WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,194
Date uploaded in London – 10 OCTOBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒருவனுக்குப் பிடித்திருந்தால் அதுவே அவனுக்கு அழகு!
ச.நாகராஜன்
சரோஜா பட் தொகுத்த சுபாஷித சதகம் என்ற நூலிலிருந்து சில சுபாஷிதங்களைப் பார்த்தோம். இதோ இன்னும் ஐந்து சுபாஷிதங்கள் :
மித்ரஸ்வஜனபந்தூனாம் வ்ருத்தேதைரயஸ்ய சாத்மன |
ஆபந்நிகஷபாஷாணே நரோ ஜானாதி சாரதாம் ||
கஷ்ட காலம் வரும் போது தான் ஒருவன் தனது நண்பர்கள், சொந்தங்கள், சுற்றம் ஆகியவர்களின் உண்மையான மதிப்பையும் அத்தோடு தனது சொந்த புத்திகூர்மை மற்றும் தைரியம் ஆகியவற்றையும் கஷ்டம் என்னும் கல்லில் உரைக்கும்போது உணர்கிறான்.
Man realises the real worth of friends, acquaintances and relatives as well as of his own intellect and courage (when they are rubbed) on the stone of difficulty.
*
ததேவாஸ்ய பரம் மித்ரம் யத்ர சங்க்ராமதி த்வயம் |
த்ருஷ்டே சுகம் ச துக்கம் ச ப்ரதிச்சாயேவ தர்பணே ||
ஒரு கண்ணாடியில் பார்த்தவுடன் எப்படி ஒருவன் தனது பிரதிபிம்பத்தை உடனே காண்கிறானோ அதே போல எப்போது ஒரு நண்பனிடம் சந்தோஷமும் துன்பமும் உடனே பிரதிபலிக்கிறதோ அப்படிப்பட்டவனே உண்மை நண்பனாவான்.
He is the real friend in whom both happiness and misery (of one) are reflected as soon as he is seen just like a reflection in a mirror.
*
கிமப்யஸ்தி ஸ்வபாவேன சுந்தரம் வாப்யசுந்தரம் |
யதேவ ரோசதே யஸ்மை பவேத்தத்தஸ்ய சுந்தரம் ||
தனது சொந்த இயற்கையாலேயே எதுவாவது அழகு என்றோ அழகில்லை என்றோ சொல்லக் கூடியதாக உள்ளதா என்ன? எவனுக்குப் பிடிக்கிறதோ அதுவே அவனுக்கு அழகு!
Is there anything beautiful or ugly by its own nature? That is beautiful for him who likes it.
*
ந கிஞ்சிதபி குர்வாண: சௌக்யைர்துக்கான்யபோஹதி |
தத்தஸ்ய கிமபி த்ரவ்யம் யோ ஹி யஸ்ய ப்ரியோ ஜன: ||
எதுவும் செய்யாமலேயே ஒருவன் சந்தோஷத்தை தந்து துக்கத்தை நீக்க முடியும். ஒருவனை ஒருவனுக்குப் பிடித்திருந்தால் அவனே அவனுக்கு விசேஷமானவனாகிறான்.
A person may be causing happiness and removing misery even without doing anything. A person is some special object for him who is fond of him.
*
கோ ந யாதி வஷம் லோகே முகே பிண்டேன பூரிதே |
ம்ருதங்கோ முகலேபேன கரோதி மதுரத்வனிம் ||
வாய் நிறைய உணவு இருக்கும் படி செய்யப்படும் போது எந்த ஒருவன் தான் கீழ்ப்படியாமல் இருப்பான்? மிருதங்கம் கூட அதன் மேல் இரு பக்கங்களிலும் மாவும் நீரும் கலந்த கலவை பூசப்பட்டவுடன் இனிமையான ஓசையை எழுப்புகிறது (அல்லவா?)
Who does not become obedient when (his) mouth is filled with morsels of food? Even the drum makes sweet sound if its surface is anointed (smeared)
*
English Translation by Saroja Bhate
Source : Subhasita Shatakam Thanks : Saroja Bhate
tags — சுபாஷித சதகம்