பார் போற்றும் மகாகவி பாரதியார்! – 3 (Post No.10092)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,092

Date uploaded in London – 14 September   2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாரெங்கும் பாரதியின் சிந்தனை! ஞான மயம் சார்பில் பாரதி நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சி சிறப்புற நடத்தப்பட்ட போது 11-9-2021 சனிக் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பான ச.நாகராஜன் ஆற்றிய உரை.

எந்த நேரமும் ஞானமயம் நிகழ்ச்சிகளை யூ டியூபிலும் facebook.com/gnanamayam என்ற இணைய வழித் தொடுப்பிலும் காணலாம். (இந்த உரை மூன்று பகுதிகளாக வெளியிடப்படுகிறது.)

பார் போற்றும் மகாகவி பாரதியார்! – 3

பாரதியார் பற்றிய சிறந்த நூல்கள், கட்டுரைகள், வானொலி உரைகள் ஆகியவற்றைப் பற்றிய அறிமுகம் தர வேண்டுமென்று ஒரு எண்ணம் உதிக்கவே 60 புத்தகங்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளை எழுதினேன்.22-8-2015இல் (கட்டுரை எண் 2091) சகுந்தலா பாரதி எழுதிய என் தந்தை என்ற நூலைப் பற்றி முதலில் எழுதி 27-8-2019இல் (கட்டுரை எண் 6939) 60வது புத்தகமாக சேக்கிழார் அடிப்பொடி திரு T.N.ராமச்சந்திரன் எழுதிய வழி வழி பாரதி பற்றி எழுதினேன். நேரம் கருதி அந்த அறுபது புத்தகங்களில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்.                                                 என் தந்தை

பாரதியாரின் புதல்வி சகுந்தலா பாரதி எழுதிய அருமையான நூல் இது. 1974ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளி வந்த நூல்.

பாரதி நினைவுகள்

பாரதி பற்றிய இந்த நூலை எழுதியவர் யதுகிரி அம்மாள்.  1954 செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.                                                                  

என் கணவர் :-

இது புத்தகம் அல்ல. வானொலி உரை. மகாகவி பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மா பாரதி 1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் இந்தத் தலைப்பில் ஒரு உரையாற்றினார்.

நான் கண்ட நால்வர்

 1959ஆம் ஆண்டு பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்தால் வெளியிடப்பட்ட இந்த அருமையான நூலை எழுதியவர் தமிழ் உலகம் நன்கு அறிந்த அறிஞர் வெ.சாமிநாத சர்மா (1895-1978) ஆவார்.

பாரதி புதையல் மூன்றாம் தொகுதி

மிக மிக அருமையான இந்த நூலை பாரதி பக்தர் ரா.அ.பத்மநாபன் தொகுத்து 1975ஆம் ஆண்டு பாரதி தினத்தன்று வெளியிட்டிருக்கிறார்.

பாரதி புதையில் மூன்று தொகுதிகளையும் ஒன்றாய் இணைத்து பாரதி புதையல் பெருந்திரட்டு என்ற நூலாய் அவர் வெளியிட்டார். அதில் 204ஆம் பக்கத்தில் வீர்யம் என்ற கட்டுரையின் முன் குறிப்பாக எனது தந்தையார் பெயரையும் அவர் குறிப்பிடுகிறார். எனது தந்தையார் தினமணி வெ.சந்தானம் 1940களில் ஜயபாரதி பத்திரிகையில் வேலை பார்த்து வந்த போது பாரதியாரின் கவிதைகளைத் தேடிப் பிடித்து வெளியிடுவது வழக்கம். அவரை அன்புடன் இப்போது நினைவு கூர்கிறேன்.

பாரதியார் பிறந்த நாள்

அரவிந்த ஆசிரமம் அமுதன்

இது ஒரு புத்தகம் அல்ல. வானொலி உரை. அரவிந்த ஆசிரமத்தைச் சேர்ந்த அமுதன் அவர்களை புதுவை வானொலி நிலையத்தார் அழைத்து மஹாகவி பாரதியார் பற்றி உரை ஒன்றை நிகழ்த்துமாறு வேண்டினார்கள்.

பாரதியார் பிறந்த தினத்தன்று 11-12-1968ஆம் தேதி இது ஒலிபரப்பப்பட்டது.

மஹாகவி பாரதியார் – வ.ரா. எழுதிய நூல்

Subramania Bharati  –  Patriot and Poet

அருமையான இந்த ஆங்கில நூலை எழுதியவர் பி.மஹாதேவன். 1957இல் வெளி வந்தது இது.

கண்ணன் என் கவி

பாரதி இயலில் பாரதி ஆர்வலர்கள் படிக்க வேண்டிய முக்கியமான ஒரு புத்தகம் கு.ப.ராஜகோபாலன், பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) ஆகியோர் எழுதிய ‘கண்ணன் என் கவி’ என்ற புத்தகம். இந்த நூலை மணிக்கொடி எழுத்தாளர்கள் எழுதியது ஒரு சிறப்பு அம்சம் என்றால் இதில் பாரதியார் உலக மகாகவியாக நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு அம்சம்.

பாரதியார் கவி நயம் – 31 அறிஞர்கள் எழுதிய 34 கட்டுரைகளின் தொகுப்பு – தொகுப்பாளர் ரா.அ..பத்மநாபன்

பாரதி நான் கண்டதும் கேட்டதும்

பாரதியைச் சந்திக்கும் பேறு பெற்ற பி.ஸ்ரீ எழுதிய நூல் இது.

பாரதி பிறந்தார் – கல்கி எழுதிய நூல்

தினமணி சுடரில் வெளியான பல கட்டுரைத் தொகுப்புகள்

பாரதியை ஒட்டிய நினைவுகள் – பெ.நா.அப்புஸ்வாமி

தினமணி சுடரில் 1980,1981,1982 வெளி வந்த கட்டுரைகள்

இப்படி மகாகவியைப் பற்றி நூற்றுக் கணக்கில் நூல்கள் மற்றும்  கட்டுரைகள், துணுக்குகள் அவ்வப்பொழுது ஏராளமான பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன.

மகாகவி ஒரு மாபெரும் கடல். அந்தக் கடலில் மூழ்கி முத்துக்களையும் பவழங்களையும் அரிய பொருள்களையும் எடுத்துக் கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்கி பாரதியைக் கற்போர் தேசபக்தியில் சிறந்து விளங்குவர்; தெய்வ பக்தியில் சிறந்து விளங்குவர்; மொழிப் பற்றில் சிறந்து விளங்குவர். வாழ்க்கையை வாழ்வாங்கு வாழும் வாழ்வியலில் சிறந்து விளங்குவர்.

பாரதி 100!

மஹாகவி பாரதி அமராரான நாள் செப்டம்பர் 11, 1921 ஆம் ஆண்டு அவர் மறைந்து 100 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.அவரது சிறப்பியல்புகள் எத்தனையோ. அவற்றில் 100ஐ இங்கு காண்போம். அவருக்கு நமது சிரம் தாழ்ந்த அஞ்சலியைச் செலுத்துவோம். தேச பக்தியிலும் தெய்வ பக்தியிலும் சிறந்துயர்வோம்.

1. சிறந்த சம்ஸ்கிருத விற்பன்னர்

2. பல்மொழி அறிந்தவர்

3. பள்ளி ஆசிரியர்

4. சிறந்த பத்திரிகாசிரியர்.

5. சிறந்த பதிப்பாளர்

6. கார்ட்டூனை அறிமுகப்படுத்தியவர்

7.சிறந்த கவிஞர்

8. சிறந்த கணவர்

9. சிறந்த தகப்பன்

10. சிறந்த கதாசிரியர்

11. சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்.

12. சிறந்த புதுக் கவிதை இயற்றிய புதுமையாளர்

13.சிறந்த சொற்பொழிவாளர்

14. சிறந்த மேலை இலக்கிய விற்பன்னர்.

15. மஹாத்மாவை இனம் கண்டவர், அவரைச் சந்தித்து அவரது இயக்கத்திற்கும் ஆசி கூறினார்.

16. திலகரைப் போற்றியவர்

17. தேசபக்தர்களைப் போற்றியவர்

18.வ.உ.சிக்கு நெருக்கமானவர்

19.நிவேதிதாவைக் குருவாகக் கொண்டவர்

20. அரவிந்தருடன் நெருங்கிப் பழகியவர்.

21. தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தியவர்

22.சிறந்த இசை விற்பன்னர்

23. சிறந்த பாடகர்

24. தேவார திவ்ய பிரபந்த விற்பன்னர்

24. சங்க இலக்கிய விற்பன்னர்

25. கம்பனில் ஈடுபாடு கொண்டவர்

26. வேதம் புகழ்ந்தவர்

27.ரஷிய புரட்சியை வரவேற்றவர்.

28.பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து பாடியவர்

29.பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள் படும் பாட்டைக் கண்டு வருந்தியவர்

30. உலக நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்தவர்

31. தீர்க்கதரிசி

32. வெள்ளையரை விரட்ட குரல் கொடுத்தவர்

33. ஜாதிகள் இல்லையென்றவர்

34. ஆதி திராவிடரான கனகலிங்கம் என்பவருக்கு பூணூல் போட்டு புரட்சி செய்தவர்

35. வானியல் நிபுணர்

36. தேசீய ஒற்றுமை போதித்தவர்

37. பெண் விடுதலை கேட்டவர்

38. சிறந்த மொழிபெயர்ப்பாளர்

39. காங்கிரஸ் மஹாசபையின் வரலாற்றை எழுதிய வரலாற்று ஆசிரியர்

40. புதிய தமிழ்நடையை உருவாக்கியவர்

41. பலரால் பாராட்டப் பெற்றவர் .பிரான்ஸ் நாட்டு அறிஞர் பாரதியாரது பாடலை மொழிபெயர்த்தார்.                                               42. தமிழறிஞர் உ.வே.சாமிநாதையரைப் பாராட்டியவர்

43.காங்கிரஸ் கூட்டங்களில் கலந்து கொண்ட செயல்வீரர்

44. பகைமை பாராட்டாதவர்

45. ராஜதந்திர நோக்குடையவர்

46. அஞ்சாநெஞ்சர்; பிரிட்டிஷ் அடக்குமுறைக்குப் பயப்படாதவர்.                 47. தபஸ்வி – மந்திரச் சொல் வேண்டித் தவம் புரிந்தவர்.

48. கொடையாளி – செல்வந்தர் இல்லை என்றாலும் தனக்குக் கிடைத்ததை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டவர்.

49. வந்தேமாதரம் மந்திரத்தைப் பரப்பியவர்

50. படிப்பாளி

51. விருந்தினரை உபசரிப்பவர்

52. புதிய ஆத்திசூடி பாடி காலத்திற்கேற்றபடி புதிய நெறி கண்டவர்

53. வீதி தோறும் இரண்டொரு பள்ளி என்ற லட்சியத்தை முன் வைத்த சிறந்த கல்வியாளர்

54. விஞ்ஞான ஆர்வலர்

55. சக்தி உபாசகர்

56. கண்ணபிரான் பக்தியில் திளைத்தவர்

57. கற்பனையின் சிகரத்தில் ஏறி பல நல்ல கனவு கண்டவர்

58. நடைமுறை வேதாந்தி

59. மகாபாரதத்தின்  முக்கிய கட்டத்தை விடுதலையை மனதில் எண்ணி பாஞ்சாலி சபதம் காவியம் இயற்றியவர்.

60. வேதாந்தமாக விரித்துரைக்க ஒரு குயில்பாட்டு கண்டவர்

61. நடுநிலையாளர் சிறந்த நடுநிலை தலையங்கங்களையும் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.

62. சிறந்த ஹிந்து

63. பல இடங்களுக்கும் பயணம் செய்து வாழ்க்கையின் பல அம்சங்களையும் அலசிய பயணி

64. சிறந்த சித்தர்

65. நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரைப் போட்டிக்கு அழைக்க நினைத்தவர்.

66. தன் சுயசரிதையைக் கவிதை வடிவில் யாத்தவர்.

67. சர்வ மதம் சமரஸம் கண்டவர்

68. அனைத்துக் கலைகளையும் ரசிக்கும் சிறந்த ரசிகர்.

69. இயற்கை ஆர்வலர்

70.நேரம் பயனுள்ளதாகக் கழிய விரும்பியவர்.

71. கட்டுரைகளில் சரளமான நையாண்டி நடையைக் கையாண்ட நையாண்டி வல்லுநர்

72. மதமாற்றம் கண்டு பொங்கியவர். தனது அருமை நண்பர் சுரேந்திர நாத் ஆர்யா மதம் மாறியது கண்டு வருந்தி நொந்து கண்ணீர் சிந்தினார்.

73. அழகிய கையெழுத்தைக் கொண்டவர்

74. நன்கு உடை அணிபவர்

75. நண்பர்களை அரவணைத்தவர் – சுமார் 35க்கும் மேலான சீடர்களைப் புதுவையில் கொண்டிருந்தார்.

76. புதிய பாரதம் அமைக்க எண்ணியவர்

77. வெளிதேச வாசம் வெறுத்தவர்

புதுவை வெள்ளைக்காரர் வசம் ஆகும் என்ற ஒரு நிலை வந்த போது பிரான்ஸில் குடியேறலாமா என்ற பேச்சு எழுந்தது. ஆனால் பாரதியார் அப்படி பிரான்ஸுக்குச் செல்ல விரும்பவில்லை. வெளிதேச வாசத்தை அவர் வெறுத்தார். சிறந்த சுதேசி.

78. மாதாமணி வாசகம் வெளியிட்டவர்

79. ஆங்கில பத்திரிகாசிரியர்

தமிழ் பத்திரிகை ஆசிரியர் என்பதோடு பால பாரதம் என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கும் ஆசிரியராக ஆனார்.

80.தெய்வ அருள் பெற்றவர்

‘மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள் மனோன்மணி என் மாசக்தி வையத்தேவி’ என எழுதினார். அனைத்தும் சக்தி அருளினாலேயே நடக்கிறது என்று நம்பினார். அந்த சக்தியின் அனுக்ரஹத்தையும் பெற்றார்.

81.மரணம் வென்றவர்

காலா என் காலருகே வாடா, உன்னை சற்றே எட்டி மிதிக்கிறேன் என்றவர். சாகா வரம் அருள்வாய் -ராமா என்று பாடியவர்.பார் மீது நான் சாகாதிருப்பேன் என்று அறிவித்தவர். உண்மை தான்! தனது சாகா வரம் பெற்ற பாடல்களினால் இன்றும் வாழ்கிறார். என்றும் வாழ்வார்.

82. சகல உயிர்களையும் நேசித்தவர்

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று முழங்கியவர்.

83.வ.வே.சு. ஐயரால் பெரிதும் போற்றப்பட்டவர் சுற்றி நில்லாதே போ பகையே துள்ளி வருகுது வேல்! ஆஹா, இதற்கு அக்ஷர லக்ஷம் கொடுக்கலாமே என்றார் அவர்.

84.விவேகானந்தரின் பக்தர்

85.ரமணரை தரிசித்த கவிஞர்

திருவண்ணாமலை சென்ற போது பகவான் ரமணரை தரிசித்தார்.

86.நாடக ஆசிரியர்

87. தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்த நினைத்தவர்

88. பிரெஞ்சு தேசீய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்தவர்.

பிரெஞ்சு தேசிய கீதமான லா மார்ஸ்லே என்ற கீதத்தை   “ அன்னை நன்னாட்டின் மக்காள் ஏகுவம் மன்னு புகழ் நாள் இதுவே“ என்று தமிழில் மொழிபெயர்த்தார்.

ஆக வந்தேமாதரம் என்ற பாரதத்தின் தேசீய கீதத்தையும் பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதத்தையும் தமிழில் தந்ததால் இரு தேசங்களின் தேசீய கீதங்களையும் தமிழாக்கிய பெருமையைப் பெறுகிறார்.

89. பாரதி பட்டத்தை பதினோரு வயதிலேயே பெற்றவர்.

இவரை மட்டம் தட்ட நினைத்த காந்தி மத நாதர் தந்த ஈற்றடியான, ‘பாரதி சின்னப் பயல்’ என்பதை ‘காந்திமதி நாதனைப் பார்; அதி சின்னப் பயல்’ என எழுதி அனைவரையும் இள வயதிலேயே  வியக்க வைத்தவர். இவரது கவிதா திறமையைக் கண்ட அறிஞர்கள் இவருக்கு பதினோரு வயதிலேயே – 1893ஆம் ஆண்டிலேயே – இவருக்கு பாரதி பட்டம் அளித்தனர்.

90. புதிய கவிதா பாரம்பரியத்தை உருவாக்கியவர்

91 பழையதையும் புதியதையும் இணைக்கும் பாலமாக இருந்தவர்

92. உலக அறிஞர்களின் தத்துவங்களைப் பாராட்டியவர்

லாவோட்சு, விட்மன், புத்தர் என உலக அறிஞர்கள் மற்றும் மகான்களின் தத்துவங்களை ஆங்காங்கே கட்டுரையில் தந்தவர். அரவிந்தர், தாகூர், காந்திஜி உள்ளிட்டோரின் சிறப்பான கருத்துக்களையும் தமிழில் தந்தவர்.

93. புராணங்களைப் போற்றியவர்!

94. ஆங்கில கவிதை, கட்டுரை, நூல் எழுதியவர்

ஆங்கிலக் கவிதைகளை எழுதியுள்ளார். தனது கும்மிப் பாடலைத் தானே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். The Fox with the golden Tail என்ற ஆங்கில நூலை வெளியிட்டுள்ளார்.

95. சிறை சென்ற தியாகி

1918 நவம்பர் 20ஆம் தேதி புதுவையிலிருந்து குதிரை வண்டியில் குடும்பத்துடன் புறப்பட்ட பாரதியார் பிரெஞ்சு எல்லையைக் கடந்தவுடன் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டார். கடலூர் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நவம்பர் 20 முதல் டிசம்பர் 14 முடிய சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

96. ஏராளமான அதிசய அனுபவங்களைப் பெற்றவர்

வாழ்க்கையில் நம்ப முடியாத அதீத உளவியல் அனுபவங்களையும் அதிசய அனுபவங்களையும் பெற்றவர். கோவிந்தசாமி புகழ் என்ற கவிதையில். “ஒரு நாள் இறந்த எந்தை தன்னுருவம் காட்டினான், பின்னர் என்னைத் தரணிமிசை பெற்றவளின் வடிவம் உற்றான்’ என்று கூறி இறந்த தந்தையையும் தாயையும் கோவிந்த சாமி காட்டத் தான் பார்த்ததைக் கூறுகிறார். திருவனந்தபுரம் சென்ற போது மிருகக் காட்சிச் சாலையில் காவலாளி தடுத்த போதும் ஒரு சிங்கத்தின் அருகில் சென்று அதைத் தொட்டு, ‘அன்பு கொண்டோரை நீங்கள் ஒன்றும் செய்ய மாட்டீர்கள் என்பதை கர்ஜனை மூலம் தெரிவியுங்கள்’ என்று சொல்ல சிங்கம் கர்ஜித்தது. இப்படி ஏராளமான அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

97.  சிறந்த பொன்மொழிகளையும் புது சூத்திரங்களையும் தந்தவர்.

98.கீதையின் பால் பற்று கொண்டவர். அதற்கு உரை எழுதியவர்.  பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்; பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான் என்று கீதையை  இரண்டே வரிகளில் சித்தரித்தவர்.

99. நல்ல புத்தகத்திற்கு முன்னுரை தந்தவர்.

100. சிறந்த மனிதர்

மன்னுக்கு இதம் செய்பவர் மனிதர். அதாவது உலகிற்கு இதம் செய்பவர் என்ற அர்த்தத்திற்கு இலக்கணமாக வாழ்ந்த சிறந்த  வியக்க வைக்கும் மனிதர் மகாகவி பாரதியார்.  இறுதியாக, இதோ எனது அஞ்சலி:-

பாரதிரப் பாடிய பாரதியைப் பணிமின்

பாரதி பாரதியே தான் என்ற எனது அஞ்சலியை பாரதிக்குச் சமர்ப்பிக்கிறேன்.

பாரதியாரின் புகழுக்கு முடிவில்லை. அவரது சிறப்பியல்புகளை 100 என்ற எண்ணுக்குள் கட்டுப்படுத்த முடியாது. இந்த எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவர் அவர். பாரதியார் திரு நாமம் வாழ்க. தேச பக்தியும் தெய்வ பக்தியும் வெல்க! வந்தேமாதரம்!! பாரத் மாதா கீ ஜெய்!!! இந்த நல் வாய்ப்பை எனக்குத் தந்த திரு சந்தானம் சுவாமிநாதன் அவர்களுக்கும் சிவ ஸ்ரீ கல்யாண்ஜி அவர்களுக்கும், ஞானமயம் குழுவினருக்கும் செவி மடுத்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைக் கூறி அமைகின்றேன்.

நன்றி. வணக்கம்.

tags- பாரதியார்! – 3

Leave a comment

2 Comments

 1. Kannan B

   /  September 14, 2021

  பாரதி 100 கட்டுரையின் மணிமகுடம்.
  வெகு அருமை, பாராட்டுக்கள் தங்களுக்கு உரித்தாகுக!
  கண்ணன்
  தில்லி

 2. santhanam nagarajan

   /  September 16, 2021

  நன்றி நன்றி நன்றி தங்கள் பாராட்டு அதிகம் எழுத ஊக்குவிக்கிறது. நன்றி
  நாகராஜன்

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: