
Post No. 10,141
Date uploaded in London – 26 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று ஞாயிற்றுக் கிழமை செப்டம்பர் 26-ம் தேதி 2021
ஆம் ஆண்டு

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது LONDON SWAMINATHAN
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.
XXXX

ராமானுஜர் சிலை பிரதமர் மோடி திறந்து வைப்பார்
ஐதராபாத்தில் ராமானுஜருக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட சிலை — அடுத்த ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பார்
அடுத்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திரிதண்டி ஸ்ரீ ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவர் வைஷ்ண குரு ராமானுஜர். பல்வேறு இடங்களுக்கு சென்று சமத்துவத்தைப் பரப்பியவர். ஸ்ரீரங்கம், திருமலை, மேல்கோட்டை, காஞ்சிபுரம் கோயில்களுக்கு நேரடியாக வருகை தந்து பூஜை நடைமுறை களை வழிநடத்தி செயல்படுத்தியவர்.
அவரது பஞ்சலோக சிலை, ஐதராபாத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 216 அடியில் பிரமாண்டமாக அமைக்கப்படுகிறது.
இந்த திட்டம், திருதண்டி சின்ன ஜீயர் தலைமையில் நடக்கிறது.
ஜீயர் சுவாமிகள், ராஷ்டிரபதி , உப ராஷ்டிரபதி மற்றும் உட்துறை அமைச்சர் ஆகியோரையும் டில்லியில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் . மு.க ஸ்டாலினையும் சந்தித்து அழைத்துள்ளார் . அடுத்த ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி முதல் விழா நடைபெறுகிறது.

Xxxxx
News from Madras High Court
கோவில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகை: அறநிலையத்துறை கமிஷனருக்கு ஐகோர்ட் உத்தரவு
கோவில் சொத்துக்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்கும்படி, அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பவும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, வாடகை மறு நிர்ணயத்தை உறுதி செய்யவும், அறநிலையத்துறை கமிஷனருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில், கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பெருந்துறையில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான, 4.02 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று, 1982ல் பள்ளி துவங்கப்பட்டது. குத்தகை நிலம் தவிர்த்து, கூடுதலாக 2.50 ஏக்கர் நிலத்தையும் விளையாட்டு மைதான மாக பயன்படுத்தி வருகிறது.
குத்தகை நிலத்துக்கும், கூடுதலாக பயன்படுத்தும் நிலத்துக்கும், வாடகை நிர்ணயம் தொடர்பாக, கோவில் நிர்வாக அதிகாரி, பள்ளி நிர்வாகத்துக்கு, 2018 ஜூலையில், ‘நோட்டீஸ்’ அனுப்பினார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில், ‘நியாயமான வாடகையை உயர் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. தற்போது, மாத வாடகையாக, 85 ஆயிரத்து, 796 ரூபாய் செலுத்துகிறோம்.
‘வாடகை நிர்ணயம் தொடர்பாக, உயர் நீதிமன்றம் கையாண்ட முறையை எதிர்த்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மீண்டும் வாடகை நிர்ணயம் செய்வதை ஏற்க முடியாது’ என, கூறப்பட்டுள்ளது.
மனுவை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். அறநிலையத்துறை சார்பில், வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கோவில் சொத்துக்கள் தொடர்பான வாடகையை, அறநிலையத் துறை சட்டப்படி அமைக்கப்பட்ட குழு தான் நிர்ணயிக்க வேண்டும். சொத்து இருக்கும் பகுதியில் நிலவும் சந்தை மதிப்பை ஆராய்ந்து, நியாயமான வாடகையை குழு நிர்ணயிக்கும். எனவே, இந்தக் குழு நிர்ணயிக்கும் வாடகை தான் செல்லத்தக்கது. என்று நீதிபதி கூறினார்.
Xxxx
News from Supreme Court

பத்மநாப சுவாமி கோவில் கணக்கு தணிக்கையில் அறக்கட்டளைக்கு விலக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
தணிக்கை விவகாரத்தில், ‛‛திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்க முடியாது,” என, உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகிப்பது தொடர்பான பிரச்னை 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ‘மாநில அரசு இக்கோவிலை நிர்வகிக்க தனி அறக்கட்டளையை அமைக்கலாம்’ என, கேரள உயர்நீதிமன்றம் கடந்த 2011ல் உத்தரவிட்டது. அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததோடு, ‘கோவிலை நிர்வகிக்கும் உரிமை திருவிதாங்கூர் அரச குடும்பத்துக்கு உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் கோவிலுக்கான வரவு – செலவு விவரங்களைத் தணிக்கை செய்ய வேண்டும்’ என, உத்தரவிட்டது.
கணக்குத் தணிக்கை விவகாரத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதன் மீதான விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் யு.யு.லலித், எஸ்.ரவீந்திர பட், பெலா எம்.திரிவேதி ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.
தீர்ப்பில், ‘பத்மநாப சுவாமி கோவிலின், கடந்த 25 ஆண்டு கால கணக்குத் தணிக்கை விவகாரத்தில் திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்க முடியாது. இன்னும் 3 மாதத்துக்குள் அல்லது எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக கணக்கு தணிக்கையை முடிக்க வேண்டும்’ என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
Xxxx
News from M

umbai
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தலிபான்களுடன் ஒப்பிட்டு பேசிய ஜாவேத் அக்தருக்கு ‘நோட்டீஸ்‘
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை தலிபான்களுடன் ஒப்பிட்டு பேசியதற்காக, ஹிந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தருக்கு, மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளார்.
மஹாராஷ்டிராவில் ஹிந்தி திரைப்பட பாடலாசிரியராக இருப்பவர் ஜாவேத் அக்தர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், தலிபான் பயங்கரவாதிகள் கையில் மீண்டும் சிக்கியுள்ளது பற்றி கருத்து தெரிவித்த அவர், ‘தலிபான்களின் செயல்கள் காட்டு மிராண்டித் தனமானது. ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தளம் மற்றும் வி.எச்.பி., போன்ற அமைப்பை ஆதரிப்பவர்களின் நடவடிக்கைகளும், அது போன்றது தான்’ என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, ஜாவேத் அக்தர் மன்னிப்பு கேட்க கோரி, ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையை சேர்ந்த வழக்கறிஞர் சந்தோஷ் துபே கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ்., ஒரு தேசபக்த அமைப்பு. அதை, தலிபான் பயங்கரவாத அமைப்புடன் ஜாவேத் அக்தர் ஒப்பிட்டது, பெரும் கண்டனத்துக்குரியது. இதற்காக அவர் ‘பகிரங்கமாக, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனக் கோரி, அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். ஏழு நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், அக்தர் மீது 100 கோடி ரூபாய் கேட்டு, மான நஷ்ட வழக்கு தொடர்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.
Xxxx
News from Uttar Pradesh

புகழ் பெற்ற மடாதிபதி நரேந்திர கிரி மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் அகில பாரதிய அகார பரிஷத் (ஏபிஏபி) மடத்தின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இது தற்கொலை அல்ல; திட்டமிட்ட கொலை என்பது பக்தர்களின் வாதம்.
நரேந்திர கிரி மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் 5 பக்க தற்கொலை கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டிருந்த படி முக்கிய சீடர்களில் ஒருவரான ஆனந்த் கிரி மற்றும் சீடர்கள் சந்தீப் திவாரி, அதயா திவாரி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச அரசு, சி பி.ஐ . விசாரணையைக் கோரியதால் அந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுவிட்டது. முன்னதாக
நரேந்திர கிரி மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று அகில பாரதிய அகார பரிஷத் துணைத்தலைவர் தேவேந்திர சிங், அலகாபாத் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்
நரேந்திர கிரி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நரேந்திர கிரியின் உடலுக்கு உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
Xxxx
News from Andhra Pradesh

திருப்பதி கோவில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 95 லட்சம்
திருப்பதி பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 95 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி பாலாஜி வெங்கடேஸ்வரர் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவிலில் நேற்று முன்தினம் 28 ஆயிரத்து 880 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அன்று 17 ஆயிரத்து 350 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 95 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
XXX
NEWS FROM AMERICA
ஹிந்து பாரம்பரிய மாதம் அக்டோபர்; அமெரிக்க மாகாணங்கள் அறிவிப்பு
அமெரிக்காவைச் சேர்ந்த டெக்சாஸ், ஓஹியோ உள்ளிட்ட பல மாகாணங்கள் அக்டோபரை, ஹிந்து பாரம்பரிய மாதமாக அறிவித்துள்ளன. அக்டோபரில் நவராத்திரி, தசரா உட்பட பல பண்டிகைகளை ஹிந்துக்கள் கொண்டாடுகின்றனர்.மகாளய அமாவாசையும், சில சமயம் தீபாவளி பண்டிகையும் அக்.,ல் வருவது உண்டு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அக்டோபரை, ஹிந்து பாரம்பரிய மாதமாக அறிவிக்கக் கோரி அமெரிக்காவைச் சேர்ந்த பல ஹிந்து அமைப்புகள், மாகாண அரசுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தன. இதை ஏற்று டெக்சாஸ், புளோரிடா, நியூ ஜெர்சி, ஓஹியோ, மாசாசூசெட்ஸ் மாகாண அரசுகள், அக்டோபரை ஹிந்துக்களின் பாரம்பரிய மாதமாக அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளன.
இது குறித்து அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அஜய் ஷா கூறியதாவது:ஹிந்து பாரம்பரிய கலாசாரத்திற்கு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொன்மையும் சிறப்பும் உள்ளது.ஆனால் வெகு சிலரே ஹிந்து சனாதன தர்மத்தை அறிந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. பாரம்பரியமிக்க ஹிந்து தர்மம் மற்றும் கொள்கைகளை உலகறியச் செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது.
இதையொட்டி எங்கள் அமைப்பு, இதர ஹிந்து அமைப்புகளுடன் சேர்ந்து அமெரிக்காவின் 20க்கும் மேற்பட்ட மாகாண அரசுகளுக்கு அக்டோபரை ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட வேண்டும் எனக் கோரி கடிதம் அனுப்பியது. இதன்படி பல மாகாணங்கள் ஹிந்து பாரம்பரிய மாதமாக அக்டோபரை அறிவித்துள்ளன. அந்த மாதம் முழுதும் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பாட்டு, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
xxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் LONDON SWAMINATHAN
நன்றி, வணக்கம்
tags- உலக, இந்து சமய ,செய்தி மடல், 26921,