Post No. 10,190
Date uploaded in London – 9 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிரம்மாவினால் கூட ரகசியம் கேட்கப்பட மாட்டாது ! எப்போது?!
ச.நாகராஜன்
அருமையான நூறு சுபாஷிதங்களை சரோஜா பட் தொகுத்து ‘சுபாஷித சதகம்’ என்ற ஒரு நூலாக வெளியிட்டுள்ளார். ஒவ்வொன்றும் ஒரு ரத்தினமே. அவற்றில் ஐந்தைத் தமிழில் பார்ப்போம் :
ஷட்கர்ணோ பித்யதே மந்த்ர சதுஷ்கர்ண: ஸ்திரோ பவேத் |
த்வி கர்ணஸ்ய து மந்த்ரஸ்ய ப்ரஹ்மாப்யந்தம் ந கச்சதி ||
ஆறு காதுகளில் கேட்கப்பட்ட ரகசிய திட்டமானது வெளியில் கசிந்து விடும். நான்கு காதுகளில் கேட்கப்பட்ட ரகசியம் அப்படியே இருக்கும். என்ற போதிலும், இரண்டு காதுகளில் கேட்கப்பட்ட ரகசியமானது பிரம்மாவினால் கூட கேட்கப்பட மாட்டாது.
Secret plan (delibertions) heard by six ears leak out. Secrets heard by four ears remain stable. However, even the creator cannot penetrate into the secret which remains in two ears.
*
ஜலே தைலம் கலே குஹ்யம் பாத்ரே தானம் மனாமபி |
ப்ராக்ஞே சாஸ்த்ரம் ஸ்வயம் யாதி விஸ்தாரம் வஸ்துசக்தித: ||
நீரில் இடப்பட்ட எண்ணெய், துஷ்டன் காதில் விழுந்த ரகசியம், சரியான தகுதியுள்ளவனுக்குக் கொடுக்கப்பட்ட தானம், நல்ல புத்திசாலிக்குக் கொடுக்கப்பட்ட சாஸ்த்ரம் ஆகிய இவை அனைத்தும் ஆரம்பத்தில் சிறியதாக இருப்பினும் கூட தனது உள்ளார்ந்த சக்தியால் பெரிதாகப் பரவி விடும்.
Oil (put) in water, a secret (divulged to) a wicked person, gift (given to) a proper person and knowledge (imparted to an) intelleigent person, these things spread on their own due to the inherent power in each object although they are small (in the beginning).
*
ஜலசேகேன வர்தந்தே தரவோ நாஷ்மஸஞ்சயா: |
பவ்யோ ஹி த்ரவ்யதாமேதி க்ரியாம் பார்ப்ய ததாவித்யாம் ||
கற்குவியல் அல்ல, மரங்களே தண்ணீர் விடும் போது தளிர்த்து வளர்கின்றன. நல்ல தரமுள்ள பொருளே அப்படி ஒரு செயலைச் செய்யும் போது தகுதி உடையதாக ஆகிறது.
Trees and not heaps of stones grow by the sprinkling of water. An object of good quality alone becomes a worthy object when it is processed in that (specific) manner.
*
ஜாத்யுத்க்ருஷ்டஸ்ய ஹி மணேனோர்சிதம் ஷாணகர்ஷணம் |
ஆதர்ஷே சித்ரகாரை: கிம் லிக்யதே ப்ரதிபிம்பத்வம் ||
ஒரு நல்ல தரம் வாய்ந்த அசல் நவரத்தின மணியை பளபளப்பாக்கும் கல்லில் தேய்ப்பது உகந்ததல்ல; ஒரு கண்ணாடியில் தெரியும் பிரதிபிம்பம் ஓவியர் வரைந்ததாகி விடுமா என்ன?
Rubbing on a polishing stone is not desirable for a gem which is originally of high quality. Is the reflection in a mirror drawn by an artist?
*
ஆத்மாதீனசரீராணாம் ஸ்வபதாம் நித்ரயா ஸ்வயா |
கதன்னமபி மத்யார்நாமம்ருதத்வாய கல்பதே ||
தனது கட்டுப்பாட்டில் உடலை வைத்திருப்பவர்களுக்கும், தானாகவே தூங்க முடிபவர்களுக்கும் தகுதியற்ற உணவும் கூட அமிர்தமாகும்!
Even the worthless food is nectar for them who have a control over their body and who sleep their own sleep.
(English translation by Saroja Bhate)
***
நன்றி : சரோஜா பட்
tags- பிரம்மா, ரகசியம்,