
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 10,036
Date uploaded in London – 31 AUGUST 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்டம்பர் 2021 காலண்டர்; ரிக் வேத பொன்மொழிகள்- 3 வது மண்டலம்(Post.10036)
பண்டிகை நாட்கள் – செப்.5 ஆசிரியர் தினம்; 8- சாம வேத உபாகர்மா ;10- கணேஷ் சதுர்த்தி; 11- பாரதி நூற்றா ண்டு நினைவு தினம் , ரிஷி பஞ்சமி; 21- மாலையை பட்சம் ஆரம்பம்;
செப்.6 – அமாவாசை ; செப்.20 பவுர்ணமி ;
ஏகாதஸி விரத நாட்கள் – 2,16;
சுபமுஹூர்த நாட்கள் – 1,3,8,9
xxx

செப்டம்பர் 1 புதன் கிழமை
தண்ணீரில் கருவாக இருப்பவன்/ அக்னீ ; தன் ஒளியால் பிரகாசிப்பவன்; மக்களின் நன்மைக்காக தண்ணீரை உண்டாக்கினான் RV 3-1-12
XXX
செப்டம்பர் 2 வியாழக் கிழமை
சாணையால் கத்தியைத் தீட்டிக் கூராக்குவது போல, மனிதர்கள் கவிதைகளால் அக்கினியை பிரகாசிக்கச் செய்கின்றனர் 3-2-9
XXX
செப்டம்பர் 3 வெள்ளிக் கிழமை
அக்னீ , பிறக்கும்போது வெள்ளை; பலமானபோது சிவப்பு; ஏழு மகத்தான நதிகள் அவனை வளர்த்தன 3-1-4
XXX
செப்டம்பர் 4 சனிக் கிழமை
வீடுகளின் நண்பன்; தீர்க்கதரிசி; தேவர்களின் புரோகிதன், சத்திய விதிகள்/சட்டம் என்னும் தேரைச் செலுத்துகிறான்; அவனைப் போற்றுங்கள் RV 3-2-8
XXX
செப்டம்பர் 5 ஞாயிற்றுக் கிழமை
மனிதர்களின் நண்பன்; மனிதர்களின் நலனை நாடுபவன்; வடிவில் அழகன் ; உத்தமன்; பல வர்ணங்களில் ஒளிர்வோன், மாசு மருவற்றவன் ; தூயவன் ஆன அக்கினியிடம் வேண்டுகிறோம் 3-2-15
XXX
செப்டம்பர் 6 திங்கட் கிழமை
அமிர்தனான அக்கினி தேவர்களைப் போற்றுகிறான் ; அதனால் அவன் சனாதன தர்மத்துக்கு ஊறு விளைவிப்பதில்லை 3-2-15
XXX
செப்டம்பர் 7 செவ்வாய்க் கிழமை
அக்கினி சிங்கத்தைப் போல கர்ஜித்து வயிற்றில் வளர்கிறான் ; ஆவி கொடுப்போருக்கு செல்வத்தை வழங்குகிறான் RV 3-2-11
XXX

செப்டம்பர் 8 புதன் கிழமை
நல்லோரின் நண்பன்; கவிஞன்; வேள்விகளின் தந்தை; அறிஞர்களை ஊக்குவிப்பவன்/அக்கினி 3-2-4
XXX
செப்டம்பர் 9 வியாழக் கிழமை
அக்கினியை வழிபடுவோர் சுகத்தையும் இன்பத்தையும் நாடுகிறார்கள் ; அவன் வேள்வியின் கொடி ;பாடுவோர் புனிதத் சடங்குகளை அவனிடம் சேமிக்கிறார்கள்; குவித்துவைக்கிறார்கள் RV.3-3-3
XXX
செப்டம்பர் 10 வெள்ளிக் கிழமை
நல்ல புதல்வர்களைப் பெறவும், நீண்ட ஆயுளுக்காகவும் அக்கினியைப் போற்றுங்கள்; வினைத் திட்பனான உன்னை தேவர்களும் மனிதர்களும் விரும்புகிறார்கள்; நீ எப்போதும் விழித்திருப்பவன் 3-3-7
XXX
செப்டம்பர் 11 சனிக் கிழமை
பாடல்களால் அக்கினி தேவனைப் போ ற்றுவோம் ; அவன் பேரின்பத்தை அளிப்பவன் மங்கலமான தேரில் ஏறி தன பலத்தால் எல்லா பிரஜைகளை பற்றினான் 3-3-9
XXX
செப்டம்பர் 12 ஞாயிற்றுக் கிழமை
2 முக்கிய பாடகர்களும், 7 வேள்விப் பாடகர்களும் அக்கினியே சத்யம் என்று செப்புகின்றனர். அவர்கள் உண்மையைப் போற்றுபவர்கள்; விரதங்களைப் பின்பற்றுவோர்; அக்கினியை ஒளிப்படுத்துவோர்
3-4-7
XXX
செப்டம்பர் 13 திங்கட் கிழமை
பாரதி, இளா , சரஸ்வதி ஆகிய மூன்று தேவியரும் இங்கே வந்து தர்ப்பைப்புல் ஆசனத்தில் அமருங்கள் RV. 3-4-8
XXX
செப்டம்பர் 14 செவ்வாய்க் கிழமை
போற்றத்தக்க அக்நி , மொழிகளாலும் , துதிகளாலும் , தோத்திரங்களாலும் வளர்கிறான் 3-5-2
XXX
செப்டம்பர் 15 புதன் கிழமை
அக்கினியை நதிகள் பலப்படுத்தி ஏந்திச் செல்லுகின்றன. அக்கினி ஒரு மனைவியுடன் இருக்கும் கணவனைப் போல வானம் – பூமியுடன் இருக்கிறான் 3-4-7
XXX
செப்டம்பர் 16 வியாழக் கிழமை
எங்களுக்கு நித்தியமாக வசிக்க நிலத்தை அளிக்கவும்; எங்கள் வம்சத்தில் புதல்வர்களும் பேரர்களும் தோன்றுவார்களாகுக ; உன் கருணை எங்கள் பால் இருக்கட்டும் 3-6-11
XXX

செப்டம்பர் 17 வெள்ளிக் கிழமை
சோம பானத்தைக் கொடுக்கும் செடிகள் தோல் போன்ற சவ்வினால் போர்த்தப்பட்டுள்ளது; அவன் அதைக் காக்கிறான்; கொழுப்புச் சத்து நிறைந்த பறவைகளின் இடத்தையும் காக்கிறான்.3-5-6
XXX
செப்டம்பர் 18 சனிக் கிழமை
அக்கினி தன் பெற்றோர்களான வானத்தையும் பூமியையும் அடிக்கடி புதுப்பிக்கிறான் 3-4-7
XXX
செப்டம்பர் 19 ஞாயிற்றுக் கிழமை
அக்னீ அழகன்; பூமியை, பறவைகளின் உயர்ந்த இடத்தைக் காக்கிறான் ; 7 தலை உள்ள மருத்துக்களைக் காப்பவன்; சூரியனின் வழியைக் காப்பவன் 3-5-5
XXX
செப்டம்பர் 20 திங்கட் கிழமை
அக்கினியை தூண்டும்போது அவனே மித்ரன், வருணன், வாயுவாகிறான் மனைகளின் நண்பன்; ஓடும் நதிகளுக்கும், மலைகளுக்கும் அவனே மித்திரன் 3-5-4
XXX
செப்டம்பர் 21 செவ்வாய்க் கிழமை
நீரின் கரு; நண்பன் ; சத்தியத்தால் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவன் ; நம் பாடல்களின் கதாநாயகன் ; உச்சத்தில் அமர்ந்து இருக்கிறான் 3-5-3
XXX
செப்டம்பர் 22 புதன் கிழமை
மனிதர்காளால் வெட்டப்பட்டு, கோடரியால் செதுக்கப்பட்டு , பிரகாசமாக நிற்கும் யூப நெடும் தூண்கள் எங்களுக்குச் செல்வத்தை அளிக்கட்டும் 3-8-6
XXX

செப்டம்பர் 23 வியாழக் கிழமை
யூப நெடுந் தூணே ! கிழக்கில் நில், வீரர்களைக் கொடு ; வறுமையையும் பஞ்சத்தையும் விரட்டு ; பெரும் அதிர்ஷ்ட்டதை எங்களுக்கு கொணர்க .3-8-2
XXX
செப்டம்பர் 24 வெள்ளிக் கிழமை
வனஸ்பதியே ! பூமியின் உயர்ந்த இடத்தில் நிமிர்ந்து நிற்கவும் ? வேள்வியை நடத்துபவனுக்கு உணவு அளிக்கவும் 3-8-3
XXX
செப்டம்பர் 25 சனிக் கிழமை
நல்லாடை அணிந்தவன்; மாலைகள் உடையவன் யாகத் தூண் (யூபம்) ; அவன் பிறந்தவுடன் புகழ் அடைகிறான்.; அவனை அறிஞர்களும், கவிகளும் தியானிப்பவர்களும் உயர்த்துகிறார்கள் 3-8-4
XXX
செப்டம்பர் 26 ஞாயிற்றுக் கிழமை
வனஸ்பதியே! கடவுளை வணங்குவோர் உனக்கு நெய் பூசி காப்பிடுகிறார்கள் ; நீ உயர்ந்து நின்றாலும், உன் தாயான பூமியில் சாய்ந்து படுத்திருந்தாலும் எங்களுக்குச் செல்வத்தைக் கொடு RV.3-8-1
XXX
செப்டம்பர் 27 திங்கட் கிழமை
3399 தேவர்கள் அக்கினியைப் போற்றினார்கள்; அவனுக்கு நெய்க் காப்பிட்டார்கள் அவனுக்கு அவனுக்குத் தர்ப்பையைப் பரத்தி அமர்த்தினார்கள் 3-9-9
xxx
செப்டம்பர் 28 செவ்வாய்க் கிழமை
அக்கினியே உன் பரவும் சுவாலையின் சக்தியால் எங்கள் பாவங்களை நீக்கவும் 3-6-10
XXX
செப்டம்பர் 29 புதன் கிழமை
வனஸ்பதியே ; நீ 100 கிளைகளோடு பெருக வேண்டும்; நாங்கள் ஆயிரம் கிளைகளோடு உயர்வோமாக.3-8-11
xxx
செப்டம்பர் 30 வியாழக் கிழமை
அழகான காப்புகளோடுள்ள அந்த யூபங்கள் , காண்பதற்கு பிராணிகளின் கொம்புகள் போலத் தோன்றுகின்றன. துதிகளைக் கேட்கின்றன; அவை போர்களிலே எங்களைக் காக்கட்டும் RV 3-8-10
xxx

BONUS GOLDEN SAYINGS
உன்னை (அக்கினியே) நண்பன் என்ற முறையில் எங்களுக்கு உதவ அழைக்கிறோம். தண்ணீரின் பேரனே !துன்பமற்றவனே; ஒளி மயமானவனே ! ஒப்பற்ற வெற்றியுடையவனே RV 3-9-1
xxx
அக்கினியே நீ மரங்களை விரும்பி, தாய் போன்ற தண்ணீரிடம் சென்றாய்; ஆனால் தாமதத்தைதை சகிக்காமல் எங்களிடமே ஒரு நொடியில் திரும்பி வந்துவிட்டாய் .3-9-2
Xxx
வேள்வித் தலைவர்கள், ஆதித்யர்கள், ருத்திரர்கள், வசுக்கள், வானமும் பூமியும் ஒன்றுபட்டு நிற்கும் எல்லா தேவர்களும் எங்கள் வேள்விகளைக் காப்பார்களாகுக; வேள்விக் கொடியை உயர்த்தட்டும் RV 3-8-8
— subham —

TAGS. செப்டம்பர் 2021, காலண்டர், ரிக் வேத பொன்மொழிகள், 3 வது மண்டலம்