ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!(Post No.10,174)

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!    (Post No.10,174)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,174

Date uploaded in London – 4 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நம்முடைய பிளாக் Blog கட்டுரைகளைப் படிக்கும் வாசகர் ஒருவர் வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை பற்றி இல்லையாமே, இவை எல்லாம் புத்த, ஜைன மதத்திலிருந்து வந்ததாமே ! இது உண்மையா என்று கேட்டிருந்தார் .

சுருக்கமான பதில்- ரிக் வேதம் உலகில் பழமையான புஸ்தகம். அதிலேயே இந்தக் கருத்துக்கள் உள்ளன.அதைத் தொடர்ந்து வந்த பிராமணங்கள் என்னும் நூல்கள் மற்றும் உபநிஷதங்கள் ஆகியவற்றில் தெள்ளத் தெளிவாக, ஐயம் திரிபற, இந்த விஷயங்கள் உள்ளன. அவை அனைத்தும் புத்த, ஜைன மதநூல்களுக்கு முற்பட்டவை என்பதைத் ‘தள்ளிப்போன வெள்ளைக்காரர்களும்’ ஒப்புக்கொள்கின்றனர். ஆகவே இவை இந்து மதத்திலிருந்து ஏனைய கீழ்த்திசை மதங்களுக்கு — அதாவது இந்து மதத்தின் கிளை மதங்களுக்குச் சென்றன என்பதே உண்மை.

முதலில், காலக் கணிப்பை எடுத்துக்கொள்வோம். நமது பஞ்சாங்கமும் மத நூல்களும் சொல்லும் கருத்துக்களை ஏற்காத– எதிர்த்துப் பேசுவோர்– சொல்லும் கருத்துக்கள் இவை என்பதை முதலில் நாம் மனதிற் கொள்ளவேண்டும் ;  நமது பஞ்சாங்கங்கள் கி.மு 3102-ல் கலி யுகம் துவங்குவதாகச் சொல்லுகின்றன சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகளும் இதை உறுதி செய்கின்றன. அதன்படி பகவத் கீதை அதற்கு முந்திய நூல். அதில் இரண்டாவது அத்தியாயத்தில் மறு பிறப்பு, கர்ம வினை என்பன தெளிவாகவே கூறப்பட்டுள்ளன. ஒரு வேளை கீதையின் காலத்தைச் சந்தேகிப்பவர்கள், வேறு சில ஆதாரங்களைக் கேட்கலாம். பிருஹத் ஆரண்யக உபநிஷத் மற்றும் சதபத பிரா(ஹ்)மணம் முதலிய நூல்களில் இருப்பதை வெளிநாட்டோரும் ஒப்புக் கொள்வதோடு அந்த நூல்களுக்கு கி.மு.850 அல்லது 800 என்றும் தேதி குறித்துவிட்டனர். அப்படிப்பார்த்தாலும் புத்தர், மஹாவீரர் முதலியோருக்கு முன்னரே இது எழுத்து வடிவில் வந்து விட்டது.

ரிக் வேதத்தில் உள்ளது

இந்து மத நூல்கள் பெரிய சமுத்திரம் போல விரிவானவை ; எவரேனும் அவை முழுவதையும் படித்திருக்க முடியுமா என்று கேட்டால் நான் இல்லை என்றே சொல்லுவேன். ஆனால் ஏனைய மத நூல்களை ஒரே நாளில் பிடித்துவிடலாம். மேலும் நமது நூல்கள் மிகவும் அப்டேட் Update  ஆனவை. வேதம் தவிர மற்ற எல்லா நூல்களையும் நம் முன்னோர்கள் Update அப்டேட் செய்துள்ளனர்- புதுமைப்படுத்தியுள்ளனர். சில விஷயங்களை விளக்கத்துக்காக சேர்த்துள்ளனர். வெளிநாட்டார் கடைசியில் சேர்க்கப்பட்ட தகவலை அடிப்படையாக வைத்து தேதி குறிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் இந்துமதத்தைப் பின்பற்றாதவர்கள், அதில் சொல்லிய கருத்துக்களை நம்பாதவர்கள் என்பது மட்டுமல்ல. அவர்களை அப்பணியில் பணம் கொடுத்து  ஈடு  படுத்தியவர்கள் ‘கிறிஸ்தவ மத கொள்கைகளை வலியுறுத்த உம்மை இப்பணியில் நியமித்துள்ளோம்’ என்றும் எழுத்து வடிவில் எழுதியும் வைத்துவிட்டனர். நம் வீட்டு எதிரி– குடும்ப எதிரி — நம் குடும்பத்திலுள்ளோர் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொன்னால் நாம் உடனேயே அவைகளை உதறித் தள்ளிவிடுவோம். அது போல எதிரிகளின் கருத்தை ஏற்க வேண்டியது இல்லை.

அது சரி, ஒரு இந்து மத அன்பர், உண்மையிலேயே இது பற்றி தெரிந்து கொள்ள நம்மை அணுகினால் நாம் என்ன சொல்லுவோம்? இதோ பதில்.

ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் மரணம், இறுதிச் சடங்கு, மக் கிரியைகள் பற்றி நிறைய மந்திரங்கள் உள்ளன. அவற்றில் இக்கருத்துக்கள் பேசப்படுகின்றன. இந்த மந்திரங்களை இன்றும் ஒருவர் இறந்தபின்னர் முதல் 13 நாட்களின் சடங்குகளில் பிராமணர்கள், பயன்படுத்துகின்றனர். பொதுவாக ஈமக் கிரியை விஷயங்களை எவரும் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொவதில்லை. ஆனால் மிகவும்  வியாப்பான விஷயம், ரோட்டில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் பாடும் பாட்டுக்களில் கூட  இந்தக் கருத்துக்கள் எதிரொலிப்பதைக் கேட்கலாம்.

ரிக்வேத மந்திரங்களில் நுழைவதற்கு முன்னர் என் வாழ்வில் நடந்த ஓரிரு விஷயங்களை சொல்லுகிறேன்.. முப்பது வருடங்களுக்கு முன்னால் — அதாவது 1987ல் பிரிட்டிஷ் அரசு என்னை லண்டனுக்கு பி.பி.சி . தமிழோசை ஒலிபரப்புக்கு அழைத்ததற்கு முன்னால்— நான் மதுரை ஜில்லா ஆர்.எஸ்.எஸ் கார்யவாஹ் (மாவட்டச் செயலர்) பொறுப்பில் இருந்தேன். மேலூர், உசிலம்பட்டி , திருமங்கலம், கம்பம், உத்தமபாளையம், பெரியகுளம் முதலிய இடங்களுக்குச் சென்று ஆர். எஸ்.எஸ். கிளைகளைத் துவக்குவது, கூட்டங்களில் பேசுவது முதலியன வழக்கமான பணிகள் . ஒருமுறை உசிலம்பட்டி சென்றபோது பஸ் நிலையத்தில் பஸ்  நின்றவுடன் ஜன்னல் வழியாக கையை நுழைத்து காசு கேட்டு நச்சரித்தவன் கையில் ஒரு சிப்பலா க்கட்டையை வைத்து அடித்துக் கொண்டு பாடிய பாடல் என்னை அசத்திவிட்டத்து ; உபநிஷத்திலும் பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயத்திலும் சொல்லும் கருத்துக்களை அவன் நாட்டுப்புற பாடலாகப் பாடுகிறான். கையில், பையில் இருந்த பணத்தில் ஊர் போய்ச்  சேரத் தேவையான பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு  மிச்சத்தை அவன் கையில் போட்டேன் .

Xxx

லண்டனில் நான் BBC பி.பி.சி ஒப்பந்த வேலை பார்த்தது ஐந்து ஆண்டுகளுக்கும் சற்று அதிகம். அதற்குப் பின்னர்  நான் பார்த்த பகுதி நேர வேலையில் ஒன்று, பிரபல ஆஸ்பத்திரியொன்றின் மொழிபெயர்ப்பாளர் வேலை. அதில் ஒரு புற்று நோய் நோயாளி இறக்கப்போகிறார் என்பதை அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் அறிவிக்கும் நாள் வந்தது. இங்கெல்லாம் இவ்விஷயத்தை பட்டவர்த்தனாமாக்ச் சொல்லி விடுவார்கள். ஆனால் பக்குவமாக, சுற்றிவளைத்து, ஒரு மணிநேரம் பேசிவிட்டு, மிகவும் அழகாகச் சொல்லுவார்கள். அந்த SPECIALIST NURSES ஸ்பெஷலிஸ்ட் நர்ஸுகள்  இருவர், முதலில் குடும்பத்தினரை சமையல் அறைக்குள் அழைத்துச் சென்று விஷயத்தைச் சொல்லி உயில் முதலியவற்றை எழுதச்  சொல்லுங்கள், அவருக்குக்ப் பிடித்த விஷயங்களைக் கேட்டு அதை நிறைவேற்றுங்கள் என்று சொன்னவுடன் அவர்கள் விக்கி விக்கி அழுதனர்.

பிறகு நோயாளியிடம் வந்து ஒரு அரை மணிநேரம் பேசிய பின்னர் விஷயத்தை உடை த்தோம் . அவர் அழ வும் இல்லை ஷாக் ஆகவும் இல்லை. “ஆமாம், ஆமாம், காடு வா,வா என்கிறது ;வீடு போ, போ, என்கிறது; போகத்தா னே வேண்டும்; எல்லாம் முடித்துவிட்டேனே” என்றார் . அவர் சொன்னதை நான் அ ப்படியே மொழி பெயர்த்துச் சொன்னேன். நர்ஸுகள்  லண் டன் கிறிஸ்தவர்கள். அவர்களுக்கு இந்த விஷயம் புரியவில்லை . ஆள் மூளை குழம்பிவிட்டதோ என்று என்னைக் கேட்டார்கள். நான் அவர்களுக்கு சுருக்கமாக வானப்பிரஸ்தம் என்னும் இந்துக்களின் மூன்றாவது கட்டத்தைச் சொல்லி வயதான இந்துக்கள் இதை அடிக்கடி வீட்டில் சொல்லுவார்கள். அவரும் மரணத்தை எதிர்கொண்டு மறு உலகத்துக்குச் செல்லத் தயாராகிவிட்டார் என்று.

அந்த வெள்ளைக்கார நர்ஸுகளுக்கு எவ்வளவு புரிந்ததோ கடவுளுக்கே வெளிச்சம். உசிலம்பட்டி பஸ்  நிலைய பிச்சைக்காரனோ இறந்து போன புற்று நோய்காரனோ  பகவத் கீதையையோ பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷத்தையோ படித்திருக்க மாட்டார்கள். ஆனால்  அவர்களுடைய மரபணுவில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஊன்றிய வேத தத்துவங்கள் வெளிப்படுகின்றன என்றே நான் சொல்லுவேன்.

மரணம் தொடர்பாக உள்ள மந்திரங்களை வெள்ளைக்கார்களும் கூட விளக்காமல் அப்படியே மொழி பெயர்த்துவிட்டனர். நான் ரிக் வேதத்தில் 9000 மந்திரங்களுக்கு மேல் படித்துவிட்டேன். இன்னும் சுமார் 1000 மந்திரங்களே பாக்கி. இதுவரை படித்த ஈமச் சடங்கு மந்திரங்களுக்கு பல இடங்களில் அர்த்தம் புரிவதில்லை.  பல மர்மமான புரியாத விஷயங்களைப் பேசுகினன்றனர் . ஆகவே இந்து மதம் பற்றிப் பேசுவோர் அதை முழுமையாக அறியவில்லை .

எங்கள் வீட்டுக்கு வாரம் தோறும் பிச்சை எடுக்க ஓர் நாமம் போட்டவர் வருவார். இராமனின் பெயரைச் சொன்னால் ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே என்ற கம்ப ராமாயணப்  பாடலை வாசலில் நின்று பாடுவார். உடனே சகோதரர்களில் ஒருவர் ஓடிச் சென்று அவர் பாத்திரத்தில் ஒரு பிடி அரிசி அல்லது ஒரு அணா காசு போடுவோம். கொஞ்சம்  தாமதமானால் அவர் அந்தப்பாடலை உரத்த குரலில் பாடி எங்களை மிரட்டுவார். நாங்கள் அண் ணன் தம்பி களுக்குள் ஜோக் அடித்துக் கொள்ளுவோம்; ஏய் , அதிகார ப் பிச்சைக்காரன் வந்துட்டான் ; அவன் அதிகாரம் செய்து அதட்டுவதற்குள் காசு போடுவோம் என்று பேசிக் கொள்வோம். அவர் பாடிய இராமன் என்னும் இரண்டு எழுத்தினால் ஜென் மமும் மரணமும் இன்றித் தீருமே என்பது இன்றும் காதில் ரீங்காரமாக ஒலிக்கிறது. யார் இவர்களுக்கு எல்லாம் இந்த உயரிய தத்துவங்களைச்  சொல்லிக் கொடுத்தார்கள்? எல்லாவற்றுக்கும் மேலாக இரத்தத்தில் யார்  ஏற்றிவிட்டார்கள் ?

அமிர்தம்

காலா காலமாக நாம் நம்பும் விஷயங்கள் இவை. இதற்குப்  பெரிய ஆதாரம் “அமிர்தம்” என்ற சொல்லில் இருக்கிறது. இந்த சம்ஸ்கிருதகி  சொல் சங்க இலக்கியத்திலும் உளது. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் பயன்படுத்திய இந்தச் சொல் ரிக் வேதத்தில் நூற்றுக் கணக்கான முறைகள் வரும்.

 இந்த அமிர்தம் என்பது என்ன காட்டுகிறது? மரணமில்லாப் பெரு வாழ்வு தரக்கூடியது அமிர்தம்.

எங்கே? இறைவனின் திருப்பாதத்தில் அல்லது சொர்க்கத்தில். அது கிடைக்காதவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பார்கள் என்ற கருத்து ரிக் வேதம் முழுதும் இந்தச்  சொல்லால்  எதிரொலிக்கப்படுகிறது.

TO BE CONTINUED……………………

XXXXX

  tags –புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை,  ,ரிக்வேத,ம் 

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: