
Post No. 10,137
Date uploaded in London – 26 September 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Written by London Swaminathan (Former BBC Broadcaster, University Tamil Tutor & Dinamani Senior Sub Editor)
This was written for a Tamil Magazine recently.
தமிழ் தெரியுமா? வா- வந்தான், போ- போந்தான்? (Post No.10,137)
தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு தமிழ் மொழியைக் கற்றுத் தருவது எளிது. ஏனெனில் அவர்கள் ரத்தத்தில் இது உள்ளது . தாயின் கருப்பையில் இருக்கும் போதே கரு கற்றுக்கொள்ளத் துவங்குகிறது என்ற புராணக் கதைகளும் தேவாரப் பாடல்களும் உண்மைதான் என்று தற்கால விஞ்ஞான உண்மைகள் நிரூபிக்கின்றன (எ .கா . அஷ்டா வக்ரன் கதை; கருவுற்ற நாள் முதலாக ….. பாடல்).
ஆனால் ஐரோப்பிய மொழிகள் பேசுவோருக்கு தமிழைக் கற்பிக்க 4 வழி அணுகுமுறை தேவை..
இறந்த காலத்தில் (PAST TENSE) 7 வகை உண்டு என்பது தொல்காப்பியத்திலும் இல்லை. பவணந்தி முனிவரின் நன்னூலிலும் இல்லை.
முதலில் 4 வழி அணுகு முறை என்ன என்பதைச் சொல்லிவிட்டு இறந்தகால அதிசயம் பற்றி மட்டும் சொல்கிறேன் .
1.தமிழ் எழுத்துக்களைக் கற்பிக்கும் போது 247 எழுத்துக்கள் என்று சொல்லி அச்சுறுத்தாமல் 12 உயிர் எழுத்துக்கள், 18 மெய்யெழுத்துக்கள் (12+18=30) என்று சொல்லி கற்பிக்க வேண்டும். சில ஒலிகளை உண்டாக முன்னும் பின்னும், மேலும் கீழும் சில கீறல்கள் செய்வோம் (DIACRITICAL MARKS) என்று காட்ட வேண்டும் (க, கா, கி, கீ கு கூ ….)
2.இரண்டாவதாக ரோமன் எழுத்திலும் தமிழ் எழுத்திலும் (ROMAN SCRIPT- AVAN, NAAN, NEE) எழுத வேண்டும்
3. ஆங்கிலம் முதலிய ஐரோப்பிய மொழிகளுக்கு நேர் மாறானது இந்திய மொழி அமைப்பு என்பதை முதலிலேயே மனதில் பதிப்பிக்க வேண்டும் இந்திய மொழிகள் S O V எஸ் ஓ வி = எழுவாய்- செயப்படு பொருள்- பயனிலை (SUBJECT OBJECT VERB) என்பதைக் காட்ட வேண்டும்.
4.நாலாவதாக உச்சரிப்பு- தமிழில் 3 ந, ன ண , 3 ல, ள ழ , 2 ர ற இருப்பதை விளக்கி உச்சரிப்பு பற்றி எச்சரிக்க வேண்டும் .
இதற்குப் பின்னர் ஆழமாக தமிழ் கற்க விரும்பினால் பழமொழிகள், மரபுச் சொற்றோடர்கள் (PROVERBS, IDIOMS AND PHRASES) , முதலியவற்றைக் கற்பிக்கலாம்.
நிகழ் கால (PRESENT TENSE) வினைச் சொற்களை ஒரே வகையில் உருவாக்கிவிடலாம் (நிற்’கிறா’ன் , வரு’கிறா’ன் , போ’கிறே’ன் = கி ற)
வருங்கால வினைச் சொற்களை (FUTURE TENSE) இரண்டே வகைகளில் – வழிகளில் உருவாக்கலாம் ( பேசு’வான்’, வரு’வான்’. கற்’பான்’ , ஏற்’பான்’ = வ்வ அல்லது ப்ப )
ஆனால் மிகவும் சிக்கலானது இறந்த காலம் (PAST TENSE) . அதில் எத்தனை வகை பாருங்கள்! இதை நாம் முறையாக அறிந்தால் வட இந்தியர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் தமிழை புரியவைப்பது எளிது. இதைக் கண்டுபிடித்து எழுதியவர் GRAUL (YEAR 1855)
(ARDEN MADE MORE CHANGES LATER LIKE (A).WEAK, (B)MIDDLE AND (C).STRONG VERBS)
XXX
EXAMPLES
CLASS ONE VERBS
1 A SEY- SEYTHEN செய்- செய்தேன்
1 B KOL – KONDEN கொள் – கொண்டேன்
1C VEL – VENDREN வெல் – வென்றேன்
CLASS TWO
UTKAR – UTKARNTHEN
உட்கார் – உட்கார்ந்தேன்
CLASS THREE
VANGU – VANGINEN
VANGU – VANGINEN
வாங்கு- வாங்கினேன் தமிழிலுள்ள ஏழுவகை வினைச் சொற்களில் மூன்றாவது வகை வினைச் சொற்கள்தான் அதிகம்
ஆடு, பாடு, விளையாடு போல பல சொற்கள் இதில் அடக்கம்.
AND IN THE NEUTER GENDER WE HAVE THREE FORMS
VANGIYATHU, VANGITRU, VANGINA
அஃறிணையில் வாங்கியது, வாங்கிற்று , வாங்கின என்றெல்லாம் வரும்
CLASS FOUR
SAAPPIDU – SAPPITTEN
சாப்பிடு – சாப்பிட்டேன்
PERU – PETREN
பெறு – பெற்றேன்
CLASS FIVE
5 A. UN – UNDEN உண் – உண்டேன்
5 B.THIN – THINDREN தின் – தின்றேன்
5 C.KEL – KETTEN கேள் – கேட்டேன்
5.D. VIL- VITREN வில் – விற்றேன்
CLASS 6
PAR- PARTHTHEN
பார்- பார்த்தேன்
CLASS 7
NADA – NADANTHEN
நடந்தேன்
APART FROM THESE SEVEN CLASSES RARE VERBS LIKE
SAA – SETHTHEN ARE ALSO THERE IN
IF YOU CONJUGATE
SAA – SARTHTHEN
SAA – SAATHTHEN
SAA- SAANTHEN FOLLOWING ONE OF THE SEVEN CLASSES IT WOULD BE WRONG.
‘சா’ என்னும் வினைச் சொல்லை, இறந்த காலத்தில் ‘செத்தேன்’ என்போம்.
முன்னர் சொன்ன எவ்வகையிலும் இது அடங்காது .
‘கா’ என்றால் காத்தேன் என்று சொல்லி விடலாம்
சா- சாதேன் ,சார்த்தேன், சாத்தேன் , சாந்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது.
ஆக, மொத்தத்தில் எல்லா வினைச் சொற்களையும் பட்டியலிட்டால் இப்படி ஏழு முறையில் இறந்தகாலச் சொற்கள் வரும். தமிழைத் தாய் மொழியாகக்கொண்டோர் இயல்பாகவே பேசிப் பழகி விடுவதால் இப்படி பலவகைகளில் நாம் இறந்த காலச் சொல்லை உருவாக்குகிறோம் என்று அறியாமலேயே இயல்பாகப் பேசிவிடுகிறோம். வெளிநாட்டினர் தவறில்லாமல் பேச வேண்டுமானால் நாம் அவர்களுக்கு இதைக் கற்பித்தே ஆக வேண்டும்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!

tags- தமிழ் தெரியுமா, Tamil Verbs