உலக இந்து சமய செய்தி மடல் 12-9-2021 (Post No.10087)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,087

Date uploaded in London – 13 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com


இன்று ஞாயிற்றுக் கிழமை  செப்டம்பர் 12-ம் தேதி 2021

ஆம் ஆண்டு


உலக இந்து   சமய செய்தி மடல்


தொகுத்து வழங்குபவர் BRHANNAYAKI SATHYA NARAYANAN


 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது BRHANNAYAKI SATHYA NARAYANAN


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXXX

காசி இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை: பிரதமர்

காசி இந்து பல்கலைக்கழகத்தில், தமிழ் படிப்புகள் தொடர்பாக பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளுக்கான தொழிற்பயிற்சி அளிக்க ‛சர்தார் பவனை’ பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் VIDEO CONFERENCING முறையில் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: சர்தார் வல்லபாய் படேல், இந்தியாவின் பெருமையாக உள்ளார். செப்.,11 வரலாற்றில் நினைவு கூரத்தக்க நாள். மனித நேயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நாள். அதேநேரத்தில், நமக்கு மனித நேயம் குறித்தும் பாடம் கற்பிக்கப்பட்டது. செப்.,11 மிகவும் முக்கியம். 1893-ம் ஆண்டு இதே நாளில் தான் சிகாகோ நகரில், மனிதநேயத்தின் பண்புகள் குறித்து விவேகானந்தர் பேசினார்.

ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களுக்காக, தமிழ் படிப்புகள் தொடர்பாக பனாரஸ் ஹிந்து பல்கலையில், சுப்ரமணியபாரதி பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

XXXX

உத்தரப் பிரதேச ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த உயர்நீதிமன்றம் தடை

உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் மீது ஞானவாபி பள்ளிவாசல் கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மசூதி வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வாராணசி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அலாகாபாத் உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.

இதுதொடர்பாக வாராணசி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் பகுதியை இடித்துவிட்டு, அந்த இடத்தில் ஞானவாபி மசூதியை முகலாய மன்னர் ஒளரங்கசீப் கட்டியதாகவும், அந்த மசூதி உள்ள நிலம் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சொந்தமானது என்றும் கூறி அங்குள்ள விரைவு உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி விசாரித்த அந்த நீதிமன்றம் கோயிலும் மசூதியும் உள்ள வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.


இந்த உத்தரவுக்கு எதிராக அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் உத்தர பிரதேச வக்ஃபு வாரியம், வாராணசியைச் சேர்ந்த அஞ்சுமன் இன்தஸாமியா மசூதி குழுவின் சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீது உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் பாட்டியா வியாழக்கிழமை அறிவித்துள்ள உத்தரவில், “இந்த வழக்கில் அனைவரின் வாதங்களைக் கேட்ட பின்பு கடந்த மார்ச் 15-ஆம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.  ஆனால், தொல்லியல் துறை சோதனை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கீழ் நீதிமன்றம் விசாரித்து உத்தரவை பிறப்பித்திருக்கக் கூடாது. உயர்நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருந்திருக்க வேண்டும். வாராணசி விரைவு உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. அந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. கோயிலை இடித்துதான் பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை.

வக்ஃபு வாரியம், அஞ்சுமன் இன்தஸாமியா மசூதி ஆகியவற்றின் சார்பில் மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கின் அடுத்த  விசாரணையை அக்டோபர் 8-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Xxxx

விநாயகர் சதுர்த்தி: பிரதமர் மோடி வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை முதல்  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாராஷ்டிரம் முதலிய மாநிலங்களில் விநாயக சதுர்த்தி பத்து நாட்களுக்கு நடைபெறும்.. சில மாநிலங்களில் மூன்று நாட்களுக்கு நடைபெறும். அப்போது ஊர்வலமாகச் சென்று நீர் நிலைகளில் விநாயகர் சிலையைக் கரைப்பார்கள்

பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ” நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில் விநாயகர் அருள் அனைவருக்கு கிடைத்து அனைவருக்கும் மகிழிச்சி, அமைதி, அதிர்ஷ்டம், ஆரோக்கியம், ஆகியவை கிடைக்க வாழ்த்துகிறேன் ” கணபதி பாப்பா மோரியா !என்று மோடி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தம் இவ்வாறு வாழ்த்து தெரிவித்தார்.

XXX

முஸ்லிம்கள் இந்தியாவில் இருப்பதற்கு எந்த பயமும் இல்லை… ஆர்எஸ்எஸ் தலைவர் உரை

/ 100

இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஒரே பரம்பரை உள்ளது, ஒவ்வொரு இந்தியனும் ஒரு இந்து. ஸ்லிம்கள் இந்தியாவில் இருப்பதற்கு எந்த பயமும் இல்லை என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறினார்,

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்  புனேயில் ஒரு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் பேசினார்:

அடிப்படைவாதத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம் தலைவர்களும் வலுவாக ஒன்றிணைய வேண்டும். இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எந்த பயமும் இல்லை. இந்துக்கள் எந்த சமூகத்திற்கும் விரோதமானவர்கள் அல்ல.

இந்து என்ற சொல் தாய் மண், முன்னோர்கள் மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கு ஒத்ததாகும். எங்களுக்கு ஒவ்வொரு இந்தியனும் ஒரு இந்து. அவர்கள் மதம், மொழி மற்றும் இனத்தில் வேறுபட்டிருந்தாலும், அவர்கள் இந்துக்கள்.

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரே பரம்பரை உள்ளது. அண்டை நாடுகளில் இருந்து படையெடுப்பாளர்கள் மூலம் மட்டுமே இஸ்லாம் இந்தியாவிற்கு வந்தது. இது வரலாறு.

தேவையற்ற சர்ச்சைகளை எதிர்த்து அடிப்படைவாதத்திற்கு எதிராக முஸ்லிம் தலைவர்கள் ஒன்றாக நிற்க வேண்டும். இதை விரைவாகச் செய்தால், நமது சமுதாயத்திற்கு குறைவான சேதம் ஏற்படும்.

இந்தியாவுக்கு சூப்பர் பவர் அளவுக்கு சக்தி உள்ளது. யாரையும் அச்சுறுத்தவில்லை. அனைத்து துறைகளிலும் சிறந்த வளர்ச்சிக்கு இந்தியா அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இந்து என்ற சொல் எந்த இனம், மதம் அல்லது மொழி அடையாளத்தைக் குறிக்கவில்லை. இந்து மதம் என்பது மிக உயர்ந்த பாரம்பரியத்திற்கு வழங்கப்பட்ட பெயர். வாழும் ஒவ்வொருவரையும் உயர்த்துவதே. எங்களுக்கு ஒவ்வொரு இந்தியனும் ஒரு இந்து.

முஸ்லிம்கள் இந்தியாவில் யாருக்கும் பயப்படதேவை இல்லை  இந்துக்கள் யாருக்கும் விரோதமானவர்கள் அல்ல. அனைவரின் வளர்ச்சிக்கும் நலனுக்கும் இந்தியர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவைப் பிரிக்க விரும்பும் சிலர் நாங்கள் ஒன்றல்ல, நாங்கள் தனித்திருக்கிறோம் என்று கூறுகிறார்கள். யாரும் அதற்கு இரையாகிவிடக் கூடாது. நாம் ஒரே தேசமாக ஒற்றுமையாக இருப்போம். ஆர்எஸ்எஸ்ஸில் நாம் நினைப்பது இதுதான். இதை உங்களுக்கு தெரிவிக்கவே நான் இங்கு வந்துள்ளேன். “இவ்வாறு மோகன் பகவத் கூறினார்.

Xxxx

திருப்பதியில் செப்., 8 முதல் பொது தரிசனம்: துவங்கியது டோக்கன்வினியோகம்

கோவிட் பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவிலில், இலவச பொது தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. எனினும், ரூ.300 கட்டண தரிசனம், முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனம் உள்ளிட்ட தரிசனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.


கோவிட் பாதிப்பு குறைந்ததை அடுத்து இன்று (செப்., 8) முதல் உள்ளூர் மக்களுக்கு இலவச பொது தரிசனத்துக்கான டோக்கனை விநியோகிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமே, நாள் ஒன்றுக்கு 2,000 டோக்கன்கள் தர கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருமலை திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம் வளாகத்தில் காலை 6 மணி முதல் இலவச டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

xxxxxxxxxxxx

அயோத்தி ராமர் கோவிலில் 2023ல் தரிசனம் செய்யலாம்

‘அயோத்தி ராமர் கோவிலுக்கு அக்டோபர் மாதத்துக்குள் அஸ்திவாரம் தயார் ஆகி விடும்; 2023ம் ஆண்டு டிசம்பரில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்’ என, விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய பொதுச் செயலர் மிலிந்த் பரந்தே கூறியதாவது:


அயோத்தி ராமர் கோவில் கட்டும் பணி திட்டமிட்ட காலத்துக்குள் நிறைவடையும். இம்மாத இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்துக்குள் அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் முடிந்து விடும். 2023ம் ஆண்டு டிசம்பரில் ராமர் சிலை கர்ப்பகிரகத்தில் நிறுவப்பட்டு, தினசரி பூஜைகள் துவக்கப்படும். பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

xxxxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் BRHANNAYAKI SATHYA NARAYANAN

நன்றி, வணக்கம்

 tags – உலக, இந்து சமய, செய்தி மடல், 12-9-2021,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: