ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 2 (Post.10,176)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,176

Date uploaded in London – 5 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ரிக்வேதத்தில் புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை கருத்துக்கள்!- 2 (Post.10,176)

இன்னொரு ‘சுவையான’ விஷயத்தைச் சொல்லிவிட்டு ரிக் வேதம் பற்றிச் சொல்லுகிறேன். எகிப்திய கலாசாரம் பற்றி இருபது முப்பது நூல்கள் என் வீட்டில் (லண்டனில்) இருக்கிறது அதில் THE BOOK OF DEAD ‘தி புக் ஆப் டெட்’ இறந்தோர் பற்றிய புஸ்தகம் வெள்ளைக்காரர்களுக்கு அத்துப்படி. அதில் சொன்ன பல விஷயங்களை இறந்தவர்கள் வீட்டில் வாசிக்கும் கருட புராணத்துடன் ஒப்பிடலாம். இறந்தோர் ஆவி பாதாள உலகத்துக்குச் செல்லுவது, ஒரு ஆற்றைக் கட்டப்பது, முதலிய விஷயங்கள் அதில் வருகின்றன.

திருக்குறளில் பிறவிப் பெருங்கடலை நீந்துவது பற்றி வள்ளுவர் பத்தாவது குறளில் பாடுகிறார். ஆனால் சம்ஸ்கிருதம் முழுவதும் பிறவிப் பெருங்கடலை கப்பலிலோ அல்லது படகிலோ கடப்பது பற்றியே பாடுகின்றனர் ; வள்ளுவன் ‘பக்கா’ நீச்சல் பேர்வழி போலும்!

என் அம்மா இறந்து போன செய்தி, நான் லண்டனில் இருந்தபோது வந்தது. எல்லாக் கிரியைகளையும் வழக்கமான நாட்களில் முடியுங்கள்; நான் மூன்றாவது நாள் கிரியை முதல் கலந்து கொள்கிறேன் என்று டெலிபோனில் சொல்லிவிட்டு, விமானத்தில் பறந்தேன். எனக்காக அங்கேயுள்ள பிராமணர்கள் மூன்று நாள் கிரியைகளை மீண்டும் ஒரு முறை சுருக்கமாக செய்துவைத்தார்கள் . பெரும் வெளிநாட்டுத் தலைவர்கள் டில்லியில் வந்து இறங்கியவுடன் நமது தேசீய கீதத்தை முழு க்கவும் இசைக்காமல் சுருக்கமாக இசைப்பார்கள் ABRIDGED VERSION OF NATIONAL ANTHEM  ; அது போல எனக்கு சுருக்கமான மந்திரம்.

 13 நாள் கிரியைகளில் எந்த நாள் என்று நினைவில்லை. ஈமச் சடங்கு  செய்யும் இடத்தில் ஒருநாள் அந்த புரோகிதர்கள் வாழை இலை , அதன் மட்டை ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு சிறிய கப்பலை , படகை செய்து வைத்திருந்தார்கள். துக்கமான ஒரு நிகழ்ச்சியிலும் என ஆர்வமும் ஆராய்ச்சியும் வெளிக்காட்டின .

சுவாமிகளே ! இது என்ன ஈமச் சடங்கில் கப்பல் பொம்மை எதற்காக? என்று கேட்டேன். அம்மாவின் ஆவி நதியைக் கடந்து போக வேண்டும் இல்லையா ? என்றார் புரோகிதர். இப்படி எகிப்திலும் சில விஷயங்கள் வருவது கண்டு வியந்தேன். அதை விட  வியப்பு .ரிக் வேதத்தில் நேற்று அந்த கப்பல் விஷயத்தை படித்தபோது ஏற்பட்டது:-

வேள்விக் கப்பல் உவமை – 10-44-6;

இறந்தவனுக்கான  கப்பல் 10-56-7; 10-58-5

விண்கப்பல் – 10-63-10;

புறநானூறு சொல்லும் வலவன் ஏவா வானவூர்தி PILOTLESS PLANE OR DRONE  ; கண்ணகியை ஏற்றிச் செல்ல கோவலன் கொண்டுவந்த விண்கப்பல் (காண்க- வஞ்சிக் காண்டம் -சிலப்பதிகாரம் ; ALSO வனபர்வம் -மஹாபாரதம் PILOTED SPEACE SHIP )

XXXX

10-59-7; 10-58-5;

ரிக் வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் பிராமணர்கள் ஈமச் சடங்கில் ஓதும் மந்திரங்களில் 3 விஷயங்கள் வருகின்றன.

1.இறந்தவர்களின் ஆவி ஒளி ரூபத்தில் பயணம் செய்வது

2.கப்பலில் சென்று கரைகடப்பது ; சில நேரங்களில் விண்கப்பல்- சில இடங்களில் கடல்- கப்பல்

3.மீண்டும் வருக என்று ஆவியை அழைப்பது (மறு  பிறப்பு)

அர்ஜுனனை மாதலி என்பற பைலட் / PILOT OF SPACE SHIP விண்வெளி விமானி , இந்திரலோகத்துக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் காட்சி மஹாபாரத வன பாவத்தில் வருகிறது. அங்கு ஒளி ரூபத்தில் பலர் உலவுவதைக் கண்டு அர்ஜுனன் ஆச்சர்யத்துடன் வினாத் தொடுக்கிறான்.

அதற்கு அர்ஜுனனுக்கு PILOT OF SPACE SHIP MR MATHARI/ LI ஸ்பேஸ் ஷிப் பைலட் மாதரி பதில் கொடுக்கையில் “இவர்களைத்தான் நீங்கள் பூமியில் நட்சத்திரங்களாகப் பார்க்கிறீர்கள்” என்கிறான். இதை என்னால் விஞ்ஞான பூர்வமாக விளக்க முடியாது. ஆயினும் இந்த பிரபஞ்சத்தில் வாழும் நாம் எல்லோரும் நடசத்திரத் துகல்களில் இருந்து பிறந்ததை விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்கின்றனர். (WE ARE ALL STAR DUST)  இதை பி பி.சி ஸ்கை அட் நிகழ்சசியில் பிரிட்டிஷ் ஆஸ்தான விண்வெளி அறிஞர் பாட்ரிக் மோர் (PATRICK MOORE , SKY AT NIGHT, BBC) சொன்னபோது நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்ட எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அடக்கடவுளே ! இது மஹாபாரத  வன பர்வத்தில் உள்ளதே என்று  (இது பற்றி முன்னரே இங்கு நிறைய எழுதியுள்ளேன் )

XXXX

பிராமணர்  வீட்டில் நடுகல்

எனக்கு மிகவும் சின்ன வயது; அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டது மட்டும் காதில் விழுந்தது; கொஞ்சம் நினைவுக்கு வருகிறது. தாத்தா இறந்து போனார், அவருடைய ஆவிக்கு இருட்டுப் பாதையில் வழி    காட்டுவதற்காக, நாங்கள் பேரப் பிள்ளைகள், நெய் பந்தத்தை ஏந்தி நிற்க, கோவிந்த கோவிந்த என்ற முழ க்கத்துடன் XXXXXX தூக்கினர் (அமங்களச் சொற்களை எழுதக் க கூடாது); சுடுகாட்டுக்கும் அப்பாவுடன்  போனேன்; தகனக் கிரியை முடிந்தது. வயதான தாத்தாதான். அப்படியும் என் அப்பாவின் கண்ணில் சிறு துளிகள் வழிந்தன. அந்த துக்ககதர நிகழ்ச்சியில் அந்த வெட்டியான் சொன்ன வார்த்தைகள் இன்றும் நினைவுக்கு வருகின்றன.

“சாமி, ஒரு கவலையும் இல்லாமல் போங்க சாமி. நாளைக்கு காலைல வாங்க; மல்லி கைப் பூப் போல சாம்பல் (அஸ்தி) தரேன்”. என்ன தொழில் சுத்தம் பாருங்கள். அவன் தொழில் சடலத்தை எரிப்பது; சாம்பல் தருவது ; அதிலும் அவன் 100 சதவிகித பெர்பெக்ஷன் CENT PERCENT PERFECTION IN HIS JOB பற்றிப் பேசுகிறான் !!

மல்லிகைப்  பூ போல தாத்தா சாம்பல் !!!

சப்ஜெக்டுக்கு வருகிறேன். எங்கள் அம்மாவும் அப்பாவும் பேசியது :

கல்லை எங்கே புதைப்பது?

என்ன கல் ? என்பதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. நாங்கள் வசித்ததோ மதுரை வடக்கு மாசி வீதியில் 20ம் எண் வீடு; பைரவப் பிள்ளைக்குச் சொந்தமானது; நாங்கள் பணக்காரர் அல்ல. வாடகைவீட்டில் எங்கே கல் புதைப்பது? என்று அவர்கள் கவலைப்பட்டது நினைவுக்கு வருகிறது. இதற்கு எப்போது அர்த்தம் புரிந்தது தெரியுமா?

லண்டனிலிருந்து பறந்து சென்று என் அம்மாவின் ஈமக்ரியைகளில் கலந்து கொண்டது பற்றிச் சொன்னேன் அல்லவா? அங்கும் ஒரு கல்லை வைத்து பல நாள் மந்திரங்கள் சொல்லி அந்த சடங்குகள் நடந்த இடத்திலேயே என் அண்ணனை கொண்டு புதைக்கச் சொன்னார் சாஸ்திரிகள் (வீட்டுப் புரோகிதர்); அதுவரை நான் நடுகல் (HERO STONES)  புதைக்கும் வழக்கம் பழந்தமிழர் இடையே மட்டும் இருந்தது என்று எண்ணி இருந்தேன். நடுகல் பற்றி இரண்டு தொல் பொருட் துறை புஸ்தகமும் வைத்திருக்கிறேன். ஆனால் இந்த நடுகல் நம் இந்துக்கள் எல்லோருக்கும் பொதுவானது- அதை கிறிஸ்தவர்கள் (EPITAPH IN BURIAL GROUNDS) , முஸ்லீம்களும் பின்பற்றி இறந்தோர் இடத்தில் கல் புதைக்கின்றனர் என்பது இப்போது புரிகிறது..

XXX

ரிக் வேதத்தில் உள்ள குறிப்புகளை மட்டும் காண்போம்:

10-15-3

நான் கருணைமிக்க பிதாக்களை (இறந்து போன முன்னோர்கள்) – அடைந்தேன் . நான் விஷ்ணுவிடமிருந்து புதல்வனையும், வம்ச விருத்தியையும் பெற்றேன்; சோம ரசத்தைக் குடித்து இன்புறும் அவர்கள் இங்கே –  பூமிக்கு– அடிக்கடி வருகிறார்கள்; இந்த தர்ப்பைப் புல்லின் மீது அமர்கிறார்கள்.

திருக்குறள்

10-15-6

இங்கே கால்களை மடித்து தெற்குப் பக்கத்தில்  உட்கார்ந்து கொள்ளுங்கள் இந்த அவிகளை ஏற்றுக்கொள்ளுங்கள் . பிதாக்களே ; மனிதர்களின் பலவீனம் காரணமாக நாங்கள் ஏதேனும் பிழைகள் செய்திருந்தால் அத்தற்காக எங்களைத் தண்டித்துவிடாதீர்கள் .

இறந்தோர் தென் திசையில் வாழ்வதை வள்ளுவரும் தென்புலத்தார் என்று குறிப்பிடுகிறார்.(குறள் 43)

அவி /ஹவிஸ் HAVIS  என்பதையும் 259, 413 குறள்களில் பயன்படுத்துகிறார்.

ரிக் வேதத்தில் உள்ள சம்ஸ்கிருதச்  சொற்களை முதல் 50 குறள்களில் வள்ளுவர் அள்ளித் தெளிக்கிறார். பிற்காலத்தில் சில திராவிடங்கள் உளறிக்கொட்டி கிளறி மூ டும் என்பதை அறிந்து ரிக் வேதச்  சொற்களான ஹவிஸ், தென்புலத்தார், அமிர்தம், தெய்வம்  ஆகியவற்றையும் வள்ளுவர் பயன்படுத்தினார்.

மேற்கூறிய குறிப்புகள் மறு  உலகம் ஒன்று உண்டு, அது தென் திசையில் இருக்கிறது; அங்குள்ள நம் முன்னோர்கள், நாம்  அழைக்கும்போது பூமிக்கு வந்து நெய் கலந்த சோற்று உருண்டை/ ஹவிஸ், எள் , நீர் ஆகியவற்றை ஏற்பது தெரிகிறது. பிராமணர்கள் ஆண்டுக்கு குறைந்தது 24 முறை- அதிகமாக 94 முறை – இப்படி இறந்துபோன முன்னோர்களை வீட்டுக்கு அழைத்து  எள்ளும் நீரும் இறைப்பதைக் காணலாம். (நான் லண்டனிலும் இதைச் செய்கிறேன்; ஹவிஸ் மட்டும் திதி என்று வருடத்துக்கு ஒரு முறை அளிக்கப்படுகிறது. முற்காலத்தில் இதை மக்கள் தினமும் செய்தனர் என்பது குறள் 43ல் வரும் பஞ்ச யக்ஞம் மூலம் வெளிப்படுகிறது.

தொடரும்…………………….

tags– புனர் ஜன்மம் , மறுபிறப்பு, கர்ம வினை ,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: