
Post No. 10,070
Date uploaded in London – 8 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

கணவர் மீது 44 காதல் கவிதைகள் இயற்றிய எலிசபெத் ப்ரவுனிங்
ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் ப்ரவுனிங் & கணவர் மீது 44 காதல் கவிதைகள் இயற்றிய எலிசபெத் ப்ரவுனிங்
விக்ட்டோரியன் கால கவிஞர்களில் புகழ் பெற்றவர் ராபர்ட் ப்ரவுனிங். ROBERT BROWNING அவரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டு இதாலிக்கு ஓட்டம் பிடித்த எலிசபெத் ப்ரவுனிங்கும் ELIZABETH BROWNING , அவர் மீது 44 காதல் கவிதை மழை பொழிந்து புகழ் பெற்றார் எலிசபெத் ப்ரவுனிங். இருவருடைய வாழ்க்கையையும் அவர்களது படைப்புகளையும் காண்போம் .
ராபர்ட் ப்ரவ்னிங் எழுதிய பாடல்களில் பழங்கால மக்கள் தங்கள் எண்ணங்களை பேச்சு வடிவிலோ கவிதை வடிவிலோ வெளியிடுவதைக் காணலாம். அவர் எழுதிய நீண்ட கவிதைகளில் முன் காலத்தில் வாழ்ந்த கதா பாத்திரங்கள் பேசுவதைக் காணலாம்.
ப்ரவ்னிங், லண்டனில் பிறந்தார். அவருடைய தந்தை பாங்க் ஆப் இங்கிலாந்தின் BANK OF ENGLAND கிளார்க்/குமாஸ்தா/எழுத்தர். தாயோ ஜெர்மன் நாட்டுப் பெற்றோர்களுக்குப் பிறந்த நங்கை . நல்ல வசதி படைத்த குடும்பம். ஆகையால் வயிற்றுப பிழைப்பைப் பற்றிக் கவலைப்படாமல் கவிதை எழுதும் நல்ல பாக்கியம் பெற்றவர் ப்ரவ்னிங். குடும்பத்தில் இருந்த பெரிய நூலகத்தில் உள்ள எல்லா புஸ்தகங்களையும் படித்த ப்ரவ்னிங்கிற்கு ஷெல்லி, கீட்ஸ் ஆகியோரின் கவிதைகள் மிகவும் பிடித்தன. தானும் கவிஞர் ஆக வேண்டும் என்ற வேட்கை பிறந்தது 21 வயதில் பாலின் PAULINE என்ற கவிதையை இயற்றினார் .
பின்னர் நாடகங்களையும் நீண்ட கதைகள் சொல்லும் PIED PIPER OF HAMLYN ‘பைட் பைபர் ஆப் ஹாம்லின்’ போன்ற கவிதைகளையும் படைத்தார் . பேச்சு வடிவிலுள்ள கவிதைகளை ட்ராமாடிஸ் பெர்ஸோனே , ட்ரமாட்டிக் லிரிக்ஸ் மென் அன்ட் விமன் , த ரிங் அண்ட் தி புக் முதலியவற்றில் ப டித்து ரசிக்கலாம். இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தைச் (RENAISSANCE PERIOD) சேர்ந்த ஒரு இளவரசன் அல்லது ஓவியன் அல்லது மத போதகர் வாழ்வில் ஏற்படும் சிக்கலான தருணத்தைப் படம்பிடித்துக் காட்டுவார் கவிதைகளில் .
நல்லவரோ கெட்டவரோ , வாழ்க்கையில் கிடைக்கும் அரிய நேரத்தைப் பயன்படுத்தி சாதனைகள் புரியத் தவறுபவர்களை பிரௌனிங் வெறுத்தார். தோல்விகள் அடைந்தாலும் முயற்சி செய்வோருக்கு சொர்க்கத்தில் இன்பம் கிடைக்கும் என்பார் பிரௌனிங் .
எவருக்கும் தெரியாத இடங்களையோ ஆட்களையோ பற்றி அவர் கவிதைகளை வரைந்தார். அதுவும் சுருக்கமான சொற்களைப் பயன்படுத்தி விரிவான விஷயங்களை சொல்ல முனைவார் . இதனால் அவருடைய கவிதைகளைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. இதன் காரணமாக 50 வயதுக்கு மேல்தான் அவருக்குப் புகழ் கிடைத்தது.அதற்கு முன்னமே அவருடைய மனைவி எலிசபெத்துக்குப் புகழ் வந்து சேர்ந்தது!
1846-ல் அவர் காதலி எலிசபெத்தைக் கல்யாணம் கட்டி இத்தாலிக்கு ஒடிப்போனார் . இது இருவரின் பெற்றோருக்குத் தெரியாமல் நடந்த, அந்தக் கால புகழ்பெற்ற காதல் கதை. மனைவி இறந்த பின்னரே இங்கிலாந்துக்குத் திரும்பினார்.
ராபர்ட் ப்ரவ்னிங்
பிறந்த தேதி – மே 7, 1812
இ றந்த தேதி- டிசம்பர் 12, 1889
வாழ்ந்த ஆண்டுகள் – 77
அவர் எழுதிய கவிதைகள் /நூல்கள்
1835- PARACELSUS
1840 – SORDELLO
1842- DRAMATIC LYRICS
(INCLUDING PIED PIPER OF HAMLYN)
1845- DRAMATIC ROMANCES AND LYRICS
1855 – MEN AND WOMEN
1864- DRAMATIS PERSONAE
1869-69 – THE RING AND THE BOOK
1879-80- DRAMATIC IDYLS
1889- ASOLANDO
XXX

கணவர் மீதான காதல் கவிதைகளால் புகழ் பெற்றவர்
இங்கிலாந்தின் தலை சிறந்த பெண் கவிஞர் எலிசபெத் பாரட் ப்ரவ்னிங் ELIZABETH BARRET BROWNING என்று கருதப்பட்ட காலம் உண்டு. தற்காலத்தில் அவர் காதல் கவிதைகளினால் பிரபலமானவர் என்ற கருத்தே நிலவுகிறது . ஜமைக்கா தீவில் பெரிய தோட்டம் துரவுகளை வைத்திருந்த பணக்காரருக்குப் பிறந்த 12 குழந்தைகளில் மூத்தவர் எலிசபெத்.
வீட்டிலேயே கல்வி கற்றார். ஆங்கிலத்துடன் கிரேக்க , லத்தீன் மொழிகளையும் கற்றுத் தேர்ந்து நிறைய எழுதினார், படித்தார்.
பத்து வயதிலேயே நீண்ட கவிதை எழுதினார். நட்டங்களை எழுதி அவற்றை குடும்ப நர்சரிகளில் நடிக்கவும் செய்தார். 14 வயதில் அவரது தந்தையே மாரத்தன் சண்டை THE BATTLE OF MARATHON என்ற கவிதையை வெளியிட்டார்.
15 வயதில் காச நோய் (TB) கண்டு முதுகெலும்பு அரிக்கப்பட்டது . இதனால் வாழ்நாள் முழுதும் உடலூனம் நீடித்தது. அவருடைய சகோதரர் இறந்தது,அவரிடைய மன நிலையைப் பாதித்ததால் லண்டனிலுள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு ஒரு அறையிலேயே அடைத்து வைக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 29.
இதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய கவிதைகளை எட்கர் ஆலன் போ மற்றும் அவரை விட வயதில் இளையவரான ராபர்ட் ப்ரவ்னிங் ஆகியோர் பாராட்டினார்கள். இதன் மூலம் அவர் புகழ் அதிகரித்தது
ராபர்ட்டும் எலிசபெத்தும் சந்தித்தனர்; காதல் மலர்ந்தது; எலிசபெத்தின் தந்தையின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இருவரையும் ரஹஸ்ய திருமணம் செய்துகொண்டு இத்தாலி நாட்டுக்கு குடியேறினார்கள்.அங்கு அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். 15 ஆண்டுகளுக்கு சுகபோக வாழ்க்கை நடத்தினர். SONNETS FROM THE PORTUGESE ‘சான்னட்ஸ் பிரம் த போர்ச்சுகீஸ்’ என்ற கவிதைத் தொகுப்பு 1850ல் அச்சிடப்பட்டது. இதில் தான் அவர் தனது காதல் கணவன் மீது எழுதிய 44 கவிதைகள் இருக்கின்றன. கருங் கூந்தல் படைத்த எலிசபெத்தை ராபர்ட் “அட என் போர்ச்சுகீஸ் அன்பே! ஆருயிரே!” என்று அழைப்பார் . அதனால்தான் கவிதைத்தொகுப்பின் பெயரில் ‘போர்ச்சுகீஸ்’ உளது.
எலிசபெத் ப்ரவ்னிங்
பிறந்த தேதி – மார்ச் 6, 1806
இறந்த தேதி- ஜூன் 29, 1861
வாழ்ந்த ஆண்டுகள் – 55
அவர் எழுதிய கவிதைகள்
1838 – THE SERAPHIM AND OTHER POEMS
1844 – POEMS
1850- SONNETS FROM THE PORTUGESE
1851 – CASA GUIDI WINDOWS
1856- AURORA LEIGH
1860- POEMS BEFORE CONGRESS
PUBLISHED AFTER SHE DIED
162- LAST POEMS



–





-SUBHAM–
TAGS- ஆங்கிலக் கவிஞர், ராபர்ட் ப்ரவுனிங், கணவர் ,காதல் கவிதைகள், எலிசபெத் ப்ரவுனிங்,
ELIZABETH, ROBERT, BROWNING