
Post No. 10,125
Date uploaded in London – 23 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அழியாத மா கவிதை -ரிக் வேதத்தில் அற்புதக் கவிதை! – பகுதி 2
நேற்று ரிக் வேத துதி 3-33 ல் உள்ள 13 மந்திரங்களில் நான்கு மந்திரங்களைக் கண்டோம். இதோ மீதி மந்திரங்களின் பொருள்:-
Ralph T H Griffith கிரிப்பித்தின் அயோக்கியத் தனத்தை ஐந்தாவது மந்திரம் அம்பலப்படுத்துகிறது.
மாக்ஸ்முல்லர் (Max Muller) கும்பலும் மார்க்சீய கும்பலும் ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து, உள்நாட்டு மக்களை விரட்டிவிட்டனர் என்ற கொள்கையை நிலைநாட்டவும் ஆகையால் நாங்கள் பிரிட்டிஷ்காரர்கள் உங்களை விரட்டுவதில் நியாம் உண்டு என்று வாதாடவும், இந்துமத நூல்களை மொழிபெயர்த்தனர் ;
இதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அழகாக ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது’ போல சொல்லி கண்டித்துள்ளார். “அவர்கள் மொழிபெயர்த்ததால் நம் கிரந்தங்கள் உலகம் முழுதும் தெரிந்தது உண்மைதான். ஆனால் அவர்கள் நோக்கம் தவறானது” என்று காட்டியுள்ளார்.
மகாகவி பாரதி 700 ஆண்டு முஸ்லீம் ஆட்ச்சியையும் 300 ஆண்டு ஆங்கிலேய ஆட்சியையும் “ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி” என்று கண்டித்துள்ளார்.
சுவாமி விவேகானந்தரோ “இந்து மஹா சமுத்திரத்தின் அடியிலுள்ள அத்தனை சகதியையும் உங்கள் மீது வீசி எறிந்தாலும் நீங்கள் செய்த தீமைக்கு பதில் கொடுத்தாதாகாது” என்று வெள்ளையனைச் சாடியுள்ளார்.
XXX

3-33-5
நதிகளிடம் விசுவாமித்திரன் பேசுகிறான் :
“நான் சோம லதை என்னும் மூலிகையைப் பறிக்கச் செல்லுகிறேன் .
என் விருப்பத்துக்கு இணங்கி, ஓடாமல் ஒரு கணப்பொழுது
நில்லுங்கள் . குசிகனின் புதல்வனான நான் இந்த மகத்தான துதி
மூலம் உங்களுடைய நல்லாதரவை நாடுகிறேன்”.
எனது உரை/ வியாக்கியானம்
Griffith கிரிப்பித், Max Muller மாக்ஸ்முல்லர் போன்றோர் மஹா விஷமிகள் நேர்மையற்றவர்கள் mischievous and dishonest . சாயனர் பெயரை வேண்டும் போதெல்லாம் சேர்த்து விட்டு, மொழி பெயர்ப்பு என்று வருகையில் தன் மனம் போக்கில் மொழி பெயர்க்கின்றனர். அதற்கு இந்த ஐந்தாவது மந்திர ஆங்கில மொழி பெயர்ப்பு ஒரு சான்று..
ஆரியர்கள் கிழக்கு நோக்கி தம் சாம்ராஜ்யத்தைப் பர ப்புவதை இந்த துதி காட்டுவதாக கிரிப்பித் சேர்த்துள்ளார் . ஆனால் சாயனரும் அவருக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த யாஸ்கரும் சோமம் என்னும் மூலிகையைப் பறிக்கச் செல்கிறேன் ;ஆகையால் அருள்கூர்ந்து வழிவிடுங்கள் என்பதாக அர்த்தம் கூறுகின்றனர். இதற்கான பதம் ‘சோமம்’ என்பது கவிதையிலும் உளது
சோம மூலிகை, இமய மலை போன்ற மலை உச்சசியில் கிடைக்கிறது. அது கங்கைச் சமவெளியில் விளையாது. ஆக விசுவாமித்திரர் மேற்கு நோக்கிச் சென்றாரே அன்றி கிரிப்பித், மாக்ஸ்முல்லர், மார்க்சீய கும்பல் பிதற்றுவது போல கிழக்கு நோக்கிச் செல்லவில்லை.
இதற்கு ரிக் வேதத்திலேயே ஆதாரம் உளது. யமுனை நதிக்கரையையும் விசுவாமித்திரர் கால மன்னர் சுதாஸையும் தொடர்பு படுத்தும் இன்னொரு துதி ரிக் வேதத்தில் வருகிறது. அந்த இடத்தில் இவர்கள் எங்களுக்கு இது எப்படி என்று விளங்கவில்லை யே!! என்று பேந்தப் பேந்த முழிக்கின்றனர் .
பிற்கால இலக்கியமான ராமாயணமும் விசுவாமித்திர வம்சத்தை நேபாள எல்லையில் (Nepal- Bihar Border) உள்ள மிதிலாபுரி வரை எடுத்துச் செல்கிறது. அதாவது கங்கை நதி பாய்ந்தோடும் பீஹாரில் அவர் ராம, லெட்சுமணரை அழைத்துச் சென்று மணம் புரிவிக்கிறார். இந்து சாம்ராஜ்யம் ஈரான் முதல் அஸ்ஸாம் வரை பரவியிருந்த காலம் அது.
(யமுனை நதி – சுதாஸ் பற்றிய கவிதையை தனியே ஒரு கட்டுரையில் தருவேன்).
XXX
3-33-6
வஜ்ராயுதம் தாங்கிய இந்திரன், நதிகளைத் தடுத்த விருத்திரனைக்
கொன்றான். எங்களுக்கான வழிகளை வகுத்தான். நல்ல கைகளுள்ள
சவிதா எங்களுக்கான வழியில் எங்களைச் செலுத்தினான். நாங்கள்
இந்திரனின் கட்டளைக்குட்பட்டு ஓடுகிறோம்.
எனது வியாக்கியானம்
இந்திரன் என்பது மழை உண்டாக்கும் மேகம், காலநிலை; வறட்சி யை விருத்திரன் என்று உருவகிப்பர்.அத்தோடு சவிதா என்ற பெயர் இங்கே வருகிறது. அதை சாயனர், சவிதா என்பது இந்திரனைப் புகழும் அடைமொழி என்கிறார் . சாயனரும் ஒரே சொல்லுக்கு வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு பொருள் சொல்கிறார் . வேதங்கள் தோன்றி, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் வியாக்கியானம் செய்வதால் இந்தக் குழப்பம் இருப்பதில் வியப்பில்லை. மேலும் சாயனர் உரையை வேத விற்பன்னர்கள் போற்றுவதில்லை. அவர்கள் வேதத்தின் இலக்கிய, இலக்கண பொருளைப் பாராது அதை அப்படியே ஓதிக்கொண்டு இருந்தாலே பலன் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையால்தான் நமக்கு இன்றும் வேதங்கள் அக்ஷரம் மாறாமல் கிடைத்திருக்கின்றன!!!
ஏனெனில் வேதம் சொல்லுவதை காகிதத்தில் ஒரே ஒரு பக்கத்தில் கூட அடக்கிவிடலாம். இதை தமிழ் இலக்கியத்துடனும் ஒப்பிடலாம்.அகநானூறு, ஐங்குறு நூறு,கலித்தொகை, நற்றிணை, குறுந்தொகை முதலிய அகத்திணைப் பாடல்களில் வரும் கருத்துக்களை ஒரே பக்கத்தில் சுருக்கிவிடலாம் ஆனால் அவர்கள் அந்த ஒரே கருத்தைச் சொல்லும் அழகிற்காக சுமார் 2000 அகத்திணைப் பாடல்களை இன்றும் காத்து வருகிறோம். அது போலவே ரிக் வேதத்திலும் சோம பானம் பற்றி 1000 இடங்களில் வருகிறது. எனினும் மந்திர சக்திக்காக அவற்றை நமது முன்னோர்கள் நமக்காக பாதுகாத்து தந்திருக்கின்றனர். அதை அர்த்தம் மட்டும் பார்த்திருந்தால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஒதுக்கி வைத்திருப்பார்கள். இன்று நமக்கு கிடைத்திரா. அர்த்தத்துக்கும் மேலே ஒரு ரஹஸ்யம் உளது. அதற்கான சாவி ஆதி சங்கரர், வேத வியாசர் போன்றோர் மீண்டும் அவதரிக்கையில் நமக்கு கிடைக்கும் .
XXXX

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் கதை
இதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் ஒரு அழகான கதை மூலம் விளக்குகிறார். ஒரு குருடன் விளக்கை ஏற்றிக் கொண்டு, கையில் வைத்துக் கொண்டு நடந்தானாம். எல்லோரும் அவனைக் கண்டு நகைத்தார்கள் . அவனிடம் விளக்கம் கேட்ட போது ‘உங்களுக்கு வெளிச்சம் தெரிய வேண்டுமல்லவா; என் மீது விழ மாட்டீர்களே’ – என்று .
குருடர்களாகிய நாமும் வேதம் என்னும் விளக்கை ஏந்தி நடப்போம். மற்றவர்களுக்கு வெளிச்சம் கிடைக்கட்டும் .
அதனால்தான் பாரதியும் சொன்னான் :-
‘நம்பினார் கெடுவதில்லை ; இது நான்கு மறைத் தீர்ப்பு’ !
‘வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே’ ! என்று .
XXXX
3-33-7
உடனே விசுவாமித்திரன் சொல்கிறான்
“அஹி என்ற அசுரனை இந்திரன் வெட்டிக் கொன்ற வீரச் செயல்
போற்றுதற்குரியது. அவன் தன்னுடைய வஜ்ராயுதத்தால் , தடை
எழுப்பியவர்களைத் துடைத்து ஒழித்தான் . இதனாலன்றோ
(உங்களைப் போன்ற) நதிகள் இன்று விருப்பம் போல பாய
முடிகின்றது.”
எனது வியாக்கியானம்
ஒருவரிடம் சலுகையை எதிர்பார்த்துச் செல்பவர் அந்த ஆளைப் புகழ்ந்து பேசுவது மனித இயல்பு. அவ்வண்ணமே விசுவாமித்திரனும் நதிகளைப் பாதுகாத்த இந்திரனைப் புகழும் வண்ணம் பேசுகிறான். அஹி என்ற பாம்பு பற்றியும் விருத்திரன் என்னும் அரக்கன பற்றியும் ரிக் வேதத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை நூற்றுக் கணக்கான இடங்களில் வருகிறது. இது மழையைத் தடுக்கும் அம்சங்கள் என்பதைத் தள்ளிப்போன வெள்ளைக்காரனும் ஒத்துக்கொள்கிறான் !!!!!
xxx
3-33-8
நதிகள் பேசுகின்றன
ஏ புலவா ! நான் சொல்வதையும் நீ இதுவரை சொன்ன
சொற்களையும் மறந்து விடாதே ! இனி வரப்போகும்
சந்ததிகள், பரம்பரை பரம்பரையாக இதை போற்றப்
போகிறார்கள்; ஓ கவிஞனே ! உன்னுடைய பாடல்களில்
எங்கள் மீது அன்பைப் பொழிவாயாகுக. (மனிதர்களின்
நடுவே எவனும்) நதிகளை இகழ வேண்டாம்; உனக்கு
வணக்கம் .
எனது வியாக்கியானம்
இந்தத் துதியில் உள்ள 13 மந்திரங்களில் எனக்குப் பிடித்த மந்திரம் இதுதான். வருங்கால சந்ததியினர் ரிக் வேதத்தை முழங்குவார்கள் என்ற தீர்க்க தரிசனத்தை நதியின் வாய் வழியாக நமக்குப் புலவன் தெரிவிக்கிறான். தனது பேச்சு யுகம் தோறும் எதிரொலிக்கும் என்று புலவன் சொன்னால் அது அகந்தை ஆகிவிடும். ஆகையால் இதை நதிகள் சொல்லுவது போல சொல்கிறான். என்ன அற்புதம்!!! அந்த அழியாத மா கவிதையை இன்று நீங்களும் நானும் வியப்போடு படிக்கிறோம்.
அடுத்த விஷயம் – ‘நீரையும் சீராடு’– என்னும் தமிழ்ப் பழமொழி இதில் இருக்கிறது. நதிகளை இகழ வேண்டாம் என்று நதிகள் சொல்லுவது போல விசுவாமித்திரன் சொல்லும் செய்தி – நதி களைத் தாய் போலப் போற்றுங்கள்; அசுத்தம் செய்யாதீர்கள் என்பதாகும். அடுத்த மந்திரத்திலேயே நதிகளை சகோதரிகளே என்று அழைக்கிறான்.
அதை அடுத்த கட்டுரையில் காண்போம்
–தொடரும்tags – கிரிப்பித், முகத்திரை, அழியாத மா கவிதை -2, ரிக் வேதக் கவிதை, R TH Griffith