்கள் செய்த குற்றத்திற்கு தண்டனை என்ன? அவர்களால் ஆலயத்திற்கு ஏற்பட்ட இழப்பை அவர்கள் ஈடு செய்தார்களா? இல்லை எனில் அவர்களின் சொத்துக்களை முடக்க முடியுமா?
சுப்ரீம் கோர்ட் சேஷம்மாள் வழக்கிலும், சிதம்பரம் தீக்ஷிதர் வழக்கிலும் தீர்க்கமாக வழங்கிய தீர்ப்பு என்ன?
அவற்றை அனைவரும் அறியும் வகையில் வெளியிட அரசு முயற்சிகள் எடுத்தனவா?
அவற்றை மீறினால் மீறியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்.
அது அரசு எனில் தண்டனை என்ன? பாரத ஜனாதிபதியால் அரசு கலைக்கப்படலாமா – ஏனெனில் கோடானு கோடி மதிப்புள்ள ஆலயங்களை நிர்வகிக்காத குற்றத்தோடு, ஹிந்துக்களின் மனதைப் புண்படுத்திய பெரும் அவலமும் இதில் சேர்ந்துள்ளதே?
75க்கும் மேற்பட்ட வழி காட்டு நெறிகளை சென்னை உயர்நீதி மன்றம் கொடுத்ததா?
அவை என்ன? ஏன் ஹிந்துக்கள் அனைவருக்கும் தெரியும்படி அது விளம்பரப்படுத்தப்படவில்லை?
எந்த சைட்டில் அதைப் பார்க்கலாம்?
கோவில்களில் இந்த சட்ட நெறிகள் ஏன் போர்டுகளாக வைக்கப்படவில்லை?
தான் தோன்றித் தனமாக குருக்களையும் கோவில் பணியாளர்களையும் அற நெறிக்கு மாறாக சட்டத்திற்கு புறம்பாக வெளியில் தள்ளும் அல்லது ஒதுக்கும் அறங்காவலர்/ ஈ.ஓ.வை எந்தச் சட்டத்தின் படி போலீஸ் பிடிக்கும்? அவர்களிடம் பக்தர்கள் புகார் கொடுக்கலாமா?
திருவண்ணாமலைக்குச் சொந்தமாக சென்னையில் மலர் ஹாஸ்பிடல் எதிரே உள்ள அருணாசலம் காலனியில் எப்படி இரு சர்ச்சுகள் ஆலய நிலத்தில் எழுப்பப்பட்டுள்ளன? அதை அகற்ற யார் முயற்சிக்க வேண்டும்?
மயிலை ஆதி கேசவப் பெருமாள் கோவிலுக்கு உரிய கோடம்பாக்கம் அருகே உள்ள நிலத்தில் மசூதி எழுப்பப்பட்டுள்ளதா? எப்படி? ஏன்? யாரால்? எப்போது?
அதை அகற்ற யார் முயற்சி எடுக்க வேண்டும்? அரசா, அதிகாரிகளா? ஏன் செய்யவில்லை?
இப்படி தமிழகம் முழுவதும் எத்தனை இடங்களில் கிறிஸ்தவ, இஸ்லாமிய ஆக்கிரமிப்புகள் சட்ட விரோதமாக உள்ளன?
பட்டியலை தமிழக அரசு தயாரித்துள்ளதா? எப்போது வெளியிடும்? என்ன நடவடிக்கையை எப்போது எடுக்கும்?

கோவில்களில் உள்ள உண்டியலில் போடும் பணத்தைக் கொண்டு அண்ணாதுரை திவசத்திற்கு ஆலயங்களில் சோறு போடுவதா? இது என்ன நியாயம்? தில்லை நடராஜரையும் ஸ்ரீரங்கநாதரையும் பீரங்கி வைத்துப் பிளப்பது எந்நாளோ என்று பாடிய இவர்களுக்கான தவச நாளில் பக்தர்கள் பணத்தில் சோறு போடுவதா? அப்படி எனில் கோவில்களைத் தகர்த்த மாலிக்காபூர் தினத்தையும் இவர்கள் கொண்டாடுவார்களோ? அறநிலையத் துறை அல்ல இது; கோவில் கொள்ளைத் துறை அல்லவா இது!
இப்படி கேள்விகள் சாமான்யனான ஹிந்து ஒருவரின் மனதில் எழுந்தால் அது இயல்பே!
விடைகளைக் காண தற்போது யூ டியூப் பதிவுகள் ஒரு அளவுக்கு உதவுகின்றன – முழுதுமாக இல்லாவிட்டாலும் கூட!
திரு சுப்ரமணியம் சுவாமி
திருமதி உமா ஆனந்த்
திரு ரங்கராஜன் நரசிம்மன்
திரு ஆர். குருராஜ்
திரு ரமேஷ்
திரு ரங்கராஜ் பாண்டே
திரு கார்த்திக் கோபிநாத்
திரு பிரபாகரன்
திரு ஓமாம்புலியூர் ஜெயராமன் Shree TV
Infomedia
உள்ளிட்டோரின் பதிவுகள் தெளிவானவை – மேலே உள்ள சில கேள்விகளுக்குப் பதில் அளிப்பவை!
இவர்களைப் பாராட்டுவோம். இவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்! ஆலயம் அழிப்போரை நிந்தனை செய்வோம்.
ஆலயம் பாதுகாப்போரை வந்தனை செய்வோம்!
பழமையையும் பாரம்பரியத்தையும் கடைப்பிடிப்போம். அந்தப் பண்பாட்டை அழிக்க முயல்வோருக்கு அரசியல் சட்ட ரீதியாகப் பாடம் கற்பிப்போம்!
ஹிந்துக்களே எழுக! விழிப்புணர்வு பெறுக! ஓரணியில் திரள்க!
பல பல பல கோடி எண்ணிலடங்கா கோடி சொத்து உடைய ஆலயம் கொள்ளை அடிக்கப்படுவதை தடுத்து நிறுத்துவோமாக!

**
tags- கேள்விகள், ஆலயப் பாதுகாப்பு, ஆயிரம்,